Tuesday, March 10, 2026

LET US PERCEIVE THE SONG -60

 LET US PERCEIVE THE SONG -60

பாடலை உணர்வோம் -60

 பாடல்கள் திரையில் தத்துவம் பேசுவது அவ்வப்போது அமைவது தான். ஆயினும் காட்சியுடன் இணைந்த வகை எனில் பின்னணிப்பாடகர்கள் பாடுவது இயல்பு. இது காட்சியில் இணைந்த பாடலே எனினும் , இதை மெல்லிசை மன்னரே பாடியுள்ளார் [ஒரு வேளை சி வி ராஜேந்திரன் கேட்டுக்கொண்டாரோ என்னவோ].  ஆனால் இப்பாடல் மிகவும் நுணுக்கமான உணர்வுகளை சுமந்து வருவதால் அதை எம் எஸ் வி கையிலெடுத்து குரல் கொடுத்ததால் பாவங்கள் வெகு நேர்த்தியாக ஒலிக்கக்கேட்கலாம் .

வாழ்க்கையே ஒரு சுமை என்ற நிலையில் தவிக்கும் மனம் இது போன்ற தத்துவங்களால் சற்று அமைதியுறும்/ குறைந்த பட்சம் தொடர்ந்து வாழத்தலைப்படும். அப்படியான சொற்கள் இப்பாடலில் ஏராளம்

பல்லவியிலேயே

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே

இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு  மகளே   என்று சொல்லும் கவி [வாலி]

                                        மனதிற்கு தெம்பூட்டும் வகையில்

மனித குல ம்  வாழ்வதிந்த தத்துவத்திலே

அனுபவத்தில் எழுதிவைத்தார் புத்தகத்திலே

பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும்

தாய் இனத்தினிலே

பிறந்தவரில் நீ ஒருத்தி ஆயிரத்திலே

பல்லவி

அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே

அன்னையைப்போல் அன்பிற்கும் அவனிடத்திலே

மகளே உன் மனக்குறையை அவனிடம் கூறு

கருணைக்குத்தான் கடவுள் என்று மற்றொரு பேரு

பல்லவி

தந்தை மறைந்துவிட்டார் ஆனால் மகன் பிறந்துள்ளான் இனி அவனே உனக்கு எல்லாம் என்பதை

அம்மா உன் வேதனைக்கோர் எல்லை வந்தது

சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ

நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ 

 

பல்லவி

இவ்வாறு பாடல் பயணிக்க கேட்பவருக்கு மனம் அமைதிகொள்ளும் அடக்கமான இசை .

இதுபோன்ற பாடல்கள் திரு எம் எஸ் வி குரலில் கேட்டால் உணர்வுகள் நன்கு உணரப்படும்

பாடலைக்கேட்டு அறிய இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=EwsaFvrw5sY inbathilum thunbathilum msv

எம் எஸ் வியை அப்படியே பிரதிபலிக்கும் திரு அனந்து  மேடையில் வழங்கியுள்ள பாடல் இதோ

https://www.youtube.com/watch?v=zzyBbkGc5q4 ANANTHU ON STAGE

1988 ம் ஆண்டில் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேயர் விருப்பமாக தி ரு எம் எஸ் வி அவர்கள் வழங்கிய இதே பாடல்.

https://www.youtube.com/watch?v=CnowqjmiqnA MSV

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

AUTOBIOGRAPHY [Equus asinus] - 2

  AUTOBIOGRAPHY   [ Equus asinus ] - 2 என்   சுயசரிதை -2 ஹலோ நான் கழுதை பேசுகிறேன் .. Blog   எழுதும் திரு ம வ சொன்னது சரிதான்...