Friday, August 21, 2026

AN ANNOUNCEMENT

                                                                     DECLARATION 

  AN ANNOUNCEMENT 

CLIMATE   AND CHANGES  THERE-IN

                                             ஒரு அறிவிப்பு

             கிளைமேட் அல்லது பருவ நிலை மாறுபாடுகள் 

 

நாம் இது குறித்து அறிந்ததை விட கவலை கொள்வதும் "மரத்தை எல்லாம் வெட்டியாச்சு , இனிமே வெந்து சாக வேண்டியது தான் " என்று த்ரிகால ஞானிகள் போல் நமது அக்கம் பக்கம் உள்ள நட்புகளிடம் அங்கலாய்ப்பது ஒரு சம கால பொழுதுபோக்கு  [contemporary entertainment .] .  ஏன் மழை பொழிகிறதுவெய்யில் காய்கிறது காற்று தோன்றி   பரவுகிறது இவற்றை ப்புரிந்து கொண்டால்வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ வகை பேச்சுகளைக்கடந்து உண்மையான   அறிவு பூர்வமான அணுகுமுறையில் பல விவரங்களை     சிறப்பாக புரிந்து கொள்ளலாம் . உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பதில் சொல்லுங்கள் .

அட போய்யா மழை பெய்தால் என்ன , வெய்யில் கொளுத் தினால் என்ன நான் அமெரிக்கா போவேன்ஆஸ்திரேலியா   போவேன் என்று முணுமுணுப்பது தெரிகிறதுஎதையாவது அறியும் ஆர்வம் இருந்தால்ஒரு அளவிற்கேனும் விளக்க முற்படலாம்.

நம்மவர் ஆர்வம் ஊரறிந்த ஒன்று அந்த டீவியில் சொல்லிவிட்டான்இந்த டீவியில் சொல்லியிருக்கிறான் என்று மேலோட்டமாக மேய்வது ஒருநாளும் உதவாதுஎனவே எதையாவது பேச வேண்டுமானால்அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேய தயார் என்றால் நிச்சயம் முயற்சி செய்யலாம்அது உங்கள் மன நிலை சார்ந்தது.. இல்லையேல் கிளி ஜோசியம் பார்த்து ஆருடம் மூலம் , அறியப்பார்க்கலாம் .

நீங்கள் என்ன  சொல்கிறீர்கள் பார்ப்போம் 

அன்பன்   

…………………………………………………………………………..

இந்தப்பதிவு வெளிவந்து எட்டு தினங்கள் ஆயிற்று. தினங்கள் என்ன திங்கள் ஆனாலும் நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம் [வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சொல்ல மாட்டோம் ] இந்த நிலையில் ஒருவன் மென்மேலும் கட்டுரை எழுத முனைந்தால் அவன் என்ன வகையினன் ?

க்ளைமேட்ட்டாவது க்ளாரினெட்டாவது என்று இருப்போருடன் எது செய்தாலும் அது  மடமை என்பதே உண்மை.

எனவே இந்நிலையில் க்ளைமேட் , எல் நினோ . லா நினா வெஸ்டர்ன்/ஈஸ்டர்ன் ஆசிலே ஷன்ஸ் என்பனவெல்லாம் நம்மவர்க்கு வேண்டாத ஒன்று. இனிமேல் இது போன்ற கட்டுரைகள் நமது blog அன்பர்களுக்கு தேவை ல்லை என்று புரிந்து கொண்டேன். இனிமேல் நான் உட்பட எவரையும் வருத்துவதாக இல்லை.  

உங்களது பேராதரவிற்கு பெரும் நன்றி.

 

அன்பன்


No comments:

Post a Comment

WILLIAM SHAKESPEARE - 9

  WILLIAM SHAKESPEARE - 9                              The day’s quotes from Shakespeare relate to ‘anger’ a well-known human response. An...