Sunday, October 16, 2022

பொதுக்கூட்டம்

 

                                                                    பொதுக்கூட்டம்

அலை மோதும் கூட்டம் , வலை வீசி பேசி பேசி ஓட்டுகளை அறுவடை செய்யும் வித்தகன் அந்த அரசியல் வாதி. அரசியல் வாதி யா, வியாதியா என்பதே ஒரு பட்டிமன்றப்பொருள். நம்ம அரசியல் வாதி பேச விழைவது மாலையில் தான்; பகலில் உறங்கும் பெருச்சாளி இனம். அதிக கூட்டம் தென்பட்டால் அருவியெனப்பொழிவான் அதில் அறிவின் குறியீடுகளின் சுவடே தென்படாது. கேட்டுஇன்புற்றோர் பல்லாயிரம். அவன் பெயர் பலவேசம் எதிர் முனையினர் அவனை பகல் வேஷம் என்பார்கள். அவனது இலக்கு சொத்து சேர்ப்பது.

அவன் வீட்டில் ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பான் -எதற்கு?                                                               மறவாமல் பணி  தொடர்ந்திட  . அந்தவாசகம் இது தான்

      செத்தும் சேர் சொத்து , வந்திடும் பின்னர் கெத்து

[ஆஹா என்ன எதுகை , என்ன மோனை என்று புளகாங்கிதம் அடைவான் பலவேசம்}.  தென்னாட்டில் பலவேசம் கால் பாதிக்காத ஊரே இல்லை எனலாம்.. கூட்டம் பேசும் சாக்கில் மைதானங்கள், வயற்பகுதிகள் விற்பனை வளாகங்கள் எந்த ஊரில் என்னென்ன என்பதை கூகுள் வரைபடம் போல துல்லியமாக குறித்துக்கொள்வான். வேறென்ன ? என்றாவது பதவி கிட்டினால் சட்டமியற்றி, சட்டைவேட்டி  உள்பட அனைத்தையும்   கபளீகரம் செய்ய கொக்குபோல் காத்திருக்கிறான் பலவேசம். ஏழைகளை அரவணைப்பான், செவந்தர்களை சொல்லம்பால் வீழ்த்தும் கலை  தனை குலவித்தையாக கற்றவன்

ஆழ் மனதில் வக்கிரமும் புற  மொழியில் தேனையும் குழைப்பவன். கெஞ்சினால்  மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் . அஞ்சினால் வஞ்சமாக வியூகம் அமைத்து பஞ்ச மா பாதகங்களை அஞ்சாமல் செய்யும் சகுனி அவன். ஆனால் அவன் முன் சகுனியே தலை குனிவான் இவனின் கொடூர திட்டமிடல் கண்டு. சகுனிக்கே பாடம் சொல்லும் ஞானகுரு பலவேசம். அப்படித்தான் சகுனி இவனிடம் சிக்கி இவனுக்கு 15 என பெயர் வைத்தான் சகுனி.[அதாவது 71/2 x 2 =15.அதாவது 2 ஏழறைகளின் வீரியம் கொண்டவன் பலவேசம்].

திடீரென்று காற்று பலவேசம் பக்கம் வீச செல்வச்செழிப்பை அள்ளி அள்ளிக்குவித்தன் பலவேசம். ஆனால் இன்றளவும் அரை வயிற்று சோற்றுக்கு திண்டாடும் ஏழை நான் என்பான் . திடீரென்று காற்று எதிர் திசையில் வீசிட பலவேசம் பதவி இழந்தான். அவன் தான் இப்போது பொதுக்கூட்டத்தில் முழங்குகிறான்.இப்போது பதவியில் இருப்பவனை ஏளனம் செய்கிறான்.

"ஏழையைச்சுரண்டும் கோழையே, உன்னால் வாழ்ந்தோர் எவரும் உண்டா,? வீழ்ந்தோர் ஏராளம்.. கோபுரக்கலசமே நீ சாய்வது உறுதி , ஏழையின் கண்ணீர் உன்னை துவைத்து விடும், நீ குவைத்தில் ஒளிந்தாலும், குளத்தில் பதுங்கினாலும், நீ மக்கள் மன்றத்தில் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் .உன்னால் தமிழகம் சீரழிந்தது போதாதா , சீர் தூக்கி   போடாதா உன்னை தெருவில் ? பார் போற்ற தமிழன் வாழும் நாள் இல்லை வெகு தொலைவில்". உரத்த குரலில் கவிதை பாடுகிறான்.          லேசாக மழை பெய்ய

அய்யகோ, வெள்ளம் வெள்ளம் வழியெங்கும் வெள்ளம்

பள்ளம் பள்ளம் ஆட்சியினர் உள்ளம் , வெல்லமென க்கரையுது மக்கள் செல்வம்

உள்ளமெனக்கில்லையா கள்வனே, பிறர் துயரில் வாழும் உலுத்தனே ,                 உண்டு கொழுத்தாயே  தின்று தீர்த்தாயே மாநிலத்தின் செல்வந்தனை                                அதனால் ஆனாயே செல்வந்தனாய்                                     

                               வெள்ளநீர் அல்லடா  இது மாந்தர் தம் கண்ணீர்          

மெள்ள நீர் தள்ளுவீர் இவனை சிறையில்     -                                        சேர்த்துவிட்டான் உந்தன் சொத்தை

அதனால் உமது வாழ்வோ -சொத்தை

பஞ்சணை யும்      பால்குடமும் அவனுக்கு

வஞ்சனையும் பாலிடால் வேலையும் உந்தனுக்கு,                                                உணர்வீர் உணர்வில்லா ஏழையீரே                          குமுறும் மன ங் கள்  குளிர்ந்திட                                                     

                                            அழைப்பீர் எம்மை உமக்குழைத்திட                          

கொளுத்துவீர் மடமையை ,அவனது  சொகுசு வாகனந்தனை              என்று கனல் தெறிக்க வன்முறையை கிளப்பி  புகை மண்டலத்தில் மறைந்தான் பலவேசம்.  பிறகென்ன இப்போது சொத்துகளை விரட்டிப்பிடிக்கிறான்.  காலையில் கண் விழித்து “ச்சீ அவ்வளவும் கனவு” என்று நொந்தான் பலவேசம்.      .                                     பேரா. ராமன் 

2 comments:

  1. அருமையான பதிவு.

    ReplyDelete
  2. அரசியல்வாதிகள் பேசுவதற்கு மேடை தேவையில்லை.
    ஆற்றங்கரை நடுவில் கூட்டம் போட்டால் அங்கே மணலில் தூங்குவதற்கு ஒரு கூட்டமே வரும் .
    அசிங்கமாகப்பேசுவதற்கே ஆறுமுகம் அருணாசலம்னு ஆயிரம் பேர் திராவிடக்கழகத்தார்கள் பலர்உண்டு
    அப்போதெல்லாம் இவர்களுக்கு பேசும்போது ஒரு சோடா பேசிமுடித்ததும் கையில் 10,100 கொடுப்பார்கள்.
    நல்ல இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் இப்போது நாதாரியாக எவன் அள்ளிக்கொடுக்கிறான் என்று நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறான். ஜீவானந்தம் , தமிழருவி மணியன் போன்றோர் பேச்சைக் கேட்க ஆட்கள் இப்போது இல்லை
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...