புதுப்பூணூல்
இவன்
என்னடா குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக ஒரு நாள் ஜோல்னா என்கிறான் மறுநாள்
பூணூல் என்கிறான் என்ன ஆச்சு இவனுக்கு என்பவர்களுக்கு நான் தரும் உத் திரவாதம் - எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால்
புதுப்பூணூல் அணிந்தால் தான் அவ்வப்போது நல்ல சாப்பாடு கிடைக்கும், முத்துவுக்கும்,
சுப்பையாவுக்கும் . யார் இவர்கள்?. இவர்கள் இருவரும் கௌரவபரிமாறுபவர்கள். ஏனடா இப்படி
தொல்லை தருகிறாய் என்பவர்களுக்கு எனது விளக்கம். { இப்போதெல்லாம் கல்லூரிகளில் தாற்காலிக
விரிவுரையாளர்களுக்கு பொதுவான அங்கீகாரம் “கௌரவ விரிவுரையாளர்கள்”. அதாவது நிரந்தர
பதவியும்,நிலையான சம்பளமும், முறையான ஊதிய உயர்வும் இல்லாதவன் கௌரவ விரிவுரையாளர்
;எனவே அதே போல நித்ய கண்டம் பூரண ஆயுசு போல ஜீவனம் செய்யும் பரிமாறுபவர்களை கௌரவ பரிமாறிகள்
அல்லது கௌர சர்வர்கள் என்றால் தவறென்ன?}
அது
சரி ஏனிந்த "கௌரவ" பதவி? கல்யாண வீடுகளில் அதுவும் பிராமண வகை த்திருமணங்களில்,
சில கட்டுப்பாடுகள் உண்டு. சர்வர் வேலைக்கு
ஆள் பற்றாக்குறை ; நம்பமுடியவில்லையா ? எதைத்தான் நம்பியிருக்கிறீர்கள் ? எடுத்ததற்கெல்லாம்
சந்தேகம். தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள வெஜிடேரியன் ஹோட்டல்களில் பாருங்கள் -north east மாநில பையன்கள் வேலை செய்கின்றனர்.
முதலாளிகள்
சொல்வது “நம்ப ஊர் பையன்கள் வேலைக்கு வருவதில்லை ,வந்தாலும் வீட்டுக்கு ஓடுவதிலேயே
குறியாக மணிபார்க்கும் நபர்கள் தான் அதிகம். இந்த மஞ்சள் முக மனிதர்களுக்கு வருடத்திற்கு
1 0r 2 முறை தான் வீடு. இங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள், நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள்
வேறு
தொழிற்சங்க இடையூறுகள் இல்லை. எனவே இவர்களை வைத்து தொழில்
நடக்கிறது”
"ஹோட்டல் பணிக்கே ஆள் கிடைப்பதில்லை, இடை இடையே
வரும் திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஆட்கள் கிடைப்பரா என்ன? அதனால் கேப்டன் குக்
வகையறாக்களுக்கு, பரிமாறிகள் அதுவும் பிராண்ட் வகைகள் கிடைப்பதரிது. கேப்டன் குக் வகையறாக்கள்,
ஆள் மாறாட்டம் செய்து பயணிப்பதை தவிர்க்க முடியாது.
எப்படியோ கல்யாணம் நடந்தால் சரி என்று கடந்து போகிறோம். வருங்காலத்தில் கேப்டன் குக்
கூட ஆள்மாறாட்ட கேஸ் ஆக இருக்கக்கூடும் . இத்துணை பூர்வ பீடிகை இல்லாமல் சொல்ல வந்ததை
நேரடியாகத்தொட முடியவில்லை.
இவற்றிலும்
நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
21/2
நாள் கல்யாண வேலை க்கு வரியா என்றான் கே. கு .. முத்துவிடம் . வரேன் என்றான் முத்து
. இந்த உரையாடலை கவனியுங்கள்.
கே.கு
: இத பார் .. வாயே திறக்கக்கூடாது .
முத்து
: ஏன் சாப்பாடு கிடையாதா ?
கே.கு
:டே லூசு அதெல்லாம் செமத்தியா உண்டு, பேச்சே கூடாது "
முத்து
: ஏண்ணே
கே.கு
: இப்பிடி ஏதாவது அண்ணே ,கிண்ணே னு ஏடாகூடம்
பண்ணிப்புடுவ.
முத்து
: மரியாத இல்லாம பேசணுமா ?
