Wednesday, August 26, 2026

I perceived the song

 I perceived the song    

பாடலை உணர்ந்தேன்

“காற்று வந்தால் தலை சாயும்

அன்பர்களே

இன்றைய பதிவு 'பாடலை நான் உணர்ந்தேன்' வகை சார்ந்தது . எனது சிறிய ஆற்றலுக்குள்ளேயே பலர் பல பாடல்களை நினைகூர்வதை பார்க்கும் போது ஒவ்வொருவரும் எவ்வளவு அறிந்து வைத்திருப்பார்கள் என்று வியந்து நிற்கிறேன்

இருப்பினும் சில பாடல்களையாவது ஆழ்ந்து பார்த்தால் தமிழ் சினிமா எவ்வளவு உயரம் தொட்டிருந்தது எவ்வளவு பேராற்றல் கொண்ட மனிதர்கள் இங்கே கோலோச்சி அகில  இந்திய  அளவில் பெரும் பாராட்டும் கௌரவமும் பெற்றனர். ஆயினும் காலப்போக்கில் திரையும் இசையும் திசை மாறி  தறிகெட்டு சீரழி வது காலக்கொடுமை .

 

இன்றைய பாடல் "காற்று வந்தால் தலை சாயும்" இரண்டு முறை வெவ்வேறு காரணங்களுக்காக நானே விவாதித்திருக்கிறேன். எனினும் இன்னும் பல பரிமாணங்கள் பொதிந்துள்ள ஒரு காவியம் இப்பாடல்

இதன் திரைக்காட்சி நடிப்பின் மேன்மையை பறைசாற்ற பிறிதொரு காணொளி [வீடியோ] கவிதையின் சிறப்பையும் இசையின் ஆழ்ந்த பரிமாணங்களையும் விவரிக்க இது போன்ற திறன் களஞ்சியங்கள் ஏன் அமைதிகொண்டன என்ற கேள்வி எழாமல் இல்லை. எப்படி பார்த்தாலும் இழப்பு என்னவோ நல்ல ரசிகர்களுக்கு தான். இரண்டு வீடியோ க்களையும் பார்த்தால் எவ்வளவு தீவிர பங்களிப்பில் பாடல்கள் எழுந்தன என்பது விளங்கும். இப்பாடல் உருவாக்கத்தின்போது எவ்வளவு விரிவான கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது, கவிஞர் எப்படி ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் ஈடு கொடுத்து பாடலை வடிவமைத்தார்  இசை அமைப்பாளர்கள் எவ்வளவு நேர்த்தியாக பியானோ, கிட்டார் மற்றும் அன்றைய புதுவரவான எலெக்ட்ரிக் கிட்டார் போன்ற கருவிகளின் நுண் ஒலியை பாடலின் உயிரோட்டத்திற்கு  கையாண்டனர் போன்ற விவரங்களை சுபஸ்ரீ விளக்கியுள்ளார். மனம் உள்ளவர்கள் கேட்டு ரசியுங்கள்.  

உங்களது விளக்கங்களையோ  வியாக்கியானங்களையோ தேடி இங்கே எதுவும் சொல்லப்படவில்லை.

எனவே அவரவர் தங்களுக்கு  புரிந்தபடி பாருங்கள். ஒன்று நிச்சயம் எவ்வளவு காலம் போனாலும் இனி இது போன்ற திரை வடிவங்களும் இசை வடிவங்களையும் சல்லடைபோட்டு தேடினாலும் பலன் இல்லை.

இணைப்புகள் கீழே

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo&t=160sC kaatru vandhaal kd  vr pbs ps 1963 kaaththirundha kangal

https://www.youtube.com/watch?v=_CsfA2FmfdI QFR

நன்றி         அன்பன்  ம வ  

1 comment:

  1. கேட்டேன் ரசித்தேன் மறுபடி கேட்கத் துடித்தேன்

    ReplyDelete

I perceived the song

  I perceived the song     பாடலை உணர்ந்தேன் “காற்று வந்தால் தலை சாயும் ” அன்பர்களே இன்றைய பதிவு ' பாடலை நான் உணர்ந்தேன்...