Wednesday, March 4, 2026

OUR PRIDE

 OUR PRIDE

நமது பெருமை

KANNADASAN

கண்ணதாசன்

தமிழ் திரை கவிஞர்கள் பலர் இருப்பினும் கண்ணதாசன் எண்ணற்ற சிறப்புகளைக்கொண்ட பெருமைக்கு  சொந்தக்காரர் . அவர்தம் வாழ்வில் பல்வேறு சுவையான நிகழ்வுகள். அவை அவ்வப்போது காற்றில் வந்த செய்திகள் ஒரு புறம் இருப்பினும் , அவரது புதல்வர் திரு அண்ணாதுரை பல தகவல்களை பகிர்வது பலருக்கு மகிழ்ச்சியையும் மலைப்பையும் தரக்கூடும். எனினும் கேட்டு அறிதல் என்றும் ஒரு சுகானுபவம் அப்படி ஒரு சந்தர்ப்பம் இது. இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=Yp2iV5re-N0

Arthamulla hindhu madham

L R ESWARI

எல் ஆர் ஈஸ்வரி

பாடகிகளில் எல் ஆர் ஈஸ்வரி மிகுந்த ஆளுமையும் அடக்கவொண்ணாத கம்பீரமும் காட்டுபவர். வெகு நேர்த்தியாக காதல்/ காம ரசம் சொட்டச்சொட்ட பாடும் வித்தாகி. ஆனால் எவரேனும் எல்லை கடந்து பேசினால் அடித்து துவைக்கவும் தயங்கமாட்டார்.அந்நாளில் கல்லூரி மாணவர்களையே மிரட்டி உட்காரவைத்த சம்பவங்கள் உண்டு. அதுவல்ல நமது பகுதி. 

நான் அவரை ராட்சசி என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளேன். அதன் பொருள் யாதெனில் கம்பீரம் பாவம் குன்றாத நளின உச்சரிப்பு , சொல் சுத்தம் அசாத்திய வேகம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வனைத்தையும் கடந்து 60 ஆண்டுகளுக்குப்பின்னும் எந்தப்பாடலையும் நினைவில் இருந்து தவறில்லாமல்             சிறப்பாக ப்பாடும்  அனாயாச கம்பீரம் மற்றும் அதியற்புத டைமிங் இவற்றில் ஈஸ்வரி ஒரு சரியான அடையாளம். ஆதாரம் வேண்டுவோர் இந்தப்பாடலைக்கேளுங்கள், துபாய் இசை நிகழ்ச்சியில் எவ்வளவு துள்ளலும் துல்லியமும், தபாலாவை விஞ்சும் வேகமும் சுறுசுறுப்பும்காட்டியுள்ளார்       கண்டு உணர இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=KvxpqivA0Gk&list=RDKvxpqivA0Gk&start_radio=1 lr eswari [Monstrous singing]

 

No comments:

Post a Comment

WILLIAM BLAKE -5

  WILLIAM BLAKE -5                     Quotes-5 The tigers of wrath are wiser than the horses of instruction This quote chooses Tiger an...