ஐயா----- தர்மம் போடுங்க
கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட குரல் .ஆம் குரலைத்தான் சொல்கிறேன் தொழிலை அல்ல. என்ன தொழிலா என்று யாரும் மலைக்க வேண்டாம். பிற எந்த தொழிலுக்கும் தொழிற்சாலைக்கும் விடுமுறை உண்டு. ஆனால் யாசகத்துக்கு அது போன்ற விதிகள் கிடையாது.வீதிகள் உள்ளவரை காலை முதல் பின்னிரவு வரை அமோகமாக நடைபெறும் ஒரு சமூக சேவை அல்லவா? அதிலென்ன சமூக சேவை என்கிறீர்களா? அவ்வப்போது நாம் வேண்டாம் இது என்று நினைக்கும் எந்தப்பொருளையும் தயங்காமல் தந்துவிட உதவியாக இருப்பவர் யாசகர் மட்டுமே - ஆனால் 8 அணா 4 அணா தந்தால் திருப்பி தருவான் அல்லது சென்னை மொழியில் வசை படுவான். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனும் முதுமொழி காப்பது இறைவனும் இவனும் [யாசகன் ] மட்டுமே. ஆம் யாசகம் இல்லாத இடம் என்று ஒன்றை அடையாளப்படுத்த முடியுமா? என்னால் முடியவில்லை. எந்தக்கோயில் வாசலிலும் இருமருங்கிலும் அணிவகுத்து guard of honour போல் வணக்கம் செலுத்தி வரவேற்கும் படை அல்லவா அது!
கில்ச் கில்ச் என்று சில்லறைக்கப்பரையைக்குலுக்கி நம்மை வரவேற்போர் யாசகர்களே. போகட்டும் 1960 களில் கர்நாடக மாநிலத்து பாசஞ்சர் ரயிலில் பயணித்தால் ஒரு அற்புத TRANSACTION எனும் பரிவர்த்தனை நடப்பதைக்காணலாம். யாசகன் கையில் 1 ரூபாய் வைத்துவிட்டு 98 பைசாவை அவனிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள். சில்லறை மாற்ற சிறந்த நிர்வாகம் யாசகனின் உள்ளங்கையே எனில் மிகை அல்ல. அதை தூக்கிசாப்பிட்டுவிடும் STOCK EXCHANGE பழனி முருகன் கோயில் படிக்கட்டுகளில் இருக்கும் யாசகர்கள். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கீழிறங்கும் முன் ஆரம்ப படிகளில் இருப்பவன் MAIN
ADMINISTRATOR . அவனிடம் 100 ரூபாய் தந்தால் அடுத்தவினாடி அவன் கேட்பது எப்படி வேணும்? [DENOMINATION]
2 பைசா தொடங்கி அவன் தயார் நிலையில் பொட்டணம் போட்டு வைத்திருப்பான். நீங்கள் படிக்கு 5 பைசா வோ எப்படியோ தானம் செய்தபடி புண்ணியத்தைக்கட்டிக்கொண்டு மிகுந்த மனநிறைவுடன் அடிவாரம் வந்து சேரலாம். அப்போதெல்லாம் படிவழிப்பயணம் தான் இப்போது போல் rope car இல்லாத காலத்தில் தர்மம் தழைத்தோங்கியது என்பது அதிகாரப்பூர்வ உண்மை.
இப்போது தர்மம் செய்தல் அவ்வளவு எளிதல்ல . 1
ரூபாய் தந்தால் டீ குடிக்க தாங்க என்று TERMS FIX பண்ணுபவர் தான் யாசகர். யாசகத்தில் பல வகை உண்டு.
FOISTED FAMILIARITY வகை
அதாவது நன்கு அறிந்தவன் போல மொழியாடல்: அண்ணா எப்பிடி இருக்கேள் மன்னி சௌக்கியமா என்பான். நீ யாரப்பா என்றதும் என்னண்ணா இப்படி மறந்துட்டேள் என்பான்.
