BY ANOTHER LOOK
வேறொரு நோக்கில்
அத்தான் என் அத்தான்
என்னது மீண்டும் இதே பாடலா என்று சிலர் துவள க்கூடும்.. தேவை இல்லை ஏன் எனில் இப்பாடல் குறித்து திரு அண்ணா துரை கண்ணதாசன் சில
தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவற்றில் சில நமது புரிதலில் இருந்து
சற்று மாறு பட்டுள்ளது. பரவாயில்லை. ஆனால்
இப்பாடல் 6 ஆண்டுகளுக்குப்பின்
ராக அமைப்பு, இசை அமைப்பு என்ற
அலங்காரங்கள் பெற்று திரைக்குள் நுழைந்தது என்ற
பாடலின் வயது குறித்த ஒரு தகவல் கவனத்திற்குரியது. இப்பாடலின் ட்யூன் பற்றி திரு ஏ வி மெய்யப்ப செட்டியார் என்னய்யா இவ்வளவு
மெல்ல நகர்கிறது வார்த்தைகளுக்கு நடுவில் வெளியே போய் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு வந்து விடலாம் போலிருக்கிறதே
என்று சலிப்புற்றதாக அந்நாளிலே யே கேள்விப்பட்டதுண்டு.
சரி திரு ஏ வி எம் ஏன் கருத்துச்சொன்னார் என்று சிலர் நினைக்கக்கூடும்.
உண்மை என்னவெனில் திரு பீம் சிங் +செட்டியார் இருவரும் கூட்டாக
தயாரித்த படம் பாவ மன்னிப்பு.[1961]
திரு செட்டியார் சொன்ன கருத்து உணர்த்துவது என்ன?
அன்றைய தமிழ் சினிமாவில் இவ்வளவு
'பனி போன்ற மெல்ல படர்ந்து பரவிய
' பாடல் அதற்கு முன் இல்லை. அது ஏன் ? இது மனம் பேசும் மொழி அதுவும் பெண் பேசும் . காதல் வயப்பட்ட சொல்லாடல்;
அந்நாளையப்பெண் தயங்கி
தயங்கி மனம் திறக்கிறாள். எனவே சொல் வெளிப்படவே நேரம் தேவைப்படுவதாக இசை அமைப்பு உணர்த்துகிறது.
இவ்விடங்களை திரு அண்ணாதுரை அவர்கள் வெகுவாக
சிலாகித்து விவரித்துள்ளார்.
அவை ஒரு புறம் எனினும் இவ்வளவு
நிதானமாக ஏன் ஒரு ட்யூனை பிடித்தார் எம் எஸ் வி எனில் "டேய் இந்தப்பாட்டு தாளத்துல உக்கார மாட்டேங்குது என்று
பிற இசை அமைப்பாளர்கள் சொன்னதாக கவியரசு, விஸ்வநாதனிடம் சொல்லி
அதனை உள்வாங்கிய மன்னர் தாளத்தை தவிர்க்கவே
இப்படி ஒரு வழிமுறையைப்பிடித்தாரோ என்று சிந்திக்கத்தூண்டுகிறது. எப்படியோ மாபெரும் வெற்றிப்பாடலை படைத்து
அன்றைய தமிழ் சினிமா இசை அமைப்பாளர்களை அசர வைத்த வித்தகர் எம் எஸ் வி
அது மட்டுமா அன்றைய சூழலில் அக்கார்டியன், க்ளாரினெட் இரண்டையும் இழைய விட்டு ஒரு கிறங்கடிக்கும் ஒலியை படரவிட்டு சரண வரிகளில் ஒரு புதிய உயிர்ப்பை விதைத்த பாங்கினை என்னென்பது.
அவ்வளவு ஏன்? இந்திப்பாடகி லதாமங்கேஷ்கர், இப்பாடலை வெகுவாக வியந்து
பாராட்டியது அன்றைய தமிழ் சினிமாவில் பெரும்
பெருமைக்குரிய நிலை.
இப்படி பல பெருமைகளை பெறத்தான் இந்தப்பாடல்
வரன் குதிராத பெண் போல நீண்ட நாள் காத்திருந்ததோ? எப்படியோ முடிவில் சரியான
இடத்தை சென்றடைந்தது இப்பாடலின் அருகதைக்கு கிடைத்த
மிகச்சரியான அங்கீகாரம்.
இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=I8aFB6sCZPs Annadurai Kannadaasan on Aththaan en aththan
இவ்வளவு மென்மையான பாடலின் அதனினும்
மென்மையான இசையின் வலிமையான பண்புகளை ஆழ்ந்து
உணர்ந்து விளக்குகிறார் சுபஸ்ரீ அவர்கள் ; இதுவும்
ஒரு புதிய பதிவு [QFR -710] இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=c_kW2o7LVCM
QFR NEW PRESENTATION OF ATHAAN EN ATHAAN
Nice posting !
ReplyDeleteBoth Annadurai and Subasri spoke very well about the nuances of the song. What a creation by KD MSV Bhimsingh !!!