Wednesday, January 1, 2025

TM SOUNDARARAJAN-36

 TM SOUNDARARAJAN-36

டி எம் சௌந்தரராஜன்-36

ஓர்  ஆயிரம் பார்வையிலே [வல்லவனுக்கு வல்லவன் - 1964] கண்ணதாசன் வேதா , டி எம் எஸ்

பாடலும் குரலும் இசையின் மென்மையும் ஒருங்கிணைந்த காவிய சோகம் . வேதாவின் இசையில் டி.எம்.எஸ் மெய்யுருகப்பாடி , காட்சிக்கு பெரும் வலு சேர்த்த கவிதை.

 அசோகன், மணிமாலா [வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி] பங்கு கொண்ட காட்சி . பாடல் ஹிந்தி அமைப்பு எனினும் கவிஞரும் வேதா வும் நிறைய உழைத்ததுள்ளனர் ஹிந்தி ட்யூனுக்கு தமிழில் சொல் வடித்த கண்ணதாசன், இசை இம்மி விலகாமல் அடியொற்றிய வேதா, பாவமும் உணர்வும் குன்றாமல் பாடிய டி எம் எஸ் என இப்பாடலின் வலிமைகள் ஏராளம்  கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=oraayiram+paarvaiyile+un+paarvaiyai+video+song&oq=oraayiram+paarvaiyile+un+paarvaiyai+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRifBTIHCAUQIRifBTIHCAYQIRifBTIHCAcQIRifBTIHCAgQIRiPAtIBCTI4MDQ5ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:8faa0c40,vid:21uJOHpy0O4,st:0 or 1000 paarvaiyile vallanukku vallavan kd vedha tms 1965

முஹம்மது ரஃபியின்  குரலில் [இசை ரவி ] ஒலித்த மூல ப்பாடல் இதோ

https://www.google.com/search?q=saubaari+zanam+lenge+hindi+song+video+download&newwindow=1&sca_esv=0635d3d6759e2514&sxsrf=ADLYWIJYi9QrB-1qInUzwzDywfCUlpFg4A%3A1735711339068&ei=a9p0Z9vdA5KC4-EP3veYiAk&oq=saubaari+zanam+lenge+hindi+song+video+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJnNhdWJhYXJpIHphbmFtIGxlbmdlIGhpbmRpIHNvbmcgdmlkZW8gKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAE hindi song

மாசிலா நிலவே [அம்பிகாபதி -1957]. கு. மா பாலசுப்ரமணியன் , ஜி ராமநாதன் , டி எம் எஸ், பானுமதி

இப்போது ஏன் இந்தப்பாடல்?. இந்தப்பாடல் இளம் டி எம் எஸ்ஸின் மந்திரக்குரல் விந்தைகள் புரிந்து இசை ஜாம்பவான் ஜி ராமநாதனின் பேரன்பைப்பெற்ற ஆரம்பகாலப்பாடல்களில் முக்கியத்துவம் பெற்றது. ஜி ஆர் தான் டி எம் எஸ் அவர்களை தமிழ்திரையில் இசைத்துறையில் வேரூன்ற வைத்தவர். [தியாகராஜ பாகவதருக்கு பின் அமைந்த ஒரே வெண்கல குரல் டி எம் எஸ் தான் என்பது ஜி ஆர் அவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அதற்கேற்ப டி எம் எஸ் அவர்களுக்கு ஜி ஆர் வழங்கிய பாடல்கள் பெரும் நுணுக்கங்கள் நிறைந்தவை. அப்படி ஓர் பாடல் தான் மாசிலா நிலவே [அம்பிகாபதி -1957] ராகமும் இசையு ம் எவ்வளவு நெளிவு சுளிவுடன் பயணிக்கின்றன. இசை சொல்லவே வேண்டாம். எனினும் சுத்த ராக நடையில் பாடல்களை அமைப்பதில் ஜி ஆர் ஒரு ஜாம்பவான் என்பதை திரை உலகம் இப்போதும் நினைவு கூறும் . கேட்க கேட் தெவிட்டாத ராக நடை மற்றும் எளிய கருவிகள் தோற்றுவித்த மனம்கவரும் ஒலிக்கோர்வை என்று ஒரே பாடலில் எத்துணை நளினங்கள். கவிஞர் கு மா பா வின் சொல்லாடலும் வசீகரமானதே . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=maasilaa+nilave+nam+kaadhalai+video+song+download&newwindow=1&sca_esv=0635d3d6759e2514&sxsrf=ADLYWILoNwW6aMkL0Ia8WakNR_XAacepeA%3A1735712110697&ei=bt10Z9mhKoiZseMPuLCcmQg&oq=maasilaa+nilave+nam+kaadhalai+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKW1hYXNpbGFhIG5pbGF2ZSBuYW0ga2FhZGhhbGFpIHZpZGVvIHNvbmcgKgIIADIHECEYoAEYCjIH ambigapathi 1957 ku ma baala , g r , tms baanumathi

