A SONG UNIQUE BY IUMPACT
சுகத்திலும் சோகம் POSTING NO. 1851
மனா மேடை மலர்களுடன் தீபம் ஞான ஒளி ,பி சுசீலா ஞான ஒளி 1972
கண்ணதாசன்
எம் எஸ் வியின் இசையில் பிறந்து , தவழ்ந்து மிதக்கும் உணர்வைத்தரும் பாடல் இது. பாடலின் சொல்லிலும் சுவையிலும் கௌரவமும் நளினமும் மேலோங்கி நிற்க இசை வேறென்ன செய்யும். அதுவும் ஈடு கொடுத்து மெல்ல அசைந்து ஆடி நகர்ந்து நம்மை ஆட்கொள்கிறதே என்ன விந்தை இது.
பல்லவி சரணம் எங்குமே சொற்கள் தனித்தனியே பாடப்படும் உத்தியை முன்னெடுத்துள்ளார் எம் எஸ் வி. அதே நேரத்தில் பாடலில் இழையோடும் சோகம் நம்மை ஏதோ ஒரு வகையில் அசைத்துப்பார்க்கிறதே அது என்ன? அதுதான் இசை அமைப்பின் ரகசியம். அமைதியாக ஆளை வீழ்த்தும் ட்யூன். கருவிகள் கூட பெரிதும் ஆரவாரமின்றி அமைதியாக பயணிப்பது சிறப்பு. பாடலின் உணர்வையும் இழையோடும் சோகத்தையும் அதிர்ந்து உரைக்கும் ட்ரம் அதன் அதிர்வே நம்மை கட்டிப்போடும் சிறப்பு பாடலை கேளுங்கள் மனதைப்பிசையும் நுணுக்கங்கள் விளங்கும்.
அதிலும் சில ஹம்மிங் ஆலாபனைகள் நாம் வேறெங்குமே கேட்டிராத நளினம் அதுவும் சுசீலாவின் குரலில் பாடலின் பரிமாணத்தை மாற்றும் விந்தை. இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs MANAMEDAI GNAANA OLI
1972
இதே பாடல் QFR பதிவிலும் உள்ளது [அவ்வளவு ஹம்மிங் இல்லை] கேட்டு ரசியுங்கள் இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=ZCE-5BA4FD8 qfr
நன்றி அன்பன் ம
வ
No comments:
Post a Comment