CHANGING TIMES-3
கால மாற்றம்-3
கால மற்றம் என்ற தலைப்பில் இசை தட்டு மூலம் பாடல்களை
அறியும் முயற்சியில் சில பாடல்கள் வழங்கப்பட்டன. முதல் தொகுப்பில் வந்த பாடல்களுக்கான
கேள்விகள் கேட்கப்பட்டு, எதிர்பார்த்தது போலவே அமைதியே விடை ஆயிற்று. இப்படித்தான்
இது நிகழும் என்று முன்னமே சொன்ன எனக்கு வியப்பொன்றுமில்லை. அவற்றின் சில தன்மைகள்
குறித்த எனது புரிதலும் விளக்கமும் இதோ.
1 கிராமபோன் குறித்து என்ன கவனித்தீர்கள்?
வட்ட வடிவ இசைத்தட்டில் எப்படி பாடல் முன்னேறுகிறது?
நியாயமாகப்பார்த்தால் ஒரே லைனில் அல்லவா ஊசி பயணிக்க வேண்டும். அது ஏன் ? "கிராமபோன்
குறித்து என்ன கவனித்தீர்கள் ? " என்ற
கேள்வியே அதுதான்.. இசைத்தட்டை சுமந்து சுழலும் மேடை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலையை
ஆசைப்பதுபோல் ஒரு ஆட்டம் கொடுத்து தலையை நிமிர்த்தும் அப்போது ஊசி அடுத்த லைனில் நுழையும்.
இப்படியே பாடல் முழுவதையும் ஒலி பரப்பி பெரும் சாதனை செய்த கிராமபோன் , பாவம் மின்சாரம்
பேட்டரி எதுவும் இன்றி வெறும் வலுவான முறுக்கேற்றிய ஸ்பிரிங் மூலம் இயங்கியது .எனினும்
கிராமபோன் தரும் தெளிவு எந்த 'நகர' போனும் தராது.சினிமா உலகமே கிராமபோன் தந்த ஆதாரத்தில்
தான் பட்டி தொட்டி எங்கும் சென்றடைந்தது.
2 முதல் பாடல் "இனியவளே" https://www.youtube.com/watch?v=8lHIyzjfSBs INIYAVALE
இப்பாடல் துவங்கியதும் என்ன உங்களை பற்றிக்கொண்டது?
இனியவளே என்று துவங்கியும் சுசீலாவின் நேர்த்தியான ஹம்மிங் ம் ம் ம் என்று துவங்கி ஆஅ ஆ என்று வானில் மிதப்பது வீடியோவில் கூட தெளிவு படாது. அது மட்டுமா போங்கோவில் தாளம் எவ்வளவு நச் நச் என்று கேட்கிறது. ஒரு மெல்லிய குச்சியால் வாசித்திருப்பார்கள் போல் தோன்றுகிறது. ஒரு தாளக்கட்டு நிறைவேறியவுடன் வெகுவிரைவாக ஒரு மூன்று தாள ஒலிகள் முடிந்து மீண்டும் பாடலும் பாங்கோவும் கைகோர்க்க பின்னணினியில் அவ்வப்போது வெவ்வேறு தாள ஒலிகளும் வயலின்களும் பயணித்தாலும் பாடும் குரல்கள் தெள்ளத்தெளிவாக ஆதிக்கம் கொள்வதைக்காணலாம்.
ஒரு பாடலில் ரீங்கரிக்கும் இவ்வளவு தாள ஒலிகளா? இதுபற்றியெல்லாம் எம் எஸ் வி வாயே திறக்கமாட்டார். நினைத்தால் இவ்வளவு ஆளுமைக்கு எவ்வளவு அடக்கம்?. பாடலைக்கேட்கும் போதெல்லாம், 52 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு கம்பிர இசை? கண்ணீர் ஒன்று தான் விடை.
3 2 ம் பாடல்
https://www.youtube.com/watch?v=TdtTuRM7OHQ
இதில் பளீரென்று வெளிப்பட்டது என்ன?
பாடல் அமைப்பில் புதிய பரிமாணம் 1962-63 . இது போன்ற தாள ஒலிகள் தமிழ்த்திரை கேளாதது. ட்ரம்மில் துவங்கியதும் போங்கோவின் அதிரடி மிரட்டல்.அந்நாளில் தமிழ்நாட்டில் போங்கோ என்ற கருவி கேள்விப்படாத ஒன்று. அதை வாசிக்கும் கலைஞர்கள் வெகு அபூர்வம் . ஆயினும் போங்கோவை அரசபீடத்திற்கு
உயர்த்த பெரும் பங்காற்றியவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி . இந்த ஒரு பாடலை எடுத்தயெடுப்பிலேயே வெற்றிகொள்ள வைத்தது போங்கோ வாசிப்பு எனில் மிகை இல்லை அதை உலகில் புகழ்பெறச்செய்த வன்மை கிராமபோன் என்றே நான் உணர்கிறேன்
3வது பாடல் தனக்குவமை இல்லாத வடிவம் https://www.youtube.com/watch?v=ecADfl1Dncw&list=RD8lHIyzjfSBs&index=
அதை இசைத்தட்டில் உணர்வது போல் வேறு வகையில் கிடைக்காது. அப்படி என்ன உணர முடிந்தது? சொல்லுங்கள்
1963 ன் வரவு இப்பாடல் தெம்மாங்கு வகை இசை அமைப்பு. சூழலை உணர்த்தும் குழல் ஒலி அதை மேம்படுத்தும் தாளம் . நேர்த்தியான குரலில் பாடல் இயல்பான நளினத்தில் பயணிக்க கருவிகள் தொடர்ந்து நாட்டுப்புற தன்மையில் பயணிக்க ஒரு புதிய அமைப்பு அந்நாளில் . பின்னர் ஆண் குரல் துவங்கியதும் பாடலின் பரிமாணம் வேறு உயரம் தொடர மிகவும் ரம்மியமான அமைப்பில் பாடல்.போகப்போக overlap முறையில் வெவ்வேறு குரல்கள் வெவ்வேறு நிலைகளில் ஒரே நேரத்தில் பாட மிகவும் நுட்பமான இசைப்பயணம்
5 4 வது பாடல் மாறுபட்ட வடிவம் கொண்டது. https://www.youtube.com/watch?v=sRoabWMdXCc இப்பாடல் தரும் செய்தி என்ன காட்சியை அல்ல பாடல் அமைப்பில் தரும் தகவல்.
இது வேறு பாடல்களில் இல்லாத வடிவமும் கேள்வி பதில் நடையிலும் பயணிப்பது. ஆயினும் ஒரே சீரான இசை ஓட்டமும் தாளக்கட்டும் பாடலின் தனிச்சிறப்பு. கவிதையும் சிறப்பான சொல்லாடலில்
இவை தான் முதல் பதிப்பில் இடம் பெற்றவை. பிறவற்றை பின்னர்
காண்போம்
நன்றி அன்பன் ம வ .
No comments:
Post a Comment