குருவாயூரில் பறவைக்கரசு - III
அசப்பில ஹிந்தி நடிகை ஹேமமாலினி போல் உயரம் பரிமாணங்களுடன் உருண்டையான முன் நெற்றி யுடன் நடுத்தர வயது சுடிதார் ஒன்று சரியாக சென்னை -குருவாயூர் எஸ்பிரஸின் ஏ சி கோச் வரும் இடத்தில் உத்தேசமாக அருகில் நிற்க, சற்று தள்ளி வேதாந்தம், கழுகு தம்பதிக்காக காத்திருந்தான். அந்த சுடிதார், சாட்ஷாத் லேசர் வித்யாவேதான். நமஸ்காரப்பரிமாற்றங்களுக்குப்பின் குருவாயூர் கோயிலை நோக்கி ஆட்டோவில் 4 பேரும் பயணம்.
வேதாந்தத்துக்கு அம்புஜம் வேறு யாரோ மாதிரி தெரிந்தாள். வேறு ஒன்றுமில்லை அவள் இப்போது 6 கெஜம் புடவையில் மேலும் நன்றாக இருப்பதாகத்தோன்றியது. சரியாக கோயில் நடைக்கு வெளியில் ஒரு பெரிய லாட்ஜில் வேதாந்தம் ஏற்பாடு செய்திருந்தான். கோயிலுக்கு 5 நிமிட நடை கிழக்கு வாசலில்.
இறங்கி
வலது
புறம்
திரும்பிய
அம்புஜம்
அடக்கமுடியாத
சிரிப்
பில்
வாயை
கர்சீப்பினால்
மூட,
கழுகு
என்னாச்சு
என்னாச்சு
என்று
கேட்க
அவளுக்கு
சிரிப்பு
அதிகமாயிற்று.
மிக
அருகில்
லட்சுமி
மாமி
சொன்ன
நபருக்கு
பிரம்மாண்ட
சிலை
ஆம்,
கிருஷ்ண
பருந்து
[நம்மூர்
மொழியில்
கழுகு]
15 அடி
அகலத்துக்கு
சிறகை
விரித்தபடி.
நம்மாளுக்கு
இந்த
ஊர்ல
சிலையா
என்று
உள்ளூர
சிரிப்பு.---
கஷ்டப்பட்டு
அடக்கிக்கொண்டாள்].
கழுகு,
-- சிலையைப்பார்த்து
கன்னத்தில்
போட்டுக்கொண்டான்.
குளித்துவிட்டு நால்வரும் கோயிலுக்கு புறப்பட ஆயத்தம் ஆனார்கள்.திடீரென வேதாந்தம், டேய் இங்க எல்லாம் சட்டை போட்டுண்டு போனா உள்ள விடமாட்டான் நினைவிருக்கட்டும் என்று எச்சரித்தான். கழுகுதான் அசகாய சூரனாயிற்றே தயாராக வேட்டி, மேல்வேட்டி நெற்றியில் திருமண் தரித்து சோழ தேசத்து அய்யங்கார் ரூபத்தில் கிளம்ப அம்புஜம் அவனை விஞ்சும் அளவிற்கு மிகச்சிறப்பாக எளிய அலங்காரத்தில் , வேதாந்தங்கள் டெல்லி பிராம்மணர்கள் என்பது பட்டவர்த்தனம் உடையில். நேரே தரிசன கியூ வில் போய் நிற்க அந்த இளம் காலையில் மலையாள பெண்கள் நாராயணா, நாராயணா என்று ஸ்மரணித்தபடி அலை அலையாக கூந்தலுடன், ஆண்கள் நெற்றியில் சந்தன கீற்றுடன் மிகுந்த தெய்வாம்சமாக இருந்தது. கழுகுக்கு அதிர்ஷ்டம் என்பது இங்கும் நிரூபணமாயிற்று.
ஆம் கூட்டமே இல்லை, என்ன குருவாயூரிலா என்கிறீர்களா? ஆமாம் பரீட்சை காலம் சில கல்வி நிர்ப்பந்தங்கள் இல்லாத மக்கள் மாத்திரம் தரிசிக்க வந்திருந்தனர். விறு விறு என்று கியூ நகர, சுமார் 7 நிமிடங்களில் குறுகிய வாயிற்படியில் சன்னதிக்கு வெளியில் வந்தாயிற்று. நுழைந்தவுடன் மலையாளத்தில் ஒருவர் தன் குடும்பத்தினருக்கு 'இப்புறத்து நோக்கு என்று இடதுபுறம் பார்க்க சொன்னார். மேலும், “இதாணு பட்டத்ரி, நாராயணீயம் பாடிய ஸ்தலம் நன்னாயிட்டு காணு” என்றார். நமது அன்பர்களும் இடதுபுறம் பார்த்து சிறிய தகட்டில் பொறித்திருந்த தகவலை பார்த்து, கண்ணீர்மல்க பட்டத்ரி க்கு நன்றி சொல்லி மெல்ல நகர, பளிச்சென்று தீப ஒளியில் சிறு வடிவில் குருவாயூரப்பா என்று உலகமே கொண்டாடும் குழந்தை கிருஷ்ணன் -மெய் சிலிர்க்கவைக்கும் காட்சி.