இப்பாடலை அணு அணுவாய் ரசித்துப்பேசும் சுபஸ்ரீ அவர்களின் கருத்தையும், குழுவினரின் பாடலையும் கேட்டு மகிழ இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=UMRHYdssjI8 qfr maasila nilave ambigapathy GR KUMAA BAL TMS PS

பொன்னெழில் பூத்தது புது வானில், [கலங்கரை விளக்கம் 1965-66] பஞ்சு அருணாச்சலம், எம் எஸ் விஸ்வநாதன், டி எம் எஸ் பி சுசீலா 

நரசிம்ம வர்ம பல்லவன்  காலத்து நாயகியாய் 'சிவகாமி சிவகாமி 'என்று விளி த்து துவங்கி, என்று நாயகி பதில் குரல் எழுப்பி அழிக்கவொண்ணா இடம் பிடித்த கலங்கரை விளக்கம் படப்பாடல் -. இப்படத்தின் தலைப்பு பலருக்கும்      [எம் ஜி ஆர், சரோஜாதேவி, பஞ்சு அருணாச்சலம் , எம் எஸ் வி உள்ளிட்ட] அனைவருக்குமே இது கலங்கரை விளக்கம் எனில் மிகை அன்று. இப்படம் அப்படி ஒரு சிறப்புக்குரியது .

ஆயிற்று விஸ்வநாதனின் இசைப்பயணம் முடிந்து விட்டது என்று பரப்பிக்கொண்டிருந்த பலரையும் மூச்சுவிட முடியாமல் திணறவைத்த பாடல்கள் நிறைந்த படம் கலங்கரை விளக்கம். ஆம் ராமமூர்த்தி-விஸ்வநாதன் பிரிவுக்குப்பின், எம் எஸ் விக்கு அமைந்த முதல் எம் ஜி யார் படம் இதுவே. பாடல்களில் பட்டையைக்கிளப்பினார் எம் எஸ் வி. அதிலும் இப்பாடல் ஒரு இசைச்சுரங்கம் எனில் மிகை அல்ல. ஆம் வெகு நேர்த்தியான ராக அமைப்பில் பாடல் வெகு நளினமாக உணர்வுகளை சுமந்து செல்வது ஒரு அறிய அனுபவம். பாடல் துவங்கியதுமே 'நான் எங்கேடா போய்ட்டேன் " என்று எம் எஸ்விகேட்பது போல்அவரின்  குழுவினர் இழைத்த வயலின் தொகுப்பிசையையும், தொடர்ந்து பாடலுடன் நெருக்கமாக ஒலித்த காங்கோ ஒலியையும் நெஞ்சை விட்டு அகலாத கம்பீர அமைப்பில் வழங்கியுள்ளார் எம் எஸ் வி. பாடலில் அவரின் இசை முத்திரைகள் ஏராளம். ஒவ்வொரு சொல்லையும் அதனைத்தொடரும் இசையையும் வெகு கவனமாக செதுக்கியுள்ளார் எம் எஸ் வி..

