Tuesday, December 31, 2024

LET US PERCEIVE THE SONG-3

 LET US PERCEIVE THE SONG-3 

பாடலை உணர்வோம்  - 3

திரு எம் எஸ் வி அவர்களின் இசை அமைப்பு பற்றிய அடிப்படை பண்பு என பேச விழைந்தால்,  இரு தெளிவான கருத்துகளை முன் வைக்கலாம். அவை 1 . சொல்லுக்கு அவர் தரும் உயரிய இடம் காரணமாக , பாவம் எனும் உணர்ச்சி மேலிட பாட வைப்பது

2. பாவம் முன்னிலை வகிப்பினும்,இசையின் வலிமையை வெகு நேர்த்தியாக கள ப்படுத்தும்   ஒலி  ஆளுமை திரு எம் எஸ் வி அவர்களின் தனிச்சிறப்பு. பாடல்களை அணு அணுவாக ரசிக்கும் மனம் கொண்டோர் கண்டிப்பாக எம் எஸ் வி யின் பிரத்தியேக அணுகுமுறைகளை வெகுவாக ரசிப்பர் என்பது திண்ணம். அதாவது திரு எம் எஸ் வி யின் இசை அமைப்பில் மிக முக்கிய அங்கம் பாவம் என்று நாம் அறிவோம்; எனினும் அந்த பாவத்தின் தன்மையை மேம்படுத்த விசேஷ ட்யூன் அமைப்பை நிறுவி, பாடலின் ஈர்ப்பினை சிறப்பாக மேம்படுத்துவதில் வெகு இயல்பான அணுகுமுறையும், புறந்தள்ளமுடியாத ஒலிக்கலவையும் பின்னிப்பிணைந்து கேட்போரை வசீகரிக்கும் வகையில் அமைத்திருப்பார் எம் எஸ் வி அவர்கள். .

 அதிலும் குறிப்பாக இசைக்கருவிகள் அனைத்தையும் மீட்டல் எனும் மனித முயற்சியால் ஒலிக்க செய்து அவற்றின் தனித்தன்மைகளை நாம் உணரும்படி ஒலிக்க வைத்ததினால் அந்நாளில் 1960 களில் மெல்லிசைக்குழு எனில் அது வி ராவின் குழு என்னும் அளவிற்கு புகழ் பெற்றது.   வெகு சிறப்பாக பாடல்களில் இசைக்கருவிகளின் ஒலி ஆதிக்கம் மிகச்சரியான அளவிலேயே வழங்கப்பட்டு தென் இந்தியப்படங்களிலும் ஹிந்திப்படங்களுக்கு இணையான ஒலித்தொகுப்புகள் வெளிவரத்துவங்கி வி -ரா இசையின் மாண்பு தேசிய அளவில் பேசப்பட்டது.    இவ்வனைத்தும் பல படங்களிலும் படிப்படியாக அங்கம் வகிக்க, இசையில் சில மைல்கற்கள் தமிழ் திரைப்பாடல்களில் தோன்றி அனைவர் மத்தியிலும் பேசுபொருள் ஆயிற்று. அதாவது ஒலிக்கலவை என்னும் பண்பின் சிறப்பே பாடும் குரலை வீழ்த்தாமல், அதற்கு அனுசரணையாக இயக்கப்பட்ட கருவிகளின் நளின ஒலி சூழலுக்கேற்ப ஓங்கியோ ஒடுங்கியோ இயங்கி பாடல்களுக்கு அற்புதமான ஆதரவு வழங்கியது , பெரும் ஒலிப்புரட்சி நிகழ்ந்தது 1960 களில் வந்த தமிழ் திரை பாடல்களில் என்று தயங்காமல் கூறலாம் .

அப்படி ஓர் பாடல் தான் "ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை -பணத்தோட்டம் 1963 கண்ணதாசன் வி ரா, பி சுசீலா 

ஒரு விரகதாபப்பாடல் . பெண் குரலில், போதுமே மன்னர் உத்திகளை உலவ விடுவதற்கு. எத்துணை நுணுக்கம் இசை அமைப்பில் --சொல்லி மாளாது. 

