Wednesday, January 7, 2026

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-23]

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-23]  RICHLY MELODIOUS -3           

மாலை சூடும் [நிச்சய தாம்பூலம் -1962] கண்ணதாசன், வி ரா, குரல்கள் பி சுசீலா, எம் எஸ் வி

மிகவும் நேர்த்தியான பெண் மன ப்பாடல், அற்புதமான குழைவுகளுடன் அனால் சோகமும் இழையோடும் பாவந் இசை அமைப்பில் தெரியும். அந்த நாளில் பலர் முணுமுணுத்த பாடல் . பாடலில் இறுதியில் எம் எஸ் வி பாடி யுள்ளார்.  கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=esPFTJKL4iQ maalai soodum nichaya thaamb 1962 KD VR             PS MSV

மற்றுமோர் நேர்த்தியான மெலடி

வண்ணக்கிளி [தெய்வத்தாய் 1963 ] வாலி, விஸ்வநாதன் ராமமூர்த்தி  குரல்கள் டி எம் எஸ், பி சுசீலா

சுமார் 63 வயதாகும் இந்தப்பாடல் மிகவும் சுகமான மெலடி மற்றும் சொல்லாடல் சிறப்பு . பாடலில் ஆங்காங்கே வரும் ஆலாபனை , கேரட்க மிகவும் ரம்மியம். கிட்டார் ஒலியுடன் ட்ரம் கைகோர்த்த அந்நாளைய புதுமை .

ரசிக்க இணைப்பு  

https://www.youtube.com/watch?v=0a5aEqVZa00 vannakkili [deivathaai-1963] vaali vr tms ps

துடிப்பான மெலடி 

பேசுவது கிளியா [பணத்தோட்டம் 1963] கண்ணதாசன் , வி ரா, டி எம் எஸ், சுசீலா

போங்கோ வாசிப்பில் புதிய பறவைக்கு முன்னோடி இப்பாடல் . பாடலின் துவக்கம் முதல் போங்கோ நர்த்தனம். விஸ்வநாதனின் 'ஹோய்'  என்ற பிரயோகம் இப்பாடலில் எத் தனை இடங்களில் , எத்தனை வகைகளில் வருகிறது. ஹோய் ஒலியை ஹாயாக [நினைத்தபடி ] கையாண்டு ரொமான்ஸ் விதைத்தவர் எம் எஸ் வி. பாடலின் பயணமும் வேகமும்மெலடிக்கு சிறப்பு சேர்த்ததை மறக்க இயலுமா?

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=bq7nsNE3okg pesuvadhu kiliya KD VR TMS PS BONGO HOI

 

No comments:

Post a Comment

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...