Sunday, March 15, 2026

A SURPRISE IN SRIRANGAM

 A SURPRISE IN  SRIRANGAM

ஸ்ரீரங்கத்தில் ஒரு ஆச்சர்யம்

ஆஹா மதுரை முடிந்துவிட்டது ஐய்யா!!! ஐய்யா! என்று குதிக்க வேண்டாம். எப்படியும் இன்னும் வரத்தான் போகிறது. பின் ஏன் திடீரென்று ஸ்ரீரங்கம் என்கிறீர்களா? அதில் தானே சூட்சுமம் இருக்கிறது . மாலை வேளையில் ஸ்ரீரங்கத்தில் டிபன் என்று தலைப்பிட்டு திரு மனோஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அப்படியா என்று வியந்து ஏமாந்தேன். போன வாரம் தான் ஸ்ரீரங்கத்தில் மாலையில் சுமார் 5.00 மணிக்கு ஒன்றும் கிடைக்காது என்று எழுதியிருந்தேன் னால் இப்படி ஒரு வீடியோ வந்துள்ளதே என்று பார்த்தேன். இந்தமாலை உணவு 6.30 மணிக்குமேல் 9,30 மணிக்குள் தானாம் அதானே பாத்தேன் ஸ்ரீரங்கத்துல யாவது .  மாலையில் டிபன் ஆவது . போகட்டும் இந்த அமுது என்ற உணவகம் அம்மாமண்டபம் சாலையில் ஸ்ரீராமபுரம் அணுகுசாலையில் உள்ளதாம்.. அதிலும் வேட்டு  விட்டான் என்பது போல பூரி வடை போன்ற பொறித்து எடுக்கும் உணவுகள் கிடையாது ,இட்டலி ,தோசை ,ரவா தோசை , கொல்லிமலை மிளகு தோசை என்று ஒரே பெருமை. கொல்லிமலை மிளகு இல்லை என்றால் அந்த ஐட்டமே கிடையாது என்று விரதம் பூண்டு        நடக்கும் உணவகம். கல்லின் விளிம்பு வரை ஊற்றப்படும் பெரிய  தோசை, 7 வகை சட்டினிகள், சாம்பார் என்று பெருமைகள் இவ்விடத்திற்கு சொல்லப்படுகிறது.  இப்படி பல விநோதங்கள் கொண்ட உணவகம் இது. .

https://www.youtube.com/watch?v=zKH6QX0t90Y

Sriraamapuram approach road, ammaamandapanm Srirangam

மற்றுமோர் உணவகம் குரு கிருபா ராஜகோபுரத்திற்கு வெளியே காவல் நிலையத்திற்கு எதிர் பகுதியில்.

இதையும் சிலாகித்து வீடியோ வந்துள்ளது. பூண்டு வெங்காயம் அமாவாசை, கிரஹணம் என்ற சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களுடன் இயங்குகிறது.

https://www.youtube.com/watch?v=OUXgx6BKqZs  gurukripa near Police station SRGM 

ஆனால் ஒன்று---  இது போன்ற உணவகங்களை பதிவிடும் நபர்கள் கிட்டத்தட்ட எல்லா உணவுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அசராமல் சாப்பிடுகிறார்கள். அதுவே கூட உணவு சுவையாக இருப்பதாக ஒரு எண்ணத்தைதோற்றுவிக்கும். எதுவாயினும் சுற்றுலா வில் வரும் மாந்தர்க்கு இதுபோன்ற வீடியோக்கள் ஒரு உதவியாக இருக்கும்,

நன்றி

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

A SURPRISE IN SRIRANGAM

  A SURPRISE IN   SRIRANGAM ஸ்ரீரங்கத்தில் ஒரு ஆச்சர்யம் ஆஹா மதுரை முடிந்துவிட்டது ஐய் யா!!! ஐய்யா! என்று குதிக்க வேண்டாம் . எ...