ரயில் வே புக்கிங் வரிசை
மனிதரில் கற்பனை செய்ய முடியாத வகை இனங்களை காண மிகச்சரியான இடம். வெற்றிலை வாய் , பணத்தொந்தி படிய வாரிய தலை ஆட்டுக்கிடா மீசை இவற்றுடன் பணக்கட்டுடன் முதல் ஆளாக நிற்பவர் ராஜாக்கண்ணு. காலை 6. 30 க்கே வந்தாயிற்று. நம்மூருக்கு மொத ரயிலு காலைல இந்நேரம் வந்திருதில்ல அதுனால டிக்கெட் கடை தெறந்திருப்பாக னு வந்தேன். இன்னும் தொறக்கல என்று பெருமூச்செறிந்தார் ரா. க . அவர் இந்த சிற்றூர் [ கள்ளிக்குடி ] அருகே பாண்டியபுரம் கிராமம். டிக்கட் முன்பதிவு செய்ய வந்துள்ளார்.
அந்த ஊர் போர்ட்டர் / பியூன் / சிப்பந்தி/ கொடிஅசைப்பவர் / டீ காபி வாங்கிவருபவர் இன்னோரன்ன பிற பணிகள் செய்வதில் விற்பன்னர். ரா க இப்போது போர்ட்டர் [சன்னாசி] ஐ பார்த்து அம்முலுக்கு இங்னதான் டூட்டியா என்றார். சன்னாசி என்ன இங்க ? என்றதும் டிக்கட் போடவந்தேன். இப்பவே வந்தாச்ச்சா 8 மணிக்கு தான்தொறப்பாக செவனே னு உக்காருங்க நான் போயிட்டு வாரேன் என்று சைக்கிளில் ஆரோகணித்து சன்னாசி இப்போது செல்வச்சீமானை போல் மிடுக்காகப்பறந்தான் ஸ்டேஷன் மாஸ்டர் ஐயா வுக்கு டிபன் வாங்கிவர. அடுத்த 1/2 மணியில் பூரிக்கிழங்கு மண த்துடன் சன்னாசி SM வீட்டைப்பார்த்து ஓடி திரும்பி வந்து டை டை டை டை டை டை டைன் டைன் டைன் என்று மணி அடித்து மதுரை நோக்கிப்பாய வரும் எஸ்ப்ரெஸ் [அப்படித்தான் சொல்வார்கள் ] வர இருப்பதை குறிப்பிட்டான்.
அடுத்த 5 நிமிடத்தில் SM குருசாமி பூரியைத்தின்று விட்டு ஓட்டமும் நடையுமாக வந்து பிளாட்பார விளிம்பில் டச்சக் என்று தாவி உள்ளெ சென்று போனில் 1503 அ வுட்டாஎன்று கேட்டு விட்டு சன்னாசீ சன்னாசீ என்று கூவினார். வரேன் சார் என்று சன்னாசி இப்போது டைன் டைன் டைன் என்று மும்முறை அடித்து வண்டி நெருங்கிவிட்டதை முறைப்படி அறிவித்தான் ,கையில் கொடியுடன் சிட்டாய் பறந்து வெகு தொலைவில் கரும் புள்ளியாக பச்சைக்கொடியை விரித்து உயர்த்திப்பிடித்துக்கொண்டு வண்டி செல்லப்போகும் திசை நோக்கி திரும்பி நின்றான் ;இல்லையேல் புழுதியை சுவாசிக்க நேரிடும். பச்சைக்கொடி இல்லையேல் எஸ்ப்ரெஸ் கட்டை வண்டியாய் ஊறும். சன்னாசிக்கு தனது கொடி அசைத்தல் இல்லையேல் எந்த வண்டியும் அசையாதென்ற பேருவகை உண்டு. கொடியை அசைக்காவிடில் வேலை போய்விடும் என்பதை அறியாதவன். வண்டி பாய்ந்து சீறிப்போனவுடன் சன்னாசி நாக்கை த்துருத்தி ப் துப் . ப் துப் என்று தூசிகளை வெளியேற்றிக்கொண்டே வர திரிபாதி ஸ்கூட்டரிலிருந்து இறங்கினான். மணி 7.52. டிக்கட் கடையை திறந்தான் திபு திபு என்று 10-12 பேர் விருதுநகர் செல்லபாசஞ்சர் டிக்கட் எடுத்தனர் . ரா. க எழுந்து சோம்பல் முறித்துவிட்டு அம்மளுக்கு 2 டிக்கட் போடுங்க. எங்க போக என்றான் திரிபாதி. சமஸ்டிபூர் என்றார் ரா. க . அதுஎங்க இருக்கு? --- திரிபாதி. ராக : பீஹார்.
இங்கே நம்பால் ஊர்லே டிக்கட்டே கடிக்காதூ. நீங்கோ மத்ரே போங்கோ. அங்கே போயி எல் தி குடுங்கோ என்கி போர்தூ எப்போ வாப்பஸ் வார்தூ அல்லா எல் தி தந்தாகி டிக்கெட் அவரு தர்தூ. மத்ரே போங்கோ என்று மதுரைக்கு போக சொன்னான்.
ராஜ்கண்ணுக்கு மலைப்பாக இருந்தது : மதுரைக்கு போக அல்ல எல் தி கொடுக்க சொல்றாரே அதுக்கு தான். அது ஒரு தனிக்கதை .
தொடரும்
பேரா
ராமன்
கள் ளிக்குடியிலிருந்து சமஸ்டிபூருக்கி டிக்கெட்எடுக்க மருதைக்குப் போகச்சொல்றாங்ய. இப்ப நான் மருதைக்கு எப்படிப் போவேன?
ReplyDeleteவெங்கட்ராமன்