Tuesday, September 13, 2022

கவியரங்கத்தில் கருத்துப்பேழை

 

             கவியரங்கத்தில் கருத்துப்பேழை

                     மாடே  மாடே

                       எனதருமை மாடே

                        ருமை மாடே   

                     உன்பால் எமதுயிர்  [உன்மீதுஉயிரையே வைத்திருக்கிறேன்]

                            உன்   பால் எமதுயிர்   [ எங்கள் உயிர் காப்பது  உனது பால்] 

                                                                                                    என்று விளக்க அரங்கமே அதிர்ந்தது]     

                            மாடே  மாடே

                        எனதருமை மாடே

                           எந்தன் வீடே

                          உந்தன் நாடே

                    என் நாட்டு,சாணக்கியன் நீ [சாணத்தில் புரண்டு ஐக்கியம் ஆனதால் ]

                       சாக்ரடீஸும் நீயே   [புண்ணாக்கு சாக்குகளை புரட்டிப்போடுவதால் ]

                           நீயோ கொம்பன்

                     வம்பில்லா  கொம்பன்

                         நாமோ கொம்பில்லா வம்பர்                             

                வம்பனக்குதவும் கொம்பா

                              நீ  நீடூழி வாழி                -- கவிஞர்    பால் மாடன் 

          இக்கவிதையை பாராட்டிய அரசியல் வாதி, சமகாலகவிதை ஆக்கங்களில் அடித்தட்டு மனிதனின் உள்ளக்கிடக்கை பரவி-விரவிட வலு சேர்க்கும், இக்கவியை ஊக்குவிக்க விரைவில் அரசு விழாவில் பொற்கிழி வழங்கி தமிழகத்தின் பெருமை தனை பறை சாற்ற வேண்டும் என மிகுந்த கரவொலிக்கிடையே அறிவித்தார். ஊடகங்கள் அரசியல் வாதியின் அறிவுக்கூர்மையை 5 நாட்களுக்கு, அடுத்த அரசு விழா வரும் வரை கொண்டாடி மகிழ்ந்தன. என்னே வளர்ச்சி தமிழகத்தில்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் .               

          Prof. K. Raman       

 

 

3 comments:

  1. This could be one of the best entries in events like 'Chennai Sangamam'. Keep an eye for 'Call-for-entries'.

    ReplyDelete
  2. கவியரங்கத்தில் கவிபாட வந்த மாடே
    உன்பால் அன்பு கொண்டாலும் உன் பால் கொழுப்புடைத்து
    ஆதலின்பசும்பாலே எமது உயிர்
    என் வீட்டுக்கொட்டிலில்
    கொட்டிக்கிடக்குது சாணி
    நீ சாணக்கியன்தான்
    உன்சாணிதான் உரம் சேர்க்கும்
    நீ கொம்பன் என்று தம்பட்டம் அடிக்காதே
    கொம்புள்ள மான்
    அந்தமானே கண்ணுக்கு அழகு
    K.Venkataraman

    ReplyDelete
  3. கவியரங்கங்கங்கள் மட்டுமல்ல பட்டிமன்றங்களும் கலாசார சீரழிவாக மாறி நாட்கள் பல ஓடிவிட்டன. ஒரு கவியரங்கத்தில் தன்னை இந்திரன் சந்திரன் என அனைத்துக் கவிஞர்களும்(?) புகழுவதை சற்றும் கூச்சமின்றி ஒரு முன்னாள் முதல்வர் ரசித்துக்கொண்டிருந்ததை டிவியில் பார்த்தபோது நான்தான் நெளிந்தேன்.நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே என்று கவித்துவமாக சினிமாவுக்கு கூட பாடல் எழுதிய கண்ணதாசனும் கவிஞர் இவர்களும் கவிஞர்களா? வேதனைதான்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...