Thursday, September 15, 2022

கோவிந்தா கோவிந்தா

                   கோவிந்தா கோவிந்தா

ஆஹ், இது என்ன திருப்பதியா? இல்லை இல்லை, இப்போதும் திருவரங்கம் [ஸ்ரீரங்கம்] தான். இப்போது கழுகு வடக்கு வாசல் அருகில் ஒரு சந்தை நோக்கி போய்க்கொண்டே  கோவிந்தா கோவிந்தா என்று கத்திக்கொண்டே போனது. காலை 7.00 மணி . அந்த சந்தில் தான் கோவிந்தசாமி [அதான் பூக்காரர்] வாசம் செய்கிறார். அவரை இன்று உண்டு இல்லை என்று செய்கிறேன் பார் என்று சூளுரைத்துக்கொண்டே கோவிந்தா இப்ப நீ கோவிந்தா என்று கோவிந்தசாமியின் வீட்டை தேடியது . இப்போது சரியாக அடையாளம் தெரியவில்லை. உத்தேசமாக அந்த வீட்டருகில் இருந்த ஒரு பெண், வாசல் தெளித்துக்கொண்டிருந்தாள். அம்மா, இங்க பூ விக்கற கோவிந்தசாமி வீடு எது என்று கேட்டார். ஐயோ சாமி அவரு இங்கேருந்து போய் 3 மாசம் இருக்குமே. அவரு கீழ வாசல் ஐ ஸ்கூல் பக்கத்துல சுப்பிரமணி சந்துல இருக்காரு. இப்ப காந்தி மார்க்கெட் பக்கம் போயிருப்பாரே , ஆனா அவர் வீடு அங்கதான் என்றாள் அந்தப்பெண். சரி உம்  பேர் என்ன என்றது கழுகு. அவள் வெட்கம் வந்தவளாக ஹி , ஹி லாவண்யா என்று வீட்டுக்குள் ஓடி விட்டாள் [ தேவலயே , அம்புஜத்தை விட இவ பேர் நன்னாருக்கே என்று கற்பனையில் சிறகடித்தார். இனிமே போய் பேர மாத்திவெக்கலான்னா அடிக்க வருவா , நேத்திக்குத்தான் வேற விறகு வாங்கிப்போட்டிருக்கு. இப்பதான் டேனியேலுக்கு வேற அழுதுட்டு வந்திருக்கு, ஜாக்கிரதையா இருக்கணும். இவை அனைத்தும் soliloquy வகை உள்மனக்குமுறல்/ குரல். ராமசாமி கற்பனை வளம் மிகுந்த ஆசாமி. தாற்காலிகமாக கோவிந்தசாமி கழுகின் மனத்திரையிலிருந்து அகன்றார் என்று தோன்றுகிறது, ஆனால் நம்ப முடியாது. ஏனென்றால் இன்று second Saturday;   ஒருவேளை கோவிந்தசாமி தான் ராமசாமியின் இன்றைய அசைன்மெண்டோ என்னவோ. கழுகு கழுகு தான் என்று பாடத்தோன்றுகிறது]. கோவிந்தசாமி யின் நினைவு வந்துவிட, மார்க்கெட்டுக்கா போற உனக்கு மார்க்கெட்டே இல்லாம பண்றேன் பார்  என்று மனதுக்குள் கருவிக்கொண்டு பாக்கெட்டை துழாவியது ஒரு 50-60 ரூபாய் தேறும், ஒரு மசால் தோசையும், குண்டன் கடையில் காபியும் சாப்பிட்டுவிட்டு போவோம். சனிக்கிழமை தோறும் அம்புஜம் சஹஸ்ரநாமம் சொல்லிட்டுதான் அடுப்பே மூட்டுவாள்; ஏதாவது கேட்டா இன்னிக்கு லீவு தானே என்று சண்டைக்கு வருவாள். காபி சாப்பிட்டால் தான் நல்ல ஐடியா வரும் என்று கழுகு ராஜகோபுரம் நோக்கிப்பறந்தது.                                                           என்ன ஆச்சரியம், கோவிந்தசாமி குண்டன் கடையில் வடையை கடித்துக்கொண்டே “வாங்க சாமி” என்றான். கழுகுக்கு சுரீர் என்று நினைவு வந்தது ஆஹ் இவன் கோவிந்தசாமி தானே என்று. “ம்ம் வாய்யா கோவிந்தசாமி உனக்கு வேற வேலையே இல்லையா? கஷ்ட ஜீவனம் பண்றாயே , நீ வீட்டுக்கு பூ போடுன்னா, நீ பிட்டு போடறயா”. கோவிந்தசாமி திகைத்துப்போய் “என்ன சொல்லறீங்க” என்றான். “சொல்றேன் உங்க வீட்டுலயே வந்து ஒன்னோட ஆத்துக்காரி கிட்ட நீ பண்ற வேலையெல்லாம் சொல்றேன்--  நீ இதோட கோவிந்தா”.  “ஐயோ சாமி ஒன்னும் சொல்லிடாதீங்க, தப்புதான் நான் சும்மாருந்தாலும் அந்தப்பொண்ணுதான் என் மேல ஆசைப்பட்டு சினிமாவுக்கு, சர்க்கசுக்குனு கூப்புடுது, அடிக்கடி போனப்போட்டு, ஆசை வார்த்தையெல்லாம் பேசுது,  என்ன செய்ய சொல்றீங்க , நான் சொன்னாலும் கேட்க மாட்டேங்குது”--என்று கழுகுக்கு தெரிந்துவிட்டது என்று நினைத்து காலில் விழாத குறையாக கெஞ்சினான் . கழுகு அசகாய சூரனாயிற்றே , சரி, இவனை இந்தகொக்கியை வைத்து அவ்வப்போது மிரட்ட வேண்டியது தான் என்று முடிவு செய்து. “ம்ம் இத்தனை திருட்டுத்தனம் பண்ணிண்டு நல்லவன் மாதிரி bit போடுறயா” என்று மிரட்ட, கோவிந்தசாமி , “சாமி காபி சாப்புடுங்க” என்றான்; “அதுக்குத்தான் நான் வந்திருக்கேன், எப்ப காபி சாப்பிடம் னு எனக்கு தெரியும்”. ‘சாமி என்ன மாட்டி விட்ராதீங்க , தனம்    கொன்னே போட்ருவா’ என்று நடுங்கினான். “சரி என்ன மீறி ஏதாவது பண்ணின நீ நிச்சயம் கோவிந்தா” என்றது கழுகு. ‘சாமி உங்கள மீறி நான் ஒன்னும் செய்ய மாட்டேன்’ என்று பெரிய கும்பிடு போட்டான். “சரி சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் போயிட்டு வா” என்று அவனை எச்சரித்தார் கழுகு ராமசாமி. கழுகுக்கு பயங்கர அதிர்ஷ்டம்          பேரா. ராமன் .

1 comment:

  1. கழுகாருக்கு வயசு வந்தாலும் ஆசை போகலை. அம்புஜத்தை மறந்து லாவண்யாமேல ஒரு கண் போகுதே.
    உமக்கே கோவிந்தா போடற நேரம் வந்துடுத்து. ஆத்துக்குப்போம், அம்புஜம் வாரியக்கட்டையோட காத்திருக்காள்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...