Monday, November 7, 2022

பெரும் மனங்கள் /ஆளுமைகள்—3

  பெரும் மனங்கள் /ஆளுமைகள்—3

 “நெஞ்சில் ஓர் ஆலயம்” தொடர்கிறது

'சொன்னது நீ தானா சொல், சொல் சொல் என்னுயிரே"  ஒரு வகை எனில்

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?                                                                                              ஏனிந்த கோலத்தைக்       கொடுத்தாயோ?

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ ,                                                                                     முகத்தை ப்பாத்துக்கொள்ள                  துடித்தாயோ -- இது வேறு வகை

இரு பாடல்களிலும் தனி  த் தனி சிறப்புகள்

சொன்னது நீ தானா வில், கணவனைக்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் வல்லமை காட்டும் மனைவியின் கம்பீரம் . சொல் சொல் சொல் என்ற  ஒரே சொல் பல வகையான முறைகளில் ஒலிக்கும் போது,ஆழ் மனத்தின் சோகங்களை அநாசாயமாக வெளிப்படுத்தும் இசையின் மேன்மை .இவ்விடத்தில் விஸ்வரூபம் எடுத்தவர் விஸ்வநாதன் எனில் விஸ்வரூபிணி சுசீலா.

இன்னொரு கைகளிலே யார்யார்-- நானா [இருமுறை யார் யார் என்பது- சொல்லடா உண்மையையே என்னும் மிரட்டல் வகை  யாப்பு ] என்னை மறந்தாயா என்னும் சொல் கட்டில் , மற ந்.............தாயா என பிரித்து ப்பாட  வைத்ததுடன் ஏன்   ஏன் ஏன்  என்னுயிரே என்று சோகத்தின் விளிம்பில் தவழும் சோகம் சொல்லிலாஅன்றி  இசையிலா என்பது ஒரு விவாதப்பொருள் எனில் இந்த அசுரர்களை வணங்குவதா,  வாழ்த்துவதா? விடை தெரிந்தால் சொல்லுங்கள்.  

'சொன்னது நீ தானா சொல், சொல் சொல் என்னுயிரே"  பாடலில்

 பின் வரும்சரணத்தில்

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே

மணமகளை திருமகளாய் நினைத்ததும் நீ தானே

ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒருமுறை தான் வளரும் உறவல்லவா , இன்று சொன்னது நீ தானா

என்று [நீ ஏன் மாறு பட்ட நிலை கொள்கிறாய்?  வேறொருவரை மணக்கச்சொல்கிறாயே- இது முறையா என்பது தொக்கி நிற்கும் வினா . அதே சமயம் ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா என்பது முன்னாள் காதலுனுக்கு நீ என்னை மறக்கத்தான் வேண்டும் என்ற வலியுறுத்தல்-- அதனால் தான் அவர் கவி அரசர் ].

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா

விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ,     இப்போது வேறோர் கை டாக்டர் , தெய்வம் என கணவனை உணர்த்தும் உன்னத மனைவியின் நிலைப்பாடு ; இந்த வரிகள் வெகு விரைவாக பாடப்பெற்று, அவளின் படபடப்பை உணர்த்துகிறார் விஸ்வநாதன். இப்பகுதிகளில் சித்தாரின் நடை உணர்ச்சியை முன்னிறுத்தி மீட்டப்படுவது நேர்த்தியான உத்தி 1962 ல்

முன்னதில் கணவனின் நிலைப்பாட்டில் குற்றம் கண்டவள்,

 'என்ன நினைத்து' பாடலில் தன நிலை தாழ்ந்தது போல உணர்விலும், நீ ஏன் இந்தக்கோலம் காண விழைகிறாய் [வாழ்வின் அஸ்தமனத்தில்இருக்கிறாயோ என்பதாக] மிகுந்த விசனம் படர்ந்தவளாக குமுறும் பாடல். அதீத உணர்ச்சிக்குவியல் இந்தப்பாடல். மனப்போராட்டத்தை கவிஞர் தனது  சொல்லாட்சியில் தூக்கி நிறுத்த , இசையின் சோகத்தில் விஸ்வநாதன் இந்தப்பாடலை எவ்வளவு கம்பீரமாக ஆனால் ஊனை உருக்கும் இசைக்கோவையாக வடிவமைத்துள்ளார்.

இப்பாடல் பற்றி எம் எஸ் வி அவர்களுடன் நான் பேசியபோது அவர் சொன்னார்      சோகத்துல எப்பவுமே ஒரு சுகம் இருக்கும்" என்றார். உணர்ச்சிகளை துல்லியமாக சிறைபிடிக்கும் ஆளுமை அன்றோ மெல்லிசை மன்னர்.                                       

Reference : https://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw- “சொன்னது நீ தானா” வயோலாவும்  சித்தாரும் சோகத்தைக்குழைக்க, அவற்றி ற்கும் ஈடு கொடுப்பதுடன், இறுதி வரை சுசீலாவின் குரலுக்கு இணையாகவும் துணையாகவும் நளினமாக துல்லியமாக விரல் நர்த்தனத்தில் ஒலிக்கும் ஹனுமந்தப்பாவின் தபலா வாசிப்பை ஊன்றி க்கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=kYEzIdPrytg = 'என்ன நினைத்து'’

பாஸ் மற்றும் வயோலா வின் பம் பம் என்ற மீட்டலை மேலும் உயர்த்தும் ஷெனாயின் குழைவு [சத்யம் அவர்கள்] இப்பாடலை தூக்கி சுமப்பது 1962 இல் நிகழ்ந்த அற்புதம்

இன்னும் வரும்     பேரா. ராமன்

2 comments:

  1. என் மனம் கவர்ந்த படம்
    என் மனம் கவர்ந்த பாடல்கள்
    என் மனம் கவர்ந்த டைரக்டர்
    என்மனம் கவர்ந்த இசை அமைப்பாளர்
    என் மனம் கவர்ந்த போட்டோகிராபர்
    எல்லாம் ஒருங்கிணைந்த ஓரேபடம் இதுதான்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. Excellent write up on NOA songs.
    Analysis on " Sonnathu née thaana" song is fabulous. Only MSV can give different emotions in different lines in the same tune.
    You have written what all of us has "experienced" in this classic creation of MSV. Hats off to you

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...