ஸ்ரீரங்கநாதனை சேவித்த கண்களுக்கு இத்தனை சிறிய க்ரிஷ்ணனா என்பதும், இவன் பராக்ரமம் தான் எத்தனை வலியது என்ற எண்ணமும் ஒரு சேர மேலிட மேனி குலுங்கியது என்றால் மிகையல்ல. சற்று நிதானமாகவே அமைந்த கிருஷ்ணதரிசனம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்ன? 'அவனுக்கு' தெரியும் யாருக்கு என்ன தரவேண்டும் என்று. அதிலும் கழுகு அதிர்ஷ்டசாலி வேறு, - வேறென்ன சொல்ல.
காலை 7.30 மணி வரை சோழ தேசத்து அய்யங்கார் காபி சாப்பிடாமல் இருந்ததுண்டோ. எனவே கழுகு தம்பதிக்கு காபி நினைவுக்கு வந்ததது. கிருஷ்ணன் சன்னதிக்கு வெளியில் இருக்கும் பகவதியை சேவித்துவிட்டுப்போகலாம் எனும் போது கொட்டுமுழக்கில் யானை மீது கிருஷ்ணன் --நம்பூதிரி கையில் ஸ்ரீவேலி தரிசனமாக பிராகார ஊர்வலம். நால்வரும்ரசித்து சேவித்தனர்.மீண்டும் மாலையில் 5.00 மணிக்கு முன் ஸ்ரீவேலி தரிசனம் உண்டு என்று பேசிக்கொண்டனர் உள்ளூர் பக்தர்கள். வந்துடலாம் என்று நினைத்தபோது, வேதாந்தம் எனக்கு 4.00 மணிக்கு திருசூரில் மீட்டிங் நான் போய் விட்டு வந்துவிடுவேன் நீங்கள் ஸ்ரீவேலி பார்த்துவிடுங்கள் என்று வித்யாவை தயக்கத்துடன் பார்க்க, நான் இருக்கேன் நீங்க போயிட்டு வாங்கோ, மாமி தான் இருக்காளே பேச்சுத்துணைக்கு என்றாள்.
வித்யாவுக்கு
அம்புஜம்
ஏற்புடையவளாகவே
தெரிந்தாள்.
பகவதி
பிரகாரத்தில்
மேற்கு
சுவற்றில்,
குருவாயூர்
வந்தவர்கள்
மம்மியூர்
சிவனையும்
தரிசனம்
செய்தால்
தான்
க்ஷேத்ராடனம்
பூர்த்தி
அடையும்
என்று
அறிவிப்பு
வைத்திருந்தது.
மம்மியூர்
பக்கத்தில்
1.5 கிலோமீட்டரில்
என்றதால்,
காபிக்குப்பின்
போகலாம்
என்று
வெளியே
வந்தால்
-எங்கே
போவது,?
உடுப்பி
கிருஷ்ண
பவன்,ராமகிருஷ்ணா
பவன்,
கிருஷ்ண
பவன்
என்று
வரிசையாக
ஹோட்டல்கள்.
பின்னவை
இரண்டிலும்
பிராமணாள்
ஹோட்டல்
என்று
கஷ்டப்பட்டு
தமிழில்
எழுதியிருந்தது.
. [தொடரும்]
ஓய் வேது , எனக்கு காப்பி சாப்படாம இருக்க முடியாது. எங்கே போகலாம?வாரும் வாரும் இங்கே ராமகிருஷ்ணா ஹோட்டல்ல நல்ல மசால் தோசையும காப்பியும் குடிச்சுட்டு ம்ம்மியூருக்கு
ReplyDeleteஎனக்குத தெரிஞ்ச ஆட்டோ பிரஸாத்தை வரச்சொல்லியிருக்கேன்
அவன் உங்களை நிதானமா கூட்டிண்டு போவான்்நான் திரிச்சூருக்கு டாக்ஸிலே போயிட்டு வந்துடறேன்.
மத்யானம் சாப்பாடும் ராமகிருஷ்ணாவா என்றது கழுகு ்
சொல்ல மறந்துட்டேனே
நம்மடவாளுக்கெல்லாம் ௐசியில
சாப்பாடு போடற சங்கர நிலையத்திலே இப்போதே சொல்லிவச்சுடறேன்் டாண்னு 12 மணிக்கெல்லாம் நீங்க அங்க போயிடுங்கோ்்இந்த ஊர்ல எங்க போனாலும் சட்டை போட்டுக்க வேண்டாம் ்
உமக்கு எதேனும் குருவாயூர் விளக்கு வேணும்னா ஏதாவது ஒரு கடையிலே வாங்கிக்கோம் ்நேந்திரங்கா சிப்ஸ் நான் சாயங்காலம் வந்ததும் வாங்கித்தரேன் கண்ட இடத்தில வாங்கிடாதேயும்
ரூம்ல என்ஜாய்பண்ணிண்டிரும்
நான் வரேன்
வெங்கட்ராமன்