LET US PERCEIVE THE SONG - 68
பாடலை உணர்வோம்
–68
நான் ஒரு
குழந்தை
[படகோட்டி
[1964] வாலி,
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
, டி
எம்
எஸ்
நான் பல
முறை
சொல்லியிருப்பது
போல்
1964ம்
ஆண்டு
தமிழ்
சினிமாவில்
ஒரு
விசேஷ
மைல்
கல்
, எத்துணை
படங்கள்,
வண்ணப்படங்கள்,
நட்சத்திரப்பட்டாளம்,
இயக்குனர்களின்
சிறப்பு,
படத்திற்கு
8-10 பாடல்கள்
அவை
98% வெற்றி
கண்ணதாசனும்
வாலியும்
கவிஞர்கள்
இசையில்
வி-ரா
ஒருபுறம்
மறுபுறம்
கேவி
எம்.
இன்னும்
நூறாண்டு
சென்றாலும்
அந்த
ஆளுமைகளின்
நிழல்
கூட
தோன்ற வாய்ப்பு தெரியவில்லை.
அத்துணை
படங்களும்
வரிசை
கட்டி
வெற்றி
கண்டவை,
பாடல்களும்
அவ்வாறே.
ஒரு
பாடல்
போல்
இன்னொன்று
இல்லை
அவ்வளவு
கற்பனை
ப்ரவாக
கவிதைகளும்
இசையும்,
இசைக்கோலங்களும்.
அவற்றில்
'படகோட்டி'
தனி
ரகம்.
'கற்பக'த்தில்
நுழைந்த
வாலியின்
வளர்ச்சி
"படகோட்டி"யில் கற்பகவிருட்சமென உயர்ந்து
பருத்து
கிளைத்து
பூத்துக்குலுங்கி
இமாலய
வெற்றி
எய்தியது.
படத்தில்
மொத்தம் 8
பாடல்கள்.
அதில்
இந்த
காட்சியும்
பாடலும்
வேறு
பரிமாணம்
நான் ஒரு
குழந்தை
நீ
ஒரு
குழந்தை
-டி
எம்
எஸ்
அவர்களின்
குரலில்
விறுவிறுப்பும்
துடிப்பும்
நிறைந்த
பாடல்.கட்சியில்
நாயகன்
கிழவன்
-துடிப்பான
துள்ளல்
கிழவன்,
அவன்
துடிப்பு
சொற்
கட்டிலும்
இசையிலும்
மிளிர
, இசைக்கருவிகளின்
தொகுப்பும்
அணிவகுப்பும்
பிரத்தியேக
அமைப்பில்
. கற்பனைக்கு
பஞ்சமே
இல்லாத
கம்பீர
இசை.
ஒவ்வொரு வரிக்கும்
தொடரும்
இசை
வெறெந்தப்பாடலிலும்
காணாத
தனித்தன்மையுடன்.
அது
மட்டுமா
சொல்லின்
பொருளை
தூக்கி
சுவையைக்கூட்டும்
ராக
அமைப்பு.
தயவு செய்து
பல்லவி
வரிகளாகட்டும்,
சரண
வரிகளாகட்டும்
ஒவ்வொரு
முறை
பாடும்
பொழுதும்
எண்ணற்ற
பாவ
அழுத்தங்கள்
மிளிரக்காணலாம்
.
உதாரணம்
தொடங்கிய பாதையில்
தொடந்து
வ
ரா
...........மல்
, தூரத்தில் நின் ........றால்
புரியாது
அதே போல்
ஆவி துடித்தது நானுமழைத்தேன் , நீயும்
வந்தாய்
என்
பாட்டுக்குள்ளே [முதல் முறை
] பின்னர்
பாடும்
போது
ஆ .......வி
துடித்தது நானும் அழைத்தேன் , நீயும்
வந்தாய் என் பாட்டுக்குள்ளே
[பிரித்து
பாட
வைத்துள்ளார்]
இப்படி ஓவ்வோர்
இடத்திலும்
உயர்த்தியோ,
குறைத்தோ
இடைவெளி
மாறுபாடுகளுடன்
பாட
எப்படி
கற்பனை
செய்துள்ளார்
எம்
எஸ்
வி.