 காதலும் ஊடலும் தவழ்ந்தாலும் சோகமும் இழையோடுவது இசை அமைப்பின் வலிமை. பாடல் நிறைவுறும் போது ஏதோ ஒரு இழப்பை நாம் உணர்வது ஒவ்வொரு முறை பாடலைக்கேட்கும் போதும் நம்மைப் பீடிக்கக்காணலாம். அற்புதமான பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=aU4M0bdlcXc

kalangarai vilakkam 1966 panju Arunachalam MSV TMS PS 

தொடரும்                                 அன்பன் ராமன்

Tuesday, December 31, 2024

LET US PERCEIVE THE SONG-3

 LET US PERCEIVE THE SONG-3 

பாடலை உணர்வோம்  - 3

திரு எம் எஸ் வி அவர்களின் இசை அமைப்பு பற்றிய அடிப்படை பண்பு என பேச விழைந்தால்,  இரு தெளிவான கருத்துகளை முன் வைக்கலாம். அவை 1 . சொல்லுக்கு அவர் தரும் உயரிய இடம் காரணமாக , பாவம் எனும் உணர்ச்சி மேலிட பாட வைப்பது

2. பாவம் முன்னிலை வகிப்பினும்,இசையின் வலிமையை வெகு நேர்த்தியாக கள ப்படுத்தும்   ஒலி  ஆளுமை திரு எம் எஸ் வி அவர்களின் தனிச்சிறப்பு. பாடல்களை அணு அணுவாக ரசிக்கும் மனம் கொண்டோர் கண்டிப்பாக எம் எஸ் வி யின் பிரத்தியேக அணுகுமுறைகளை வெகுவாக ரசிப்பர் என்பது திண்ணம். அதாவது திரு எம் எஸ் வி யின் இசை அமைப்பில் மிக முக்கிய அங்கம் பாவம் என்று நாம் அறிவோம்; எனினும் அந்த பாவத்தின் தன்மையை மேம்படுத்த விசேஷ ட்யூன் அமைப்பை நிறுவி, பாடலின் ஈர்ப்பினை சிறப்பாக மேம்படுத்துவதில் வெகு இயல்பான அணுகுமுறையும், புறந்தள்ளமுடியாத ஒலிக்கலவையும் பின்னிப்பிணைந்து கேட்போரை வசீகரிக்கும் வகையில் அமைத்திருப்பார் எம் எஸ் வி அவர்கள். .

 அதிலும் குறிப்பாக இசைக்கருவிகள் அனைத்தையும் மீட்டல் எனும் மனித முயற்சியால் ஒலிக்க செய்து அவற்றின் தனித்தன்மைகளை நாம் உணரும்படி ஒலிக்க வைத்ததினால் அந்நாளில் 1960 களில் மெல்லிசைக்குழு எனில் அது வி ராவின் குழு என்னும் அளவிற்கு புகழ் பெற்றது.   வெகு சிறப்பாக பாடல்களில் இசைக்கருவிகளின் ஒலி ஆதிக்கம் மிகச்சரியான அளவிலேயே வழங்கப்பட்டு தென் இந்தியப்படங்களிலும் ஹிந்திப்படங்களுக்கு இணையான ஒலித்தொகுப்புகள் வெளிவரத்துவங்கி வி -ரா இசையின் மாண்பு தேசிய அளவில் பேசப்பட்டது.    இவ்வனைத்தும் பல படங்களிலும் படிப்படியாக அங்கம் வகிக்க, இசையில் சில மைல்கற்கள் தமிழ் திரைப்பாடல்களில் தோன்றி அனைவர் மத்தியிலும் பேசுபொருள் ஆயிற்று. அதாவது ஒலிக்கலவை என்னும் பண்பின் சிறப்பே பாடும் குரலை வீழ்த்தாமல், அதற்கு அனுசரணையாக இயக்கப்பட்ட கருவிகளின் நளின ஒலி சூழலுக்கேற்ப ஓங்கியோ ஒடுங்கியோ இயங்கி பாடல்களுக்கு அற்புதமான ஆதரவு வழங்கியது , பெரும் ஒலிப்புரட்சி நிகழ்ந்தது 1960 களில் வந்த தமிழ் திரை பாடல்களில் என்று தயங்காமல் கூறலாம் .