கே.கு
நீ பேசாத , பேசினா ஏதாவது பிரச்சனை உண்டாயிடும். அப்படிதான் உங்க தெரு மோகன கூட்டிண்டு
போனா,அவன் 'டவரா'ல ங்காம வட்டகப் ல காபி கொண்டாரவா னு கல்யாண பையனுக்கு அப்பாகிட்ட கேட்டு
, நாங்கள் லாம் அடிவாங்காம வந்ததே பெருசு..
முத்து
: இவ்வள இருக்கா ஆ .
கே.கு
: அப்புறம் கைலி,, இடுப்பில பீடி இதெல்லாம் இருக்கக்கூடாது.
முத்து:
வேற ? கே.கு: கண்டிப்பா பூணல் இருக்கணும்
உடம்புல. . முத்து: பூணல் னா என்ன.?
கே
கு: தனது பூணலை காட்ட, முத்து ; பூணூல் னு சொல்லுங்க அப்பதான் புரியும். ஆனா ஏங்கிட்ட
ஏது பூணூல் ?
கே.கு:
டே நான் தரேன் ஞாபகமா திங்கள் சாய்ங்காலம் எங்கிட்ட வாங்கிக்கோ.. அப்புறம், வேட்டி
தான் கட்டிக்கணும்.
செவ்வாய்
காலை தனது ரெங்கநாதர் விக்ரஹம் போன்ற கறுத்த உடலின் மீது வெள்ளை வெளேர் பூணலுடன் வந்து
நின்றான் முத்து, கல்யாண வீட்டு சமையற் கட்டில்.
கே.கு
: அடே பாவி --கல்யாண வீடுடா பூணலை வலது தோள் ல மாட்டிண்டு வந்திருக்க ; இங்க வாடா என்று
அழைத்து பனியனை கழற்றி, பூணலை இடது தோளில்
மாற்றி அணிவித்தான்.
முத்து:
அய்யர் மாதிரி இருக்குல்ல என்று சிரித்தான்:
கே.
கு ; ஆமாம் சினிமால வர ஐயர் மாதிரி இருக்கு ; வாயத்தெறந்த மண்டைய ஒடைச்சுடுவேன். சொன்னதைமட்டும் செய்.
முத்து : என்னை ரெடி பண்ணிட்டீங்க , சுப்பையாவுக்கு, ? கே. கு அப்புறம் இன்னொரு விஷயம் .சுப்பையானு கூப்பிடாத அவனுக்கு இங்க பேர் தோத்தாத்திரி
முத்து:
என்னது ? கே. கு : தோத்தா திரி
முத்து:
தோத்தா திரி, ஜெயிச்சா வெடியா? கே. கு கோபம் கொப்பளிக்க முத்துவை முறைத்தான்.
கே.
கு : அவனுக்கு [தோத்தாரி அதான் சுப்பையாவுக்கு] தெரியும் சூப்பரா பூணல் மாட்டிப்பான். பேசாம கரெக்டா வேலைய சுத்தமா பாப்பான் முத்து: என்ன சுப்பையா சுத்தமான பாப்பானா
‘?'
கே.கு:
இன்னும் எத்தனை விதமாக முத்து கழுத்தறுப்பானோ,,
ஆ என்று பதறி “ங்கொய்” என்று மயக்கம் போட்டு விழுந்தான்.
கேப்டன் குக்
பேரா
ராமன்
ஜகனநாதனாத்தில கல்யாணம.
ReplyDeleteஎன்னோட தளிகை தான் .பரிஜாதகர்களுக்கு ஆள் கூட்டிண்டு வரச் சொல்லியிருக்கேன்.ஐயங்காராத்து கல்யாணமோன்னோ. பரிபாஷைகளெல்லாம் சொல்லிக்கொடுக்கணும்்
சதம. பரிமாறும்போது சோறு போடவான்னு சொல்லுவான்
ரசம் விடும்போது சாத்துமதுன்னு சொல்லணும். அடுத்து பாயாசம் வேணுமான்னு சொல்லக்கூடாது.
திருக்கண்ணமுது சாதிக்கவான்னு சொல்லணும். பூணலை ப்ராசீனவீதிலே போட்டுண்டிரப்பான்
இதையெல்லாம் சொல்லிக்கொடுத்தாலும்
தண்ணி வேணுமான்னு கேட்டுடுவான்
தீர்த்தம்னு சொல்லுடான்னு அதையும்
சொல்லிக்கொடுத்து சேர்க்கணும்
என்புழைப்பு இப்படி போயிண்டிருக்கு என்று அலுத்துக்கொண்டார் கே.கு
வெங்கட்ராமன்