Monday, December 30, 2024

G PAY JEEVAA

G  PAY JEEVAA                          

ஜீ -பே -ஜீவா

அது ஒரு வளர்ந்து வரும் ஊர் ;மக்கள் மிகவும் அன்புடனும் ஒருவருக்கு ஒருவர் உதவும் பண்புடனும் ஒரு "மாதிரி" [model town]  ஊர் எனும்படி முன்னேறி வந்து கொண்டிருந்த சிற்றூர். அவ்வூரின் சிறுவன் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் . ஜீவா மிகவும் பண்பும் ஒழுக்கமும் கடைபிடிப்பவன் ; ஜீவாவின் தந்தை ஜீவாவுக்கு 5 வயது இருந்தபோது மறைந்துவிட்டார், அவர் செருப்பு செப்பனிடும் தொழிலாளி. எனவே ஜீவாவும் சிறுவயதுமுதலே செருப்பு தைத்தல் பற்றி நன்கு அறிந்துவைத்திருப்பவன். பரம்பரை நிலம் என்பது போல பஜார் தெருவில் தான் ஜீவாவின் செருப்பு தைக்கும் இடம் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கடை என்பது காலை 7.00 க்கு துவங்கி மாலை இருட்டத்துவங்கியதும  மறைந்து விடும். விளக்கு வசதி , ஏன் மேலே கூரை கூட கிடையாது.. ஆனால் கடை இருந்த இடம் சரியான மூலை . 3 சாலை பிரிவுகள் சந்திக்கும் இடம் . அங்கே ஒரு சிமெண்ட் சுவர் போல சுமார் 3 1/2 அடி உயரம் உள்ள சுவர் , முன்புறம் அரசியல் வாதி கேசவ மூர்த்தி இந்த        தெருவிளக்கை நிறுவினார்  என்று விளம்பரமாக இருக்க , அதை ஒட்டிய இடம் தான் ஜீவாவின் 'கடை'.  

 அந்த விளம்பர சுவர் மீது ஒரு போர்வை யின்  ஒரு   விளிம்பு விரித்து 3 செங்கல் வைத்து , மறு விளிம்பின் இரு முனைகளையும் ஒவ்வொரு மூங்கில் குச்சியில் பிணைத்து அவை ஒரு 3 அடி இடைவழியில் நடப்பட்டு -இவ்வளவு தான் கடை. ஒரு சிறிய ட்ராவல் BAG ;அதில் தான் நூல், குத்தூசிகள், 2,3 பிரஷ் , 2பாலிஷ், ஒரு சிறிய குப்பியில் தேங்காய் எண்ணை [ஜிப் சரிசெய்ய] ஜிப் ரைடர்கள் 5, 6, மெழுகு, சிறிய வகை பக்கிள்ஸ் என செருப்பு ஆக்சஸரீஸ் வைத்திருப்பான் ; மாலையில் அனைத்தும் அந்த பையில் புகுந்து விடும் , அதை வீட்டிற்கு கொண்டு போ ய் விடுவான் ; மூங்கில் குச்சி ?  அவற்றை எதிர்புறம் இருந்த நடேச முதலியார் [நாட்டு வைத்தியர் ] [வைத்தியம் பகலில் தான் ] கடை மாலை 6 மணிக்கு மூடப்படும் . அந்த கடையின் கொலாப் சிபிள் கதவு இடுக்கில் நுழைத்து மூங்கில் குச்சி கள்.  தரையோடு தரையாய் இருக்கும்படி  வைத்து விடுவான் , வெளியில் வைத்தால் மூங்கில் குச்சி மாயமாகும் .  சரி  யாரும் ஜீவாவை கடிந்து கொள்ள மாட்டார்களா எனில் நிச்சயம் மாட்டார்கள் . தினமும் காலையில் ஒரு 5-6 கடைகளுக்கு வாசல் தெளித்து கோலமிடுபவன் ஜீவா , நாட்டு வைத்தியர், டைலர் ரஹீம், கூரியர் ஏஜென்சி வெங்கடாச்சலம், ஹோட்டல் துர்காபவன் கோவிந்த ராவ்  , துணிக்கடை செல்லப்பன் என அனைவரும் ஜீவாவின் நலனில் அக்கறை உடையவர்கள். அவர்கள் அவ்வப்போது ஜீவாவிற்கு சிறிய உதவிகள் செய்வர். இவன் கோலமிட்ட நாளில் தொழில் சிறப்பாக நடப்பதாக  ஆழ்ந்து உணர்ந்தவர்கள். அதிலும் துர்காபவன் கோவிந்த ராவ்  பலநாட்கள் ஜீவா, தங்கை, தாயார் மூவருக்கும் பசியாற உணவு தரும் புண்ணியவான்.ஏனையோர் தத்தம் வகையில் உதவுவர்- ஜீவாவின் பண்பு அப்படி. இதைத்தான் நாம் இறையருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்

1 comment:

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...