மேல் நாட்டில் பலவேசம் –- 2
அப்போது
நடந்த அதிசயம் என்ன என்றால் , ஒரு ஆஜான பாகு உருவம், நெற்றியில் விபூதி குங்குமம் தரித்து
கேரள தேசத்து களிரென கம்பீரமாக நடந்து வர, அவன் முன் இரு பெண்கள் அதீத நறுமண மலர் தூவி
பணிந்து செல்ல, இருமருங்கிலும் அப்சரஸ் நிகர்த்த இரு பெண்கள் வெண் சாமரம் வீசி ஒரு
10 பேரடங்கிய வேத விற்பன்னர்கள் அந்த சிவப்பழத்தின் பின்னர் தீவிர பக்திப்பெருக்குடன்
4 வேதங்களையும் உச்சாடனம் செய்த படி நடந்து வர , பலவேசத்துக்கு, வியப்பை விட [அந்த
15 அதுதான் 2 ஏழறைகளின் வீரியம் மேலிட] கோபம் கொப்பளிக்க இவனுக்கு என்ன இவ்வளவு மரியாதை,
ஆத்திகர்கள் அராஜகம் இங்கும் கோலோச்சுகிறதோ என்று , கன்று போல் துள்ளினான்.
யமகிங்கரன்-2 , கையில் இருந்த சவுக்கால் வீறினான் பலவேசத்தை; மேலும் சொன்னான் அடே மானங்கெட்டவனே , ஈனப்பிறவியே, அவனைப்பார்த்து பொறாமை கொள்ளாதே, அவன் தேவேந்திரனின் அரசவைக்கவிஞன், இறைவனே வியக்கும் வண்ணம் கவி புனைவான்; இப்போது அவன் தேவேந்திரனின் சார்பில் எங்கள் அவைக்கு உரிய மரியாதையுடன் அழைத்து வரப்படுகிறான் . அதனால் தான் தேவலோக நங்கையர் அணி வகுத்து , அனைத்து பெருமைகளும் வழங்கி எங்களின் விருந்தினராக கவி பீடுநடை போட்டு, பரந்தாமனின் ஆசியுடன் ,கம்பீரமாக வருகிறார்.
அவர் உன்போல யமலோகப்பிரஜை அல்ல , தேவலோகக்கவி , நீ காழ்ப்புணர்ச்சி இன்றி
அறிவுசால் சான்றோரை மதிக்க கற்றுக்கொள் , இல்லையேல்
நீ கொப்பரையில் ஊறி பயனற்ற ஊறுகாய் போல் , மீண்டும் மீண்டும், எண்ணை , உப்பு, காரம்
, வெய்யில் என்று ஊறித்திளைக்கவேண்டியது தான்.
எக்காரணம் கொண்டும் , இவனை மனிதனாகப்படைக்காதீர் என பிரம்மனுக்கு, சித்திரகுப்தர் விண்ணப்பித்துள்ளார். பிரம்மன் கோரிய விளக்கத்தை சித்ர குப்தர் லிகிதமாக அனுப்பியுள்ளார் . என்ன லிகிதம்? என்றான் பலவேசம். இன்னொரு கிங்கரன் சொன்னான் "லிகிதம் எனில் கடிதம். அதில், மானுடப்பிறவியில் இவன் பிறரை ஏமாற்றி, சண்டை சச்சரவு ஊழல் என பொருள் குவிப்பான் . எனவே இவனை கொசுவாகப்படையுங்கள் ; அதுவும் பெண் கொசுவாக. ஏனெனில், பெண் கொசு ரஸமாக ரத்தம் பருகும் போது 'பட்' என்று அரை வாங்கி, ரத்தம் தெறித்து உயிர் நீக்கும். உண்ணும் போது இறக்கும் சாபம் உடையது பெண் கொசு. அதுதான் இவனுக்கு அடுத்த 400 பிறவிக்கும் கிடைக்க பிரம்மன் சித்திக்க வேண்டும் என்று சித்ரகுப்தர், மா பெரும் கணக்குகளுக்கு பின்னர் நிர்ணயித்து வேண்டுகோள் வைத்திருக்கிறார். இப்போது தான் இது போன்ற ஊழல் மனிதர்களைக்கையாளும் சூத்ரம்[formula] உன்னால் உருவெடுத்துள்ளது”.
எண்ணை பொங்கிக்கொண்டிருக்கிறது, அழுக்கும் எண்ணையில் குவிந்துள்ளது, உன்னை இப்போதே கொப்பரையில் தள்ளி, இரவுக்குள் செக்கை தயார் செய்து வைக்கிறோம், நீ அதையும் இழு. செக்கு என்பது பணம் தரும் ஓலை அல்ல , உன் லீலைகளுக்கு நீ தரப்போகும் விலை. ம்ம் கிளம்பு எண்ணை தயார் என்று அவனை தூக்கிச்சென்று 'சொத் ' என்று கொப்பரையில் வீசினர். இப்போது தனியாக பலவேசம் பொங்கும் எண்ணையில் துடித்து மூழ்கினான்.
பூமியில், பலவேசத்துக்கு, பிறந்த நாள் விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தேவலோகக்
கவியின் கவிதைப்பேரூற்றில் மூழ்கிக்கிடக்கின்றனர் எம லோக ஊழியர்கள், ஸ்ரீமன் நாராயணின்
ஆசியால்.
பேரா.
ராமன்
பாவம் . பலவேசத்தை சித்ரகுப்தன் கொதிக்கும் எண்ணையில் தொப்பென்று போட்டுவிட்டான். கொதிக்கும் எண்ணையில் அப்பளம் போல பலவேசம் பொருஞ்சிவிட்டான்.. அந்தோ பரிதாபம்
ReplyDeleteவெங்கட்ராமன்