Monday, March 16, 2026

THE PRESENT

 THE PRESENT

தற்போது

இன்றைய மேற்காசிய சூழலில் பதற்றம் , பொருள் சேதம், உயிர் சேதம் , அழிவு, மூர்க்கத்தனமான எதிர்வினைகள் , ஒருவரை ஒருவர் போடா சரிதான் என்று சொல்லாத குறையாக நிகழ்வுகள் ஒரு புறம், விமானங்கள் கூட நினைத்த வழித்தடங்களில் செல்ல முடியவில்லை

கடல் வழியை மூடிவிட்டோம், வான் வெளியில் வந்தால் தாக்குவோம் என்று ஒரே எச்சரிக்கை. இவை ஒருபுறம் இருக்க , அசராமல் எப்போதும் போல் இயங்கிவருவது இந்தியா மட்டுமே எனில் தவறல்ல

இவ்வளவையும் தாண்டி பல தலைவர்கள் அவரவர் இருப்பிடங்களிலேயே தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலவரம் . எப்படி பார்த்தாலும் நவீன போர் முறைகள், அறிவுசார் நுட்ப மதியின் துணை கொண்டே முன்னேற்றமும் வெற்றியும் பெறுகின்றன.. இதில் செயற்கை நுண்ணறிவு வேறு பயன் படுகிற நிலை

கருவிகளை விட குருவிகளின் பங்களிப்பே அதிகம் ஆம் உளவுப்பிரிவுகள் எப்படி இயங்குகின்றன எவ்வளவு ஆழ்ந்த திட்டமிடல் மற்றும் தீவிர கவனம் இரண்டும் தொடர்ந்து செயல் பட்டு, எதிர்பாராத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத வேகத்தில் மாற்று சர்வ நாச பலம் கொண்டு அரங்கேற்றப்படும் நவீன முறைகள் என பட்டியல் நீள்கிறது

இவற்றின் வெகு நுணுக்கமான தகவல்களை திரு எஸ் கே [SKA  தனக்கே உரிய தெளிவும் வேகமும் பட்டியலும் கொண்டு விளக்குகிறார். ஊன்றி கவனித்து அவர் தரும் தகவல்களை உள்வாங்கி பயன் பெறுவீர் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Agc7yN5qqj0 the present SKA

                                           ********************

No comments:

Post a Comment

THE PRESENT

  THE PRESENT தற்போது இன்றைய மேற்காசிய சூழலில் பதற்றம் , பொருள் சேதம் , உயிர் சேதம் , அழிவு , மூர்க்கத்தனமான எதிர்வினைகள் , ஒர...