LET US SEE -2
எங்கே பார்ப்போம்-2
மனைவி அமைவதெல்லாம் [மன்மத லீலை -1976] கண்ணதாசன் எம்
எஸ் வி, கே ஜெ ஜேசுதாஸ்
பல முறை கேளுங்கள். பல
முறை கேளுங்கள். பல முறை கேளுங்கள். என்று சொல்லி தான் இப்பாடலை பற்றி கருத்து சொல்லக்கேட்டேன்.
கருத்தாவது , குருத்தாவது போய்யா என்பது போல் இருக்கும் சூழல்.
இது எதிர்பார்த்தது தான் ஏன் என்றால், நமது அன்பர்களுக்கு முக்கியமான
வேலை இப்போது மேற்காசிய போர் நிறுத்த ஒப்பந்தம் தயாரிக்க வேண்டுமென்ற
நிர்ப்பந்தம் இருக்கிறது. மேற்காசிய போர், 'மனைவி அமைவதை' விட
முக்கியமான தேவை அல்லவா? எனவே பாடல் பற்றி கவலைகொள்ள மாட்டார்கள். இவ்வாறிருக்க சென்ற பதிவில் நான் அறிவித்திருந்த படி ‘உங்கள் விடையை பொறுத்து இந்த பாடலோ வேறு பாடலோ அடுத்த பதிவில் இடம் பெற லா ம்’. .
பார்ப்போம்
. இப்பாடலின் பல பரிமாணங்களை சென்ற
வீடியோவில் அறிய முடியாத வற்றை இன்றைய வீடியோவில் அறியலாம். விருப்பமுள்ளவர்கள்
வீடியோவை பார்த்து உணர இணைப்பு இதோ.
நன்றி
https://www.youtube.com/watch?v=PnijcdEVqAQ&list=RDPnijcdEVqAQ&start_radio=1 manaivi amaivadhellaam KD NSV KJJ
இது ஒரு அசாதாரண வில்லங்கப்பாடல்.
ஆம் அவன் ஒரு பெண் பித்தன் அவன் எப்படியும் பெண்ணை
குருவி பிடிப்பது போல் வலையில் வீழ்த்தும்
வித்தகன். கவியரசர் சாதுர்யமாக பல தகவல்களை பித்தன் வாய் மொழியாகவே பேசுகிறார். ஆனால் பித்தன் காரியத்தில் குறியாக அலைகிறான்.
மணமான பெண்ணை [ஆடு நனைகிறதே என்று
வருத்தம் கொள்ளும் ஓநாய்] உத்தியை பாடி
வீழ்த்துகிறான் இறைவன்
கொடுத்தவரம்
-மனைவி அமைவதெல்லாம் என்று குடியில் வீழ்ந்த
வனுக்கு மனைவி என்ற வரம் மற்றும் கணவன் மனைவிக்கு பலன் தரவில்லை என்று அவளை அடைய முற்படுகிறான் பித்தன் . அதன் முதல் படியாக விரும்பிக்கேட்ட நேயர்கள் பட்டியலில் அவள் பெயரையும் சொல்லி அவள் தன்னை மறந்து சிரிக்கிறாள் [குருவி வலையில் சிக்கி
விட்டது என்று பாடல் உணர்த்துகிறது. . அடுத்து
இரவில் நிலவு ஒன்று உண்டு , உறவில் சுகம் ஒன்று உண்டு என்று அவளுக்கு வாய்க்காததை உணர்த்துகிறான் அதோடு மனைவியின் கனவொன்று
உண்டு --எனக்க து புரிந்தது இன்று
என்று சொல்லி 'உன் தேவையை நான் புரிந்து கொண்டேன் என்று
' தொடாமல் தொடுகிறான் பித்தன் [இவன் ஏற்கனவே மனமானவன் ]. இப்படி வலை விரிப்பதே தொழிலாய் வேறொரு
வீட்டில் பாடுகிறான் குடிகாரன் நிலையை தனக்கு சாதகமாக்கி
" பொருத்தம் உடலிலும் வேண்டும் , புரிந்தவன் துணையாக
வேண்டும் என்று பல்பொருள் உணர்த்துகிறான்.'புரிந்தவன்' என்ற சொல்லுக்கு உள்ளார்ந்த அர்த்தம் வேறு.
அதை கவிஞர் அதியற்புதமான சூழலுக்கு உபயோகித்துள்ளார்.
இதற்கிடையே இன்னொருவரின் வீட்டில் இருந்து கொண்டு ஆபீசில் ஓவர் டைம் பார்ப்பதாக புளுகி 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று போனில் உயர்த்திப்பாடி அவளை[மனைவியை] யும் பிடியில் வைத்துக்கொள்ளுகிறான் இறுதியாக
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் என்று பிரம்மாஸ்திரத்தை வீசி உன் கணவனுக்கு உன்னை
விட குடியே முக்கியம் ஆனால் நான் அப்படி அல்ல என்பதை 'அழகினைப்புரியாத பாவம் [கணவன்] அருகினில் இருந்தென்ன
லாபம்? நான் உன் அழகை ரசிப்பவன் என்று சொல்லாமல் சொல்லி
அவளின் உள்ளார்ந்த உணர்வுகளை கிளறுகிறான். மீராவின்
பாத்திரம்
போல
உனக்கு கணவன் அமைந்துள்ளான் , நீ நினைக்கும் கண்ணன் நானே என்று பித்தன் அவள்
மனதில் இடம் தேடும் காட்சிதான் இப்பாடல்.
முற்றிலும் மாறுபட்ட இசை.
பல்லவி மட்டுமே ஒரே வடிவில்.
சரணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ட்யூன்
அமைப்பில். சாதாரணமாக தெரியாது. ஆழ்ந்து கேட்டால்
தெரியும் ஒவ்வொரு சரணமும் வெவ்வேறு ட்யூன்
அமைப்பில். அதற்கு காரணம் பித்தன் பல உத்திகளாக வலை விரிப்பது தான். சான்று வேண்டுமா ?
ஒவ்வொரு சரணம் முடிந்ததும் பாடல்
நின்று பின்னர் துவங்குவது --தெரிகிறதா? ஒவ்வொரு ஸ்டெப் [step ] ஆக பித்தன் வலை விரிக்கிறான். அதனால் இடை இசை அனைத்தும் வெவ்வேறானவை. ஒன்று
போல் ஒன்றில்லை. பித்தனின் உத்திகள் பலவிதம் ஆனால் குறிக்கோள் ஒன்றே எனவே பாடல் மெதுவாக நகர்ந்தாலும்
தபலா பரபரக்கிறது ஏன் [பித்தன் மிகுந்த
துடிப்புடன் இருப்பதையும்-பெண் ,மன அதிர்வு எனும் படபடப்பையும் தபலா [அனுமந்து ] நேர்த்தியாக பேசியுள்ளது.
மெல்லிசை மன்னரா கொக்கா?
எவ்வளவு நுணுக்கம் இப்பாடலில்.? சரி இவன் என்ன பித்தனா என்று கேட்டால் பின் வரும் பாடலை கேளுங்கள் இவன் தேர்ந்த வித்தகன் என்று புரியும் எல்ஆர் ஈஸ்வரி சும்மா ஜமாய்த்துள்ளார் . பிற விவரங்கள் பின்னர்
ஹலோ மை டியர் ராங் நம்பர் https://www.youtube.com/watch?v=C9aQGlObyl4