குருவாயூரில் பறவைக்கரசு-- III a
இது என்ன புதுசா [III-a] என்று குழம்புகிறீர்களா? வேறொன்றுமில்லை "குருவாயூரில் பறவைக்கரசு"
தொடர் பலரை ஈர்ர்த்திருப்பதை நான் அறிவேன்.
எனது நண்பர் பேரா. டாக்டர்,வெங்கட்ராமன்,
கதையை அவர் பாணியில்
நகர்த்தியுள்ளார். அதை வெறும் பதிலிருப்பாக பார்க்காமல்
வேறொரு கதாசிரியர் என்ன நினைக்கிறார் என்பதை வெளிச்சம் போடுகிறது , எனவே அதை [III-a] என வழங்கியுள்ளேன் . அன்பர்கள் ரசிக்கலாம்.
அவர் எழுத்தில் நெல்லையம்பதி
அய்யங்கார் வெளிப்பட்டால் அடியேன் பொறுப்பல்ல.
மேலும் DR
. KV இன் எண்ண ஓட்டம் எனது பிறபகுதிகளை
சற்றும் மாற்றாது என்ற உறுதி மொழியுடன் உங்களை இப்பகுதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் அன்பன் ராமன்
இனி தொடர்வது டாக்டர் KV
இன் எழுத்து
“ஓய் வேது , எனக்கு காப்பி சாப்படாம இருக்க முடியாது. எங்கே போகலாம? வாரும் வாரும் இங்கே ராமகிருஷ்ணா ஹோட்டல்ல நல்ல மசால் தோசையும காப்பியும் குடிச்சுட்டு ம்ம்மியூருக்கு எனக்குத தெரிஞ்ச ஆட்டோ பிரஸாத்தை வரச்சொல்லியிருக்கேன் அவன் உங்களை நிதானமா கூட்டிண்டு போவான்்நான் திரிச்சூருக்கு டாக்ஸிலே போயிட்டு வந்துடறேன். மத்யானம் சாப்பாடும் ராமகிருஷ்ணாவா என்றது கழுகு ் சொல்ல மறந்துட்டேனே நம்மடவாளுக்கெல்லாம் ௐசியில சாப்பாடு போடற சங்கர நிலையத்திலே இப்போதே சொல்லிவச்சுடறேன்் டாண்னு 12 மணிக்கெல்லாம் நீங்க அங்க போயிடுங்கோ்்இந்த ஊர்ல எங்க போனாலும் சட்டை போட்டுக்க வேண்டாம் ் உமக்கு எதேனும் குருவாயூர் விளக்கு வேணும்னா ஏதாவது ஒரு கடையிலே வாங்கிக்கோம் ்நேந்திரங்கா சிப்ஸ் நான் சாயங்காலம் வந்ததும் வாங்கித்தரேன் கண்ட இடத்தில வாங்கிடாதேயும் ரூம்ல என்ஜாய்பண்ணிண்டிரும் நான் வரேன்
வெங்கட்ராமன்
No comments:
Post a Comment