Saturday, November 14, 2026

KANNADASAN’s DEXTERITY

 KANNADASAN’s  DEXTERITY

கவியரசரின் நளினம்

தமிழ் திரைப்பாடலாசிரியர்கள் பலருக்கும் அசாத்திய திறமை உண்டு என்பதில் ஐயமில்லை. அவர்களில் கண்ணதாசன் அவர்களின் அதிவேக ஊற்றெடுக்கும் கவிதை மடைக்கு இணையே இல்லை என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். அவருக்கு இலக்கியப்பரிச்சயம் வெகு ஆழமானதென்பதால் சரியான சூழலில் இலக்கிய நயங்களை மறவாமல் தொட்டுக்காட்டுவார். அது மட்டுமல்ல மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுடன் அவர் பணியாற்றிய பாடல்களில் எப்போதும் ஒரு கேள்வி எழும். இது ட்யூனுக்கு எழுதிய பாடலா /பாடலுக்கு அமைத்த ட்யூனா என்பது. பல சமயங்களில் தீர்மானமாக சொல்லவே முடியாது அவ்வளவு இயல்பான ஓட்டம் சொல்லிலும் இசையிலும். ட்யூனுக்கு எழுதிய பாடல் என்பது மீட்டருக்கு மேட்டர் ; பாடலுக்கு அமைத்த ட்யூன் எனில் அது மேட்டருக்கு மீட்டர் என்பது  எம்  எஸ் வியும் , கண்ணதாசனும் பேசிக்கொள்ளும் முறை. இவை தவிர இசை அமைப்பாளர் மொழியிலும் பேசிக்கொள்வார்கள் . என்னடா சந்ததத்துக்கா , சொந்தத்துக்கா என்பார் கவி , வந்தத்துக்கு என்னத்தையாவது எழுதுங்க என்பார் எம் எஸ் வி . ஏதாவது ஒலி  அமைப்புக்கு எழுதுவது சந்தத்துக்கு [ லா ல லா லா ல லா /ம மம மா ம ம என்றால் சந்தம் சொல்லி எழுதவைப்பது . காட்சிக்கு வேண்டியதை கவிஞரே எழுதுவது 'சொந்தத்துக்கு ' என்பது.. இப்படி எண்ணற்ற அமைப்புகளுக்கு பாடல் புனைந்து பழகிய கண்ணதாசன் வெகு விரைவாக புயல் வேகத்தில் கவிதை சொல்ல வேறு யாரவது தான் எழுதுவார். எதற்கு இந்தக்கதை என்கிறீர்களா?  இதுதான் கவிய ரசரின்  . செயல் வேகத்தின் பின்னணி.

இந்திப்பாடல் மெட்டுக்கு தமிழில் சொற்களை அடுக்கி வெகு நேர்த்தியாக எண்ணற்ற பாடல்களைப்                    படை த்தவர்    கண்ணதாசன். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பல ஹிந்தி மெட்டுக்களை அழகு தமிழில் அலங்கரித்து புகழ் கொண்டவர் கண்ணதாசன்.

அப்படி ஓர் பாடல் தான்  " நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்? இரு வல்லவர்கள் 1969 வேதா இசையில் டி எம் எஸ்  சுசீலா குரல்களில் . திரையில் ஜெய்சங்கர் விஜயலக்ஷ்மி ஜோடி . விஜயலக்ஷ்மி அற்புதமான டான்ஸர் நல்ல பயிற்சி பெற்றவர். எனினும் இவ்விருவர் பல வெற்றிப்பாடல்களில் தோன்றியவர்கள். அந்த வெற்றிக்குப்பின் இருந்தது நேர்த்தியான ட்யூன் விலகாத தமிழ்.

டி எம் எஸ் இந்தப்பாடலில் ஜெய்சங்கரையே உலவ விட்டுள்ளார் சுசீலாவும் வி. ல வுக்கு வலு சேர்த்துள்ளார். வேதா சிறிதும் பிறழாமல் ஒரிஜினல் இசை ஒலியை அச்சு அசலாக  அரங்கேற்றி ஆளுமையை நிலை நாட்டியவர்.

பாடலின் கேள்வி பதில் வெகு சிறப்பு. கேட்டு மகிழ இணைப்பு படக்காட்சி /இசைத்தட்டு வடிவில் .

மேலும் QFR பதிவில் இதே பாடலை அரவிந் முகுந்தனும் ஜானகி அவர்களும் வெகு சிறப்பாகப்பாடியுள்ளனர்.

ஒரு சிறு குறை . பாடகி ஜானகி அவர்கள் இப்பாடலில் 'பொன் வண்டொன் ட்று  மலரெண்ட்று ' என்று பாடுகிறார் பல இந்நாளைய பெண்கள் இப்படித்தான்     பட்றி [பற்றி] சுட்றி [சுற்றி] என பேசவும் பாடவும் பார்க்கிறேன். தமிழ் சிறப்பு* 'ற்றி' சேரும் பொழுது 'ட்' ஒலிக்கக்கூடாது. அது மொழியை சிதைக்கும். QFR பாடலுக்கான இணைப்பும் கீழே

*

அதை திருத்திக்கொள்வது எப்படி ?   பற்றி , சுற்றி, வெற்றி  என்று அழகாக ஒலி க்க வேண்டிய கவனம் இருந்தால்

 பேசும் /பாடும் பொழுது  நாக்கு சற்று மேலெழும்பி  மேல் வரிசைப்பல்லும் அதன் ஈறும் இணையும் பகுதியில் தொட்டு பாட / பேச  தமிழ்  செம்மையாக ஒலிக்கும்.

மாறாக

பற்றி , சுற்றி, வெற்றி  போன்ற சொற்களை ஏன்  தவறாக நாராசமாக  சு ட் றி , பட் றி , வெட் றி என்று பாடவோ பேசவோ நேருகிறது என்றால்

இந்த சொற்களை உச்சரிக்கும் போது , நாக்கு அதிகம் மேலெழும்பி அண்ணம் என்னும் மேல்  பகுதியை தொடுவதால்  சுற்றி -சுட் றி , பற்றி -பட் றி ம் வெற்றி- வெட்றி என்றே தவறாக ஒலிக்கிறது என்பதையும் தாண்டி தமிழின் நளினம் சீர் குலைகிறது. விருப்பமுள்ளோர் கண்ணாடி முன் நின்று பார்த்து தவறை நிறுத்திக்கொள்ளுங்கள். முடியாதவர்கள் பாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=56lqJUAoAp8 nan malarodu

https://www.youtube.com/watch?v=9qeJRGq5CHo  record

https://www.youtube.com/watch?v=yMYulB7fE_o NAN MALARODU QFR  ARAVIND –Janaki

*

நன்றி அன்பன் மவ

No comments:

Post a Comment

KANNADASAN’s DEXTERITY

  KANNADASAN’s   DEXTERITY கவியரசரின் நளினம் தமிழ் திரைப்பாடலாசிரியர்கள் பலருக்கும் அசாத்திய திறமை உண்டு என்பதில் ஐயமில்லை . அவ...