Sunday, November 16, 2025

VEENA – A GLIMPSE

 VEENA – A GLIMPSE

வீணை -ஒரு பார்வை

வீணை என்றாலே தஞ்சை தான் என்று நேர்த்தியாக நிறுவுகிறார் திரு வெங்கடேசன்,B.A  அவர்கள். வீணை தயாரிப்பில் பரம்பரையாக இயங்கிவரும் கலைஞர் இவரின் தெளிவான எளிய பக்தி கலந்த பண்பும், கூரிய நுட்பம்- கையிலும் பேச்சிலும் -நம்மை பரவசம் கொள்ள வைக்கிறது. 

திரு வெங்கடேசன் அவர்களின் இப்பதிவிற்கு, 'ஆய்வு செய்' என்று தலைப்பிட்டுள்ளனர்.you tube  பதிவு தயாரித்தவர்கள்.

அவரது [திரு வெங்கடேசன்] தகப்பனார் திரு ராதாகிருஷ்ண ஆசாரி  1947 முதல் 50 ஆண்டுகள் வீணை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர. பின்னர் மறைந்தார் என்பது புதல்வர் தந்துள்ள தகவவல். அவர்களது தொழிற்கூடத்தில் ஒரு அறைபோன்ற பகுதியில் காமாட்சி அம்மனின் திருவுருவச்சிலை கோயில் போல பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வம்மனை தொழுது வணங்கி பின்னரே வீணை தயாரிப்பில் அன்றாட பணிகள் துவங்குகின்றனர். இவர்கள் பனி புரியும் நீண்ட வராண்டா போன்ற ஒரு அறையில் சுவற்றில் திரு ராதாகிருஷ்ண ஆசாரி அவர்களின் புகைப்படம் [அவ்விடத்தில் தான் பெரியவர் திரு ராதாகிருஷ்ண ஆசாரி அமர்வாராம்] இப்போது நாங்கள் யாரும் இங்கு அமரமாட்டோம் /அமர்வதில்லை என்று புத்திரன் திரு வெங்கடேசன் தந்தையாரின் நினைவாக சில வற்றை வீடியோவில் பகிர்ந்துள்ளார். இதற்கும் வீணைக்கும் என்ன தொடர்பு என்று சிலர் கேட்கலாம். அந்நாளைய தந்தை-தனயன் குடும்ப அமைப்பை புரிந்து கொள்வதுடன், இக்குடும்பம் பாரம்பரியமாக வீணை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்தது என்பதை உணர்வுபூர்வமாக [மற்றும் எவ்வளவு சிரத்தையுடன் ஒரு தொழில் கலைஞர்] பேசுகிறார் என்பதையும் யூகிக்க முடியும்.    அத்துடன் இத்தொழில் சுருங்கி வருகிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது. எப்படி என்பதை சற்று பார்ப்போம்

பல குடும்பங்கள் வீணை தயாரித்து வந்த காலம் போய் , இப்போது சுமார் 70-80  என்ற அளவில் சுருங்கி குறைந்தும் வருகிறது. முக்கிய காரணம், இத்தொழிலில் வருமானம் குறைவு எனவே தங்கள் பிள்ளைகளை கல்வி மற்றும் வேறு வேலை என்று ஈடுபடுத்தி தங்களின் வாழ்வுக்கு மாற்று ஏற்பாடுகளை தேடுகின்றார்கள் என்கிறார் வெங்கடேசன்

திரு.வெங்கடேசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக வீணை தாயாரிப்பில் ஈடு பட்டுள்ளார். 

வீணை முழுக்க முழுக்க கைகளால் வடிவமைக்கப்படும் கருவி,

கிட்டார் வயலின் மாண்டலின் என்ற பிற நரம்புக்கருவிகளைப்போல் இயந்திரங்களால் உருவாக்கப்படுவதல்ல வீணை.

வீணை மற்றும் சில தாள வாத்திய கருவிகள் செய்ய, 'பலா 'மரம் விரும்பப்படுகிறது. இதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.  1 தமிழ் நாடு மற்றும் கேரள பகுதியில் பலா ஒரு இயற்கை கொடை . எவரும் பயிரிட்டு உருவாக்குவதாக நான் அறியவில்லை. 2 தேக்குடன் ஒப்பிட்டால் 'பலா'” விலை குறைவு . விவரமறிந்த தச்சர்கள் பலா மரத்தினை வெகு நேர்த்தியாக பயன் படுத்துவர். அதிலும் பழைய பாரம்பரியத்தில் தச்சு வேலை பயின்றோர், ஊஞ்சல் பலகை, அமரும் பலகை இவற்றிற்கு 'பலா' மரத்தினை தேர்வு செய்வர். ஏனெனில் இழைப்பதற்கு மிகவும் ஒத்துழைக்கும், பிசிறில்லாமல் மழ மழ என்ற மஞ்சள் மேனியுடன் 'பாலிஷ்' இல்லாவிடினும் பள  பளக்கும்.. கேரள தச்சர்களும் கூட தேக்கிற்கு அடுத்த நிலையில் பாலாவை ஆதரிக்கிறார்கள். இதே நற் குணங்கள்   தேக்கிற்கும் உண்டு. தேக்கின் பிரத்தியேக எண்ணை சத்து நீண்ட நெடுங்காலத்திற்கு மரம் வளையாமல் நெளியாமல் இருக்க உதவுகிறது

அதுவே தேக்கின் மணத்தின் பி ன்னணி.

