Tuesday, September 8, 2026

V Generation Fighter Air craft

 V  Generation Fighter Air craft

ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

ஐந்தாம் தலை முறை போர் விமானம் என்றதும் நமக்கு பெரிதாக எதுவும் புரிவதில்லை. ஏன் எனில் இந்த 'தலைமுறை' என்பது எதைக்குறிக்கிறது என்பதே நமக்கு சரியாக தெரியவில்லை.

பொதுப்படையாக சொல்வதானால் ஒவ்வொரு மேம்பட்ட தொழில் நுட்பம், வேகமுன்னேற்றம் , தாக்கும் திறன் , ராடாரை ஏய்க்கும் வல்லமை என்று ஒவ்வொரு முன்னேற்றத்தின் போதும் அடுத்த தலைமுறை போர் விமானம் என்ற அந்தஸ்தை பெறுகிறது.

 இவ்வனைத்தையும் விட  எஞ்சின் எனும் இதயப்பகுதியின் வலிமையே போர் விமானங்களின் செயல் திறனுக்கு உரிய ஆதாரம். அவ்வகையிலும் தலைமுறை மேம்பாடு எஞ்சின் திறன் அடிப்படையிலும் விளக்கப்படுகிறது

இப்போது போர் உத்திகளிலும், கருவிகளிலும், போர் தந்திரங்களிலும் இந்தியா பெரும் முன்னேற்றம்  அடைந்திருந்தாலும் , விமான எஞ்சின் தயாரிப்பில் இன்னமும் உருப்படியாக ஒன்றும் செய்தபாடில்லை.

காரணம், நீண்ட காலமாக பொதுத்துறையின் மூலமே இது போன்ற உற்பத்திகள் நிகழ்ந்ததால், இயல்பாகவே ஒரு 'தூங்குமூஞ்சித்தனம்' நமது விமான வடிவப்பு நிறுவனத்தின்  அடையாள முத்திரை ஆகி 40 ஆண்டுகள் கடந்தும் விமான எஞ்சின் வடிவமைத்தபாடில்லை.

இதை பலரும் சுட்டிக்காட்டி இது பொதுமேடைகளில் விவாதப்பொருள் ஆன பின் தனியார் நிறுவனங்களின் பார்வையும் பங்களிப்பும் இத்துறையில் நுழைந்து விட்டது

குறிப்பாக ஐரோப்பிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இந்தியாவின் ரிலையன்ஸ்  நிறுவனமும் இனைந்து போர் விமான எஞ்சின் தயாரிப்பில் ஈடு படுவதற்கான பூர்வாங்க புரிந்துணர்வு , வடிவம் பெற்றுள்ளது. . 

இதை நிறைவேற் சுமார் 5-7 ஆண்டுகள் ஆகலாம். எனினும் 40 ஆண்டுகளை விழுங்கி ஏப்பம் விட்ட பொதுத்துறையின் மெத்தனத்தை விட இது மிகவும் மேலானது. இது குறித்த விவரங்களை மேஜர் திரு மதன் குமார் விளக்குகிறார். வீடியோவைப்பார்த்து   விவரங்களை புரிந்து கொள்வீர்

இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=L4SUfRj8usI 5G FIGHTER –INDIA’S  AIM

நன்றி  

அன்பன் 

2 comments:

  1. Wish the newly designed aircraft be successful

    ReplyDelete
  2. இது தொடர்பாக பெங்களுரு தினமலர் 24-8-2026 அன்றும் ஒரு கட்டுரை வெளிவந்துளது. அக்கட்டுரையை WhatsApp ல் காணலாம்

    ReplyDelete

I perceived the song

I perceived the song        ['Roja malare Rajakumari'] பாடலை உணர்ந்தேன் [  ' ரோஜாமலரே ராஜகுமாரி '] இது ஒரு வினோத ச...