Wednesday, May 20, 2026

MSV REMEMBERED BY Mr. AVM KUMARAN

 MSV REMEMBERED BY Mr. AVM KUMARAN

மெல்லிசை மன்னரை நினைவு கூறும் திரு குமரன் அவர்கள்

திரு வி எம் குமரன்.

வி மெய்யப்ப செட்டியாரின் புதல்வர்களில் ஒருவர் [2 ம் புதல்வர்].  இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் உண்டு. சொல்லப்போனால் அவர்கள் படங்களில் பாடல் உருவாகும் போது நிச்சயம் திரு குமரன் அவர்கள் நாட்டம் செலுத்தி நல்ல பாடல்களை வாங்கி படங்களின் வெற்றிக்கு பெரும் பங்களித்தவர். நீண்ட காலம் திரு எம் எஸ் வி யுடன் பழகியவர். எண்ணற்ற பாடல் ஆக்கங்கள் குறித்து அவர் வழங்கிய கருத்துகள் இப்பதிவில் உள்ளன . அந்நாளில் திரைப்பட துறையின் ஈடுபாடு எவ்வளவு இருந்தது என்பதை அவர் பேசப்பேச வியப்பும் மரியாதையும் அதிகரிப்பதை உணரலாம். அதிலும் சில குறிப்பிட்ட பாடல்களின் உருவாக்கத்தில் எம் எஸ் வி வழங்கிய பங்களிப்பை அவர் நேர்த்தியாக்க வெளிப்படுத்துகிறார். கேட்டு பயன் பெறலாம். அந்த நடை முறைகள் இல்லாத இன்றைய    சூழலில்  தயாரிப்பு நிறுவனங்களின் பங்கீடு இல்லாம,ல் ரெடிமேட் இசை வழங்கி பாடல்களை முற்றாக அழித்து விட்டனர். எந்த தொலைகாட்சி பாடல் நிகழ்ச்சிகளிலும் இன்றளவும் பழைய பாடல்களே முன்னிலை வகிப்பதை எவராலும் தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்" என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்க வேண்டும் என தோன்றுகிறது வீடியோ இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=YfyoRHrwnz4&t=248s AVM KUMARAN ABOUT MSV

அவளுக்கென்ன [சர்வர் சுந்தரம்] பாடல் குறித்து திரு எம் எஸ் வி சொல்வதைக்கேளுங்கள். அவரும் சில முக்கிய கருத்துகளை பகிர்கிறார். கேட்டு உணர இணை ப்பு இதோ

https://www.youtube.com/watch?v=1wZpc6YLqfE MSV ON AVALUKKENNA

நன்றி

அன்பன்

2 comments:

  1. நாகேஷாலத்தான் அவளுக்கென்ன பாடல் வெற்றிகண்டது

    ReplyDelete
  2. MSV has reached the pinnacle from a very modest position, using is inherent talent with dedication and perseverance.
    Nice to know his background in his industry. Thanks.
    Is AVM Kumaran elder brother of
    AVM Saravanan?

    ReplyDelete

RUTA GRAVEOLENS

  RUTA GRAVEOLENS [The Rue plant] [Arruda or The Herb of Grace] Tam:   arudam [naagadhaali] Mal: Aruta, Telugu: Sadapa, Hindi: Sadab Kan:...