Sunday, December 11, 2022

குதர்க்கம்

 குதர்க்கம்

 இருந்திருந்து தமிழில் மீண்டும் நுழையும்போதே இவனுக்கு இதுதான் கிடைத்ததா இன்று மலங்க வேண்டாம். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற அளவில் இதை அணுக வேண்டியது அவசியம்.

ஆம் வாழ்வில் பல தருணங்களில் தங்களை அறிவு ஜீவிகளாக பாவி த்துக்கொண்டு இது போல் விதண்டா வாதம் செய்வோர் அனே கர் எனவே இதை பார்க்க வேண்டியதாகிறது.

ஒரு நீண்ட கால நண்பர்கள்,  [சந்திப்பில்] ஒருவர் உயர் நிலையில் வாழ்பவர் மற்றவரோ, விவசாயம் செய்து வாழ்பவர் ஆனால் பொது  அறிவு செழிக்க வாழ்பவர்  அவர்கள் உரையாடல் இதோ

வணக்கம் நல்லா  இருக்கிறீங்களா ? என்றார் லோகு

தியாகு : நல்ல இருந்தா என்ன -டொனேஷன் கேப்பியா - சல்லிக்காசு போறாது/

ஐயோ அதெல்லாம் இல்லீங்க ஒரு மரபாத்தான் வணக்கம் சொன்னேன்என்றார் லோகு

தியாகு : பெரிய மரபுப்படித்தான் வாழுரியாக்கும்? சும்மா பெனாத்தாத   

லோகு அடக்கம் வழுவாமல்  , எப்படி வாழ்ந்தாலும் வணக்கம் செலுத்துனா தப்புயில்லீங்களே என்றார்.

தியாகு : ஏன்யா திரும்பியும் தப்பு ரைட்டுன்னு ஏதோ விளக்கம் சொல்றியே ,சரியான பட்டிக்காட்டான்யா நீ என்றார் ;

லோகு: ஆமாங்க நான் பட்டிக்காட்டான்னு எவ்வளவு ஈஸியா கண்டுபிடுச்சிட்டீங்க என்று வஞ்சப்புகழ்ச்சியில் பேச , தியாகு அகமகிழிந்து முகம் மலர்ந்தார்.

இப்போது மனதிற்குள் சிரித்தார் லோகு.

லோகுவிடம் தியாகு வசமாக சிக்கினார்.

ஸ்ருதி இறங்கிய தியாகு ஏன்யா லோகு எனக்கு முட்டி வலி அதிகமாயிருக்கு, முடக்கத்தான் பத்து போட்டா நல்லதுன்னு சொன்னாங்க அத கொஞ்சம் பறிச்சு தாயே ன்  என்றார். .

இப்பத்தான் மழை பெய்ய ஆரம்பிச்சிருக்கு ஒரு 10 நாள் தள்ளி வாங்க பறிப்போம் என்று அருகில் இருந்தமுடக்கத்தான் பற்றி அறியாதவர் போல ஏமாற்றினார். நீங்கல்லாம் ரொம்ப படிச்சவங்க on line லியே முடக்கத்தான் வாங்கிப்புடுவீங்க நாங்க கிராமத்து ஆளுக இயற்கையை நம்பி வாழறவங்க என்று தியாகுவை அலைய வைத்து குதர்க்கத்தை தவிடு போடி ஆக்கினார் லோகு.

பேரா . ராமன்

1 comment:

  1. வாய்யா லோகு என்ன இந்தப்பக்கம்
    அத்தி பூத்தாப்பல போல இருக்கு
    உங்களைப் பார்த்து நாளாச்சேன்னு வந்தேன்
    நாட்டல விவசாயம்லாம் நல்ல நடக்குதா
    அதுபாட்டு போயிட்டிருக்குங்க
    அப்ப நாளைக்கு வாரும் பார்ப்போம்
    வெங்கட்ராமன

    ReplyDelete

INDIA’S BUNKER BURSTER

  INDIA’S BUNKER BURSTER  [AGNI BOMBS ] பங்கர் தகர்ப்பு குண்டுகள் பதுங்கு குழிகளை BUNKER என்கிறோம் . இவை சாசுதாரண குழிகள் அல்ல , ...