தற்போதுபலா  மரங்களும் .முன்புபோல்  கிடைப்பதில்லை. எனவே கிடைத்ததைக்கொண்டு தொழில் நடக்கிறது                                              பண்ருட்டியும், புதுக்கோட்டையு ம்  இப்போதுபலா  சப்ளையில் முன்னிடம் பெறுபவை.

வீணையில் இரு பெரும் வகைகள் பேசப்படுகின்றன ,  1 ஏகாந்த வீணை  2 இணைப்பு [ஒட்டு ] வீணை.

வீணையில் 3 பாகங்கள் உள்ளன. 1 ]குடம் , 2] தண்டி என்னும் நீண்ட நடுப்பகுதி, 3] வளைவு அல்லது யாளி .இலங்கேஸ்வரன் ராவணன் காலத்திலிருந்தே வீணையின் முடிவுப்பகுதியில் யாளி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கிறார்  திரு வெங்கடேசன் .

2 ம் வகை வீணையில் பாகங்கள் 3 பகுதிகளாக செய்யப்பெற்று பின்னர் நேர்த்தியாக இணைக்கப்படுகின்றன. ஆனால் இணைப்புகள் பார்த்தால் தெரியாதபடி அமைக்கப்படுகின்றன. ஒரு வேளை மரங்கள் பெரிய வடிவில் கிடைக்காததும் கூட இந்த இணைப்பு வகை தயாரிப்பிற்கு காரணமாக இருக்கலாம். [இது எனது கற்பனையே ].

முதலாம் வகை [ஏகாந்த வீணை ] ஒரே மரத்தில் இணைப்பின்றி செய்யப்படுவது. [நீண்ட பெரிய மரம் தேவைப்படும் . ஒற்றை மரம் எனவே 'ஏகாந்தம்' [ஏகாங்கம்?] என்கிறார்கள் போலும்  .

எப்படி ஆயினும் ஒரு வீணையை உருவாக்க கடும் உழைப்பு, 25-40 நாட்கள் வரை ஆகும் என்றே தோன்றுகிறது'

மரத்தை உத்தேசமாக வீணை உருவமாக அறுத்தபின் குட பகுதியை கோடரியால் விறகு வெட்டுவது போல் வெட்டி உள்பகுதியை குளம் போல் தோண்டிய பின் பிற பகுதிகளிலும் [தண்டியிலும் யாளியின் ஒரு எல்லை வரையிலும் வாய்க்கால் போல குடைந்தெடுத்து , பின்னர் குடம் ஒரு தட்டு போன்ற மர தகடால் மூடப்படுகிறது. விரலால் தட்டி குடம் மூடி இவற்றின் நாத வெளிப்பாடுகளை சரி செய்து கொள்கிறார்கள். வீணையின் உருவம் பலவாறாக மணப்பெண் போல அலங்காரம்    செய்யப்படுகிறது. FRETS எனப்படும் நீண்ட வரிசையில் அமைந்த பித்தளை தாங்கிகளை செய்துகொடுப்போர் அவற்றை மட்டுமே செய்ய , பிற உதிரிபாகங்களை செய்யும் குடும்பங்கள் இன்று சிறிதும் பெரிதுமாக கலைஞர்கள் ஜீவனம் நடக்கிறது.. முற்றிலும் நாதம் தான் வீணையின் அம்சம் எனவே ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுப்பாடுக்களை நிர்வகிக்கிறார் வெங்கடேசன். மற்றுமோர் கைவினைஞர் திரு குணசேகரன் -குடம் வடிவம் புற அழகு இவற்றை நுணுக்கமாக செய்கிறார். எண்ணற்ற தகவல்கள் உள.

மிக முக்கியமானது வீணையை தெய்வ பக்தியுடன் தான் இயக்க முடியும் பிற கருவிகள் போல் ஆசனங்களில் அமர்ந்து இயக்க முடியாது அது ஒரு யோகா போன்றது. மேலும் 7 சக்கர நிலைகள் 1 மூலாதாரம், 2ச்வாதிஸ்தானம், 3 மணிபூரம் , 4அனாஹதம், 5 விசுத்தம், 6அஞ்ஞனம் ,7சஹஸ்ரரம் என்ற 7 நிலைகளையும் ஒருங்கிணைத்து அமரும் நிலையே வீணை இசைக்க உகந்தது என்கிறார் திரு வெங்கடேசன்

 மேலும் தான் இந்த தொழிலுக்குள் வந்ததே இறைவன் வகுத்தது, இது அனைவருக்கும் வாய்க்காது மற்றும் பெரும் கலைஞர்களுடன் பழகும் பாக்கியம் மற்றும் மகான்களின் தொடர்பு, திருவிளையாடல் திரைப்படத்தில் "பாட்டும் நானே பாவமும் நானே " பாடலில் சிவாஜி கணேசன் மீட்டிய வீணை இவர் வடிவமைத்தது    மற்றும் கிரீஸ் மியூசியத்தில் உள்ள வீணை , மேற் கு வங்க அதிகாரிக்கு செய்து கொடுத்த கோட்டு வாத்தியம் போன்ற எண்ணற்ற பெருமைகளுக்கு தகுதி உடையவர் திரு வெங்கடேசன் B.A அவர்கள். மேலும் பல தகவல்கள் அடுத்த பதிவில்

இணைப்பு கீழே

 .https://www.youtube.com/watch?v=VoiYBEyokR4 The story behind VEENA MAKING

நன்றி            அன்பன் ராமன்

1 comment:

  1. வீணை தயாரிப்பது பற்றிய விபரங்களுக்கு நன்றி.

    ReplyDelete

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...