அப்படி ஓர் பாடல் தான் "ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை -பணத்தோட்டம் 1963 கண்ணதாசன் வி ரா, பி சுசீலா 

ஒரு விரகதாபப்பாடல் . பெண் குரலில், போதுமே மன்னர் உத்திகளை உலவ விடுவதற்கு. எத்துணை நுணுக்கம் இசை அமைப்பில் --சொல்லி மாளாது. 

எத்துணையோ பாடல்கள் போல், இதிலும் சொல்லின் பொருளே ட்யூனின் கட்டமைப்புக்கு உதவும் என்று நிரூபித்திருக்கிறார் மெல்லிசைமன்னர். அதற்கு ஏற்ப சொற்கட்டுகள் கண்ணதாசனின் சொல்லாடலில் வெளிப்பட இந்தப்பாடல் ஒரு முதுமொழிக்கு   இலக்கணமாய் திகழ்வது புரிகிறது "நெய்க்கு தொன்னை ஆதாரமா ?தொன்னைக்கு நெய்   ஆதாரமா ? வகை கவிதை -இசை கை கோர்த்து உணர்ச்சிக்குவியலாய் மிளிர்ந்த பாடல் என்பதை உணர முடியும். காதலனைக்காணாமல் ஏங்கும் பெண் பாடுவதாக அமைக்கப்பெற்ற காட்சி , அதற்கு பாடலே சாட்சி இசையே அத்தாட்சி என ஒரு உதாரணம் இது.

பாடல் சொல்வதென்ன? அல்லது கண்ணதாசன் சொல்வதென்ன? என்று பாmர்ப்போம்

இந்த இணைப்பில் உள்ள பாடலை நன்கு கவனியுங்கள். சொல்லாடலின் சிறப்பை வெகு நுணுக்கமாகக் கேளுங்கள்.  மேலும் ஒவ்வொரு சொல்லும் எப்படி நகர்த்தப்படுகிறதென்று மிக உன்னிப்பாய் கவனித்து , இசை அமைப்பின்/ இசை அமைப்பாளரின் கவனம் எங்கெல்லாம் செலுத்தப்பட்டிருக்கிறதென்று புரிந்து கொள்ளுங்கள். இவற்றை செய்ய பல முறை பாடலை கேட்க வேண்டி வரும். கேளுங்கள் , அப்போது புரியும் கவித்துவமும் இசையின் மேன்மையும் சொல்லின் மென்மையும் இணைந்தியங்கும் போது பாடலின் பரிமாணமும் தாக்கமும் பன்மடங்கு அதிகரிக்கக்காணலாம் . பிரத்தியேகமாக வீணை/ MANDOLIN, சரோட் கருவிகள் பாடலின் சோக ரச உணர்விற்கு,  துணை நிற்பதையும் கேளுங்கள். இப்பாடலும் ஒரு விவாத மேடைக்கு உகந்த பொருள். வியத்தகு வித்தகங்கள் ஒரே பாடலில் இணைவது சாதாரண நிகழ்வன்று.

எனது அடுத்த பதிவில்  பாடலின் பன்முகத்தன்மை விரிவாக அலசப்படும், அதுவரை நீங்களே பலமுறை கேட்டு உங்கள் உணர்விலேயே எண்ணற்ற நுணுக்கங்கங்களைக்காண இயலும்.

Please follow “SAKIYA ASHOK” LINK in the list below to get the FULL SONG

 

https://www.google.com/search?q=tamil+song+oru+naal+iravil+video+song&newwindow=1&sca_esv=8ac1468d33ede1ee&sxsrf=ADLYWIJkZMJh9XExKpPNIAYSp26h4jmKVA:1734923317250&ei=NdRoZ9mBD9WX4-EPjfiW0Qw&start=10&sa=N&sstk=ATObxK6CXpBXDnQ6BvxpYzImLtt1V3ehwwnLslejc2tuInhfFhw4KaNEcjWZqW6YRL-z_x2Ig6mHbR0okQSRpho_CTFmEqSct_55CA&ved=2ahUKEwiZ8KWA9byKAxXVyzgGHQ28JcoQ8tMDegQICRAE&biw=1600&bih=773&d

தொடரும்

அன்பன் ராமன்

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...