எவ்வகையிலும் குறையாத
இசைக்கருவிகளின்
துள்ளல்
பங்களிப்பு
அலாதி
சுகம்
இன்னொரு
விந்தை
புரிந்துள்ளார்
எம்
எஸ்
வி
அவர்கள். பாடல் வரிகள்
நிதானம்
என்றால்
தொடரும்
இசையோ
சீறிப்பாயும்
வேங்கை
, பாடல்
வேகம்
எனில்
இசை
அமிழ்ந்து
அடங்கும்
மென்மையான
மேன்மை
. எப்படி
மாறி
மாறி
வடிவமைத்தார்
சொல்வேகத்திற்கு
சுகம்
சேர்க்கும்
இசை
யின்
இசைவு.
மன்னர்
மன்னரே
தான்.
அது
மட்டுமா
என்னென்ன
தாளக்கருவிகள்
தாளக்கட்டுகள்
, புல்லாங்குழலின்
வசீகர
ஆதிக்கம்
துரத்தி
மகிழும்
தபலா,
ஓசைக்கு
ஒலியை
மண
முடித்த
வித்தகமாய்
டோலக்
அல்லது
கோல்
[தாளம்]
என
கற்பனைச்சுரங்கம்
இப்பாடல்
. சரி
இது
என்ன
பாடல்
--கொஞ்சலா
, கெஞ்சலா
,ஊடலா,
ஓடலா
, தேடலா,
தாலாட்டா
, சீராட்டா
, பாராட்டா?
பாராட்ட சொல்
இல்லை
, மறந்திட
மனம்
இல்லை
என்ன
சொன்னாலும்
நிறைவு
என்பது
முகிழ்வதில்லை
. 1964 ம்
ஆண்டு
தமிழ்
சினிமா
இசையில்
தனி
பொன்னேடு
என்றே
சொல்ல
தோன்றுகிறது
பலமுறை கேளுங்கள் இசை அமைப்பின்
வலிமை
என்ன
என்பது
தெளிவாகும். எத்துணை இசை
கோர்வைகள்,
தாள
மாறுபாடுகள்
கருவி
தொகுப்புகள்
- 62 ஆண்டுகளுக்கு
முன்னரே
பாடலின் துவக்கத்தில்
வரும்
ஓ
ஒ
ஓ ஓ ஒ ஓ
என்ற
முத்திரை
ஆலாபனை
எதிர்பார்ப்பை
அதிகப்படுத்தக்காணலாம்.
https://www.youtube.com/watch?v=QoU3eOQfyKA
nan oru kuzhandhai vali vr tms
இதே பாடலை
QFR குழுவினர்
வழங்கியுள்ளனர்.
நல்ல
தொகுப்பு,
எனது
சகோதரர்
[COUSIN] திரு
முகுந்தன்
அவர்களின்
குமாரர்
திரு
அரவிந்த்
வெகு
நேர்த்தியாகப்பாடியுள்ளார்.
அவருக்கு
பாராட்டுகள்.
பாடலுக்கு
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=bWebYW8CmcU
nan
oru kuzhandhai Aravind Mukundan QFR 802
நன்றி அன்பன் ம வ
பாடல்களை வர்ணிப்பதில் மன்னன் ஐயா நீர்
ReplyDeleteAll songs in Padagotti are outstanding numbers ! Only.MSV can give such varieties with melody flowing right through.
ReplyDeletePls listen to the interlude melodies which mesmerises the listener. Only His finger can touch such keys unconventionally and produce a magic !! Thanks Prof, for the wonderful piece, giving me a pkeasanr morning and day !!!
இந்த பதிவின் இரண்டு பாடல்களையும் முன்னர் ரசித்திருந்தாலும் , இப்பாடல்கள் மற்றும் இசையின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து ரசிக்கும் வகையில் தொகுத்து அளித்த ஆசிரியருக்கு நன்றி. "அவ்வுலகம் சென்று வந்தேன் , அமுதம் குடித்து வந்தேன் பாடலும் நினைவிற்கு வந்தது.
ReplyDeleteஅன்புடையீர்
ReplyDelete'அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்து வந்தேன்" என்பது [காதலிக்க நேரமில்லை என்ற]பாடலில் வரும் சரணம். பாடல் நினைவுக்கு மனதில் வந்ததா உடலில் வந்ததா -இரண்டிலும் வந்ததா அம்மாடியோ .