போலீஸ்க்காரனுக்கு ஏதடா மறதி என்று அவனை நோக்கி நகர்ந்ததும் பார் மகளே பார் படத்தின் பாடல் போல அவன் பறந்து போனானே என்று சொல்லுமளவுக்கு 4 கால் பாய்ச்சலில் சந்து பொந்துகளில் ஓடி மறைவான்
இன்னொரு வகை
அண்ணா எப்பிடி இருக்கேள் மன்னி சௌக்கியமா என்பான். நீ யாரப்பா என்றதும் என்னண்ணா இப்படி மறந்துட்டேள் என்பான். உடனே இன்னும் சாப்பிடவில்லை என்பான். சரி போய் சாப்பிடு என்றால் தலையை சொறிவான். இட்லி சாப்புடணும் அண்ணா என்பான். சரி வா இட்லி வாங்கித்தருகிறேன் என்றதும் இட்லியின் ஆவியை விட வேகமாக காற்றில் மறைவான்
மின்சார ரயிலில்
மிக சிறப்பாக யாசகம் நடைபெறும் இடம். TABLE TENNIS மட்டைகளை வைத்துடிக்கி டிக்கி டிக்கி என்று ஒலி எழுப்பி "மலர்களைப்போல் தங்கை .... உடனே ஐயா என்பான் பின்னர் உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பான் என்று மீண்டும் ஐயா என்பான். இதற்குள் ஒரு சிறுமி அனைவரிடமும் உள்ளங்கை உண்டியலில் நிதி திரட்ட இவன் கண் குறைபாடு உள்ளவன் போல் தரையைப்பார்ப்பான் ஆனால் சரியாக பிளாட்பாரத்தில் கால் பதிப்பான். நம் முன்னிலையிலேயே வேறு கள்ள குடு என்று வாங்கி கொரிப்பான். ரயில்வே போலீஸ் பிடித்ததும் "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கைது பண்ணும் தர்மம் திரியும் வெல்லும்” என்பான்
பேருந்து நிலையம் பன்முக யாசகக்களம்
வித்தை காட்டி : டம டம என்று ஒரு பெண் தாளம் தட்ட ஒருவன் தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு, மல்லாந்து சைக்கிள் மீது சாய்ந்து வட்டமாக சுற்றிவர வேறொருவன் இப்போ பாம்புக்கும் கீரிக்கும் சண்டை உடப்போறேன் அல்லா மனுசாளும் ஜோரா கைதட்டுங்க. மாய வலையில் சிக்கியவர்கள் கைதட்ட , ஒரு சிறுவனை கண்ணை கட்டி படுக்க வைத்து "அந்த பச்சை சட்ட சார் என்ன வெச்சிருக்கார் ? பையன்: துணிப்பை
அதுல என்ன வெச்சிருக்கார் ? பையன்: பணம் , கத்திரிக்கா
தேவி ஜக்கம்மா ஆணையில பையன் கர்ட்டா சொல்ரான். அதுனால காசு போடுங்கோ இல்லாட்டி ரத்தம் கக்கி சத்துருவீங்கோ என மிரட்டுவான். ஓரிருவர் நழுவப்பார்க்க
அவன் போ போ நல்லா போ இப்ப தெராது ராத்திரி ரத்தம் கக்கி சாவும் போது அய்து இன்னா ஆவும் என்று மிரட்டி யாசிப்பான்.
வேறொருவன் தொலை தூர பஸ்ஸில் ஒவ்வொருவர் மடியிலும் அச்சடித்த அட்டையை வைத்து ஊமையை ப்போல் பாசாங்கு செய்து காசு கேட்பான். அட்டையில் அப்துல் கலாம், மன்மோகன் சிங் ஆர் வெங்கடராமன் போன்ற ஒருவர் அவனது அருமைபெருமைகளை சொல்லி உதவி கோரி யிருப்பார். அவர்களின் செல்வாக்கிற்கு
ஏதாவது நிரந்தர ஏற்பாடே செய்துவிடலாம். ஆனால் இது போன்ற யாசகர்கள் ஏதோ எழுதி அவர்களின்
பெயரை தவறாகப்பயன்படுத்துகின்றனர்..
பேரா ராமன்
பிச்சை எடுப்பதிலும் பல வகை கண்டீர் .அதன் பள்ளியில் படிக்கும்போது இராப்பிச்சை என்று சிலர் வருவார்கள் . அவர்களுக்கு பழைய சோறு மிஞ்சியிருந்தால் போடுவது வழக்கம் . ஒரு முறை ஒரு கல்கயாண வீட்டில் சாப்பாடு மிஞ்சிப்போனது. உடனே அங்குள்ளவர் பிச்சைக்கார்ர் சங்கத்திற்கு போன் செய்தார் . ஒரு ரிக்ஷாவில் கொடுத்துவிடுமாறு பதில் வந்தது. இவர்களுக்கும் சங்கம் இருக்கு என்று தெரிந்தது.
ReplyDeleteவெங்கட்ராமன