Wednesday, March 11, 2026

MELLISAI -A grand dimension

 MELLISAI  -A  grand dimension

மெல்லிசையின் பெரும் பரிமாணங்கள்

இவ்வளவு ஆண்டுகளாக திரைப்பாடல்களை நாம் அறிந்திருந்தாலும், அவற்றின் பல வகை பரிமாணங்களை நாம் அறிந்தோமா / ஆய்ந்தோமா எனில் நேரடி விடை கிடைப்பது அரிது. ஏன் எனில் பாடலில் எந்த குறிப்பிட்ட அம்சம் நம்மை ஆட்கொள்கிறது என்ற கேள்விக்கு விடை தரும் அளவிற்கு தெளிவுள்ள நபர்கள் வெகு சிலரே. அது ஏன் எனில் நம்மை ஈர்த்தது எது என்பதற்கு நமக்கே ஒரு தீர்மானமான  முடிவு எட்டாக்கனி . அப்படி எனில் இது ஆம் /இல்லை என்ற இரு நிலைகளையும் நாம் உணர்வது என்ற வினோத சூழல் தான் காரணம். கிட்டத்தட்ட ஏன் அந்த நபரை காதலித்தாய் ? என்று கேட்டால் பதில் எளிதில் கிடைக்காது ஏன் எனில் காதல் வயப்பட்டவர்கள் பலரும் "அழகு" என்ற அடையாளம் இல்லாத சாதாரண நபர்கள் தாம். எனவே 'ஈர்ப்பு' என்ற ஒற்றை பண்புதான் பலரை ஆட்கொள்கிறது.

திரைப்பாடல்கள் வெளிப்படுத்தும் ஈர்ப்பு அம்சங்கள், கவிதை, குரல், அமைப்பு, இசையின் ஒருங்கிணைப்பு , கருவிகளின் கூட்டியக்கம் என்ற பல காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே இவை பாடல் என்ற ஒரு பொருளுக்கானது. இவ்வனைத்தையும் தாண்டி, காட்சி அமைப்பு, திரையில் தோன்றும் பிம்பத்தின் உருவம் தரும் மயக்கம் என பிற காரணிகளால் பாடல் வெற்றி பெரும் நிலை உண்டு.

எவ்வளவோ தத்துவார்த்த நிலைகளை புரிந்துகொள்ள முயன்றாலும், அவ்வனைத்திலும் பாடலின் இயல்பான ஓட்டமும் நளினமும் எடுத்த எடுப்பில் மனங்களை வசீகரிப்பன.. இதுதான் ட்யூன் என்று பொதுவாக அறியப்படுவது. பாடலை காதில் நுழைப்பது ட்யூன் தான். ட்யூன் அழகாக இருந்தால் மேலும் மேலும் கேட்கத்தூண்டும். கேட்டுக்கேட்டு பாடல் மனனம் ஆகிவிடும். அப்போது கவிதையில் உள்ள நயம் ஆய்வுக்குட்படும். இதற்கு  அடுத்த   நிலையில் நம் கவன த்தை ஈர்ப்பது  இசைக்கருவிகளின் பங்களிப்பு. வயலின் புல்லாங்குழல் நாதஸ்வரம் மேளம் தவிர பிற கருவிகளின் பெயர் சரிவர தெரியாததால், அவற்றை யாராவது விளக்கினால் தான் நமது உணர்வுக்கு எட்டும். அந்த அளவு ஈர்ப்பும் , ஒலி  அமைப்பின் . வித்தகங்கள் பல்வேறு கோணங்களில் மிளிர்வதால் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழும். அப்படி தொடர்ந்து புதுமைகளை அரங்கேற்றும் இசை அமைப்பாளர்கள் , இசையை வெவேறு கோணம், பரிமாணம், வியாபகம் என்ற எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போய் ப்ரமிக்கத்தக்க ஆளுமை என்று பெருமையை எய்துகின்றனர். அவ்வகையில் 1960 களில் பட்டையை கிளப்பிய இசை விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் முத்திரை கொண்ட மெல்லிசை எனில் தவறல்ல. பின்னாளில் மென்மேலும் எல்லைகளை விரிவாக்கினார் திரு.எம் எஸ் விஸ்வநாதன்.  அவரது இசை அமைப்பின் நுணுக்கங்களை திரு என் ஒய் முரளி அவர்கள் தீவிரமாக விவாதிக்கிறார்.

எண்ணற்ற தன்மைகளை முறையான உதாரணங்கள் கொண்டு அழகாக விளக்குகிறார் திரு என் ஒய் முரளி அவர்கள். அவ்விளக்கங்கள் நமது பார்வையை மேம் படுத்தும் எனவே ஆழ்ந்து கவனியுங்கள், விடீயோவிற்கான இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=FNqQRCDdI_A A GRAND DIMENSION OF MSV  NYM describes.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

MELLISAI -A grand dimension

  MELLISAI   -A   grand dimension மெல்லிசையின் பெரும் பரிமாணங்கள் இவ்வளவு ஆண்டுகளாக திரைப்பாடல்களை நாம் அறிந்திருந்தாலும் , அவற்ற...