எத்துணையோ பாடல்கள் போல், இதிலும் சொல்லின் பொருளே ட்யூனின் கட்டமைப்புக்கு உதவும் என்று நிரூபித்திருக்கிறார் மெல்லிசைமன்னர். அதற்கு ஏற்ப சொற்கட்டுகள் கண்ணதாசனின் சொல்லாடலில் வெளிப்பட இந்தப்பாடல் ஒரு முதுமொழிக்கு   இலக்கணமாய் திகழ்வது புரிகிறது "நெய்க்கு தொன்னை ஆதாரமா ?தொன்னைக்கு நெய்   ஆதாரமா ? வகை கவிதை -இசை கை கோர்த்து உணர்ச்சிக்குவியலாய் மிளிர்ந்த பாடல் என்பதை உணர முடியும். காதலனைக்காணாமல் ஏங்கும் பெண் பாடுவதாக அமைக்கப்பெற்ற காட்சி , அதற்கு பாடலே சாட்சி இசையே அத்தாட்சி என ஒரு உதாரணம் இது.

பாடல் சொல்வதென்ன? அல்லது கண்ணதாசன் சொல்வதென்ன? என்று பாmர்ப்போம்

இந்த இணைப்பில் உள்ள பாடலை நன்கு கவனியுங்கள். சொல்லாடலின் சிறப்பை வெகு நுணுக்கமாகக் கேளுங்கள்.  மேலும் ஒவ்வொரு சொல்லும் எப்படி நகர்த்தப்படுகிறதென்று மிக உன்னிப்பாய் கவனித்து , இசை அமைப்பின்/ இசை அமைப்பாளரின் கவனம் எங்கெல்லாம் செலுத்தப்பட்டிருக்கிறதென்று புரிந்து கொள்ளுங்கள். இவற்றை செய்ய பல முறை பாடலை கேட்க வேண்டி வரும். கேளுங்கள் , அப்போது புரியும் கவித்துவமும் இசையின் மேன்மையும் சொல்லின் மென்மையும் இணைந்தியங்கும் போது பாடலின் பரிமாணமும் தாக்கமும் பன்மடங்கு அதிகரிக்கக்காணலாம் . பிரத்தியேகமாக வீணை/ MANDOLIN, சரோட் கருவிகள் பாடலின் சோக ரச உணர்விற்கு,  துணை நிற்பதையும் கேளுங்கள். இப்பாடலும் ஒரு விவாத மேடைக்கு உகந்த பொருள். வியத்தகு வித்தகங்கள் ஒரே பாடலில் இணைவது சாதாரண நிகழ்வன்று.

எனது அடுத்த பதிவில்  பாடலின் பன்முகத்தன்மை விரிவாக அலசப்படும், அதுவரை நீங்களே பலமுறை கேட்டு உங்கள் உணர்விலேயே எண்ணற்ற நுணுக்கங்கங்களைக்காண இயலும்.

Please follow “SAKIYA ASHOK” LINK in the list below to get the FULL SONG

 

https://www.google.com/search?q=tamil+song+oru+naal+iravil+video+song&newwindow=1&sca_esv=8ac1468d33ede1ee&sxsrf=ADLYWIJkZMJh9XExKpPNIAYSp26h4jmKVA:1734923317250&ei=NdRoZ9mBD9WX4-EPjfiW0Qw&start=10&sa=N&sstk=ATObxK6CXpBXDnQ6BvxpYzImLtt1V3ehwwnLslejc2tuInhfFhw4KaNEcjWZqW6YRL-z_x2Ig6mHbR0okQSRpho_CTFmEqSct_55CA&ved=2ahUKEwiZ8KWA9byKAxXVyzgGHQ28JcoQ8tMDegQICRAE&biw=1600&bih=773&d

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

IS IT A MEAN ITEM? ASS / DONKEY -2

  IS IT A MEAN    ITEM?   ASS / DONKEY    -2 In response to the previous posting on the same topic,   Prof.   Dr   K.Venkatraman had opine...