Friday, June 26, 2026

SPECIAL COMMEMORATIVE BLOG

 SPECIAL COMMEMORATIVE BLOG

TRIBUTE TO LEGENDS  KANNADAASAN  MELLISAI MANNARGAL  24-06-26

அரசருக்கும் மன்னருக்கும் ரசிகர்களின் காணிக்கை

கவியரசர் 1981லும் மெல்லிசை மன்னர் 2015 லும் இயற்கை எய்தினர்.ஆனால் இருவரும் பாடல் வடிவியல் நாள் தோறும் நம்மிடையே உலவி வருகின்றனர் நீங்காப்புகழ் கொண்ட LEGENDS . அவர்களின் நினைவை பல்வேறு வகைகளில் ரசிகப் பெருமக்கள்   , பேருவகையுடன் கொண்டாடி வருகின்றனர். அதை பகிரும் விதமாக சனிக்கிழமை BLOG விடுமுறை என்ற நிலையை தளர்த்தி மூன்று விடீயோக்களை பகிர்ந்துள்ளேன். அன்பர்கள் சனி ஞாயிறுகளில் சர்வதேச நிகழ்வுகளுக்கு போகக்கூடும். எனினும் சற்று நேரம் ஒதுக்கி இவ்வீடியோக்களை கண்டு களிக்குமாறு வேண்டுகிறேன். சனிக்கிழமைகளில் ஏதாவது எழுதலாமே என்று அவ்வப்போது ஆலோசனை வழங்குவோரில்  , யார் யார் நாளை BLOG பதிவை பார்க்கிறார்கள் என்று அறிய ஆவல் கொண்டுள்ளேன் . ஆவலாவது,  அவலாவது  போய்யா உன் வேலையை பார்த்துக்கொண்டு என்று மூவர் கொந்தளிக்கிறார்கள்.

ஊதுகின்ற சங்கை ஊதி யாயிற்று இனி என் பங்கு வேறெதுவும் இல்லை . வீடியோ இணைப்புகள் இதோ

நன்றி அன்பன் 

  https://www.youtube.com/watch?v=cCBgepBi730  PRAKASH, ANNADURAI  ON LEGENDS’ DAY

https://www.youtube.com/watch?v=MJieE6hbCZw&list=RDMJieE6hbCZw&start_radio=1&t=589s msv spl 98 th birth day MMFA

https://www.youtube.com/watch?v=ZII2V77WfJ8 PACHAI VILAKKU VAARAATHIRUPPAALO  PRIYA PAARTHASARATHY

6 comments:

  1. நாளாம் நாளாம் திருநாளாம்
    மலர்ந்தும்மலராத பாதி மலர்
    இந்த இரண்டு பாடல்களை
    ஏன் வகழாநகள்

    ReplyDelete
  2. வகழாநகள்
    enraal enna? puriyavillai.

    ReplyDelete
  3. என்வாழ்நாள் முழுவதும்
    கேட்டுக் கொண்டிருப்பேன்

    ReplyDelete
  4. 1.தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் -அரசர் மற்றும் மன்னர் -இருவரின் ஆத்மார்த்தமான நட்பு, சாகாவரம் பெற்ற கலைப்பயணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி அவர்களின் புதல்வர்கள் நினைவுகூறும் அற்புதமான உரையாடல், தொகுப்பாளரின் வழிநடத்தல், பாடல்கள் மற்றும் ஸ்ரீநிதியின் குரல் வளம் அருமை.
    "பாடல் வந்ததும் தாளம் வந்ததா, தாளம் வந்ததும் பாடல் வந்ததா" என்ற புதிருக்கு வித்திட்ட வித்தகர்களை, சிந்தாமல் சிதறாமல், இசையால் நெஞ்சத்தை அள்ளிக்கொண்டவர்களை கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சம் மறப்பதில்லை. இணையற்ற இருவரும் ரசிகர் நினைவில் வாழும் ஆலயங்கள்
    2."கல்யாண வைபோகம்" ஒரு
    நல்ல தொகுப்பு. மணவிழா நிகழ்வுகள் எங்கள் இல்ல மணவிழாக்களை நினைவூட்டின.
    3, "வாராதிருப்பாரோ"
    இருவேறு மனநிலைகளிலிருந்து .இருவர் ஒரே மனநிலையில் இணையும் பாடலை சூழ்நிலைக்கேற்ப பாடகரின் சாரீரத்தையும் இசையையும் மாற்றுவது MSV யின் தனிச்சிறப்பு.

    நன்றி.

    ReplyDelete
  5. கருத்துகள் சிறப்பாக வெளிப்பட்டு, தொடர்ந்து பாடல்களை மாறுபட்ட கோணங்களில் பார்ப்பதால் ஏற்படும் மன ஓட்டம் உங்கள் எழுத்தில் பளிச்சிடுகிறது. எழுத முற்பட்டால் யாருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு. அதனால்தான் கருத்துகளைக்கேட்கிறேன். பலரும் அதை இடையூறாக நினைக்கின்றனர். அப்படி அல்ல, எழு த்தும் கருத்தும் ஆழம் கொள்ளும் என்பதை நிரூபிக்க உதவிய உங்களின் பங்களிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  6. தங்களின் உற்சாகமூட்டும் அறிவுரைக்கு நன்றி.

    ReplyDelete

CENTELLA ASIATICA

  CENTELLA ASIATICA    [Asian penywort / Indian penny wort] Tamil : Vallaarai, Hindi: Manduka parni, Tel: Saraswathiaaku Mal: Kodangal Kan...