Sunday, August 30, 2026

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST?

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST?

யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ?

இது கதை யல்ல  நிஜம் . ஆம் யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ? என்ற வீர வசனம்  பல ரௌடிகள் , போலீஸ் அதிகாரிகள், மற்றும் சில ஜெயில் நிர்வாகிகள் அடிக்கடி உதிர்க்கும் அறைகூவல்

அவை ஒரு புறம் இருக்க , உண்மையிலேயே இதை செயல் படுத்தும் எவரேனும் உண்டென்றால் அவர்கள் பாம்பும் கீரியும் தான். அதனால் தானோ என்னவோ ஆங்காங்கே குடியிருப்பு காலனிகள், பேருந்து நிலைய பகுதிகளில் வித்தை காட்டும் பலர் "எல்லோரும் உக்காருங்க சத்தம் போடாதீங்க இப்போ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடப்போறேன் . உக்காந்து பாருங்க , பாக்கெட்ல இருக்குற காசை இங்க தட்டுல இப்படி போடுங்க , ஒளிச்சுவெச்சுக்கிட்டா , ஜக்கம்மா பறிச்சுருவா ஆமாம் யாரும் போகாதீங்க , போனா ராத்திரிக்கு ரத்தம் கக்கி செத்துருவீங்க என்று டம் டம டம என்று உடுக்கை வாசித்தபடி வசூலில் இறங்குவான். சிலர் குனிந்தபடி அங்கிருந்து மெல்ல நழுவுவார்கள் . இப்படிப்போய்ட்டதால கீரியும் பாம்பும் சண்டை போடாது என்று அவனும் மூட்டையைக்கட்டிக்கொண்டு ஓடுவான். இப்படி கீரி -பாம்பு சண்டை நடக்காதாயென்று காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம். .

சண்டை என்று நடந்தால் பாம்பு இறக்கும் கீரி பெரும்பாலும் தப்பித்துவிடுவதுடன் எப்படியும் பாம்பை க்கொன்று விடும். இதில் வேடிக்கை என்ன எனில் கீரி பாம்பை கொன்றுவிட்டு போய்விடுகிறது அதை உண்பதில்லை. ஆனாலும் ஏனோ பாய்ந்து பாய்ந்து போரிடுகிறது கீரி.

உருவத்தைப்பார்த்தால் பாம்பு கீரியைவிட நீளமும் விஷமும் கொண்ட உயிரினம். கீரி  குள்ள நரியை விட சிறியது.  ஆனால் எலெக்ட்ரோனிக் ரோபோ போல் மின்னல் வேகத்தில் பாய்ந்து பாம்புடன் மோதும். கீரி பாம்பைக்கண்டு அஞ்சுவதே இல்லை. மாறாக ஆத்திரமும் ஆவேசமும் காட்டுகிறது .ஏனெனில் தாய் இல்லாத நிலையில் தனியே இருக்கும் கீரிக்குஞ்சுகளை பாம்புகள் தின்று விடுகின்றன. எனவே பாம்பைக்கண்டாலே அதை ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை என்பது போல் கீரி அசராமல் பாம்பை [எவ்வளவு பெரிதாயினும் ] எதிர்கொள்வதுடன் சுற்றிஇ சுற்றி வந்து பாம்பை அலைக்கழித்து சோர்வடையச்செய்து திடீரென்று தாக்கும். .

எவ்வளவு நீண்ட பாம்பாயினும்  கீரியின் இலக்கு [target ] பாம்பின் முக பகுதிதான், அங்கேயே தாக்கி முகத்தை சிதைக்கும் .பாம்பு அசதியுற்றதும் ஓங்கி முகத்தில் அறைந்து கீழே தள்ளி முகத்தை நன்றாக கடித்து குதறி விடும்.. பாம்பு அசதி அடைந்தது நமக்கு எப்படி தெரி யும் ? முதலில் 2 அடிக்கு மேல் எம்பி உயர்ந்து நின்ற அதே பாம்பு போகப்போக அரை அடி முக்கால் அடி எம்புவதற்கே இயலாமல் திணறும். அதுதான் தருணம் என்று கீரி வேக வேகமாக சுற்றிசுழன்று பாம்பின் வாயைக்கவ்வி புரட்டி புரட்டி இழுத்து பாம்பு உயிரிழக்க வைக்கும் அது வரை மின்னல் வேக பாய்ச்சலிலேயே பாம்பவை மிரட்டி ஓட வைக்கும். ஓடினாலும் விடாது. ஆங்கிலத்தில் FIGHT TO  FINISH என்பார்களே அப்படித்தான் கீரி செயல் படும் . . கீரி , பூனை , சிறிய குழந்தைகள் மட்டுமே பாம்புக்கு பயப்படுவதில்லை. வேறு பல மிருகங்களுக்கும் பாம்புகளை பயத்துடனேயே அணுகுபவை இரண்டு வீடியோக்கள் இணைத்துள்ளேன். பாருங்கள் சீறிப்பாயும் கீரியை . https://www.youtube.com/watch?v=w6eKEQNyjbE         mongoose tackles a big cobra

https://www.youtube.com/watch?v=43p9kG6Y4ZQ  bold cobra but bolder Mongoose

நன்றி                 அன்பன்

No comments:

Post a Comment

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST?

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST? யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ? இது கதை யல்ல   நிஜம் . ஆம் யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ? என்ற ...