LET US PERCEIVE THE SONG -59
பாடலை உணர்வோம் -59
தங்க ரதம் வந்தது [கலைக்கோயில் 1964] கண்ணதாசன் வி- ரா , சுசீலா பாலமுரளிகிருஷ்ணா.
எப்படிப்பார்த்தாலும் இது ஒரு ஒரு யுகப்பாடல் . என்ன யுகப்பாடலா என்கிறீர்களா ? ஆம் யுக புருஷர்கள் போல யுகப்பாடல் என்பவை எப்போதாவது தோன்றி , எப்போதும் வசீகரிப்பன. அப்படி ஒன்று தான் 'தங்க ரதம் வந்தது வீதியிலே' என்ற கண்ணதாசனின் பாடல். .
வர்ணனைகளை விளக்கவோ சொல்லவோ ஞானம் தேவை, அது அடியேனுக்கு இல்லாத ஒன்று ஆயினும் பாடலை கேட்க கேட்க மேலும் கேட்க தூண்டும் வகை இசைக்கோர்வை , குரல்களின் நளினம் மற்றும் சங்கீத சங்கதிகள். -அனைத்தும் தீஞ்சுவை .
வீணையின் நாதம் கொண்டு துவங்கி மனங்களின் லயிப்பில் மிதக்கும் சொல்லாடல் மற்றும் இசையின் நேர்த்தி. தபலாவில் தான் எவ்வளவு நிதானம் , கேட்டு ரசிப்பதே மனம் விரும்பும் வாய்ப்பு. 'மாங்கனிக்கன்னத்தில் ' என்ற சரண வரியை பாலமுரளி எடுப்பதைக்கேட்கவே அலாதி சுகம்.
சுசீலா என்ன சளைத்தவரா ? செவ்விளநீரின் கண் திறந்து , செம்மாதுளையின் மணி வாய் பிளந்து ' என்ற பொழுதிலும், முளைவிடும் செந்நெல் கோலமிட்டு ..மூவர் உலா வந்த காலங்கள் போல என்னும் இடங்களில் எந்த வித்வானையும் இடதுகையால் தூக்கி சாப்பிடும் அனாயாசம் சுசீலாவின் குரலிலும் ப்ருக்கா களிலும் -சொல்லி மாளாது.
எம் எஸ் விக்கு கர்நாடக இசை அந்நியம் என்று சிலர் பிதற்றியதை எப்படி ஏற்பது.? ஆபோகியை பிழிந்து சொட்டச்சொட்டவழி நெடுகிலும் படர விட்ட இசை அமைப்பாளர் அல்லவா.? ஓவ்வோர் கருவியையும் உயிர்ப்போடு கையாள்வது என்பது எம் எஸ் வி ஜனன காலத்திலேயே வாங்கிவந்த அப்பழுக்கில்லாத வரம். ஒரு சுவையான தகவல்
பாடல் பதிவு முடிந்ததும் பாலமுரளி எம் எஸ் வியிடம் இன்னொரு தடவை நன்றாகப்பாடிவிடுகிறே னே , சுசீலா வெகு சிறப்பாகப்பாடி விட்டார் அதற்கு ஈடு கொடுக்க தான் கேட்கிறேன் என்று கோரிக்கை வைக்க, எம் எஸ் வி இல்லை நீங்கள் வெகு சிறப்பாகப்பாடியிருக்கிறீர்கள் , நிச்சயம் பாடல் வெற்றிபெறும் என்று ஊக்கம் சொல்லி அனுப்பிவைத்தார் என்று அந்நாளில் கேள்விப்பட்டதுண்டு. எதுவாயினும் இது காலத்தை வென்று களத்தில் நிற்கும் சங்கீத சாம்ராஜ்யம் எனில் மிகை அல்ல.
பாடலுக்கு இணைப்பு இதோ
TAMIL OLD--Thanga ratham vanthathu(vMv)--KALAI KOVIL -
YouTube
இப்பாடலின் பல்வேறு
தன்மைகளை
விளக்கும் QFR
பதிவு
இதோ
https://www.youtube.com/watch?v=pcy-qAPGwi4
QFR 226
எம் எஸ்
வி
யுடன்
பயணித்த
திரு
அன
ந்து
அவர்களின்
‘தங்க
ரத்தம்’ பாடல்
குறித்த
விளக்கம்
இதோ
https://www.youtube.com/watch?v=-YmcPXN6O08&t=5s thangaradham Ananthu
No comments:
Post a Comment