Thursday, December 22, 2022

LASER IN SRIRANGAM -9

 

LASER IN SRIRANGAM -9

ஸ்ரீரங்கத்தில் லேசர் -9

மணி 9.00 கழுகு பிரசன்னம் . உங்கள ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயிட்டு 5.00 மணிக்கு வரேன் . எல்லா ஏற்பாடும் நடந்துண்டிருக்கு அம்புஜம் பாத்துப்பா -சாப்பாடு ஆனா எங்க ஆத்துல தான் . பையன் காப்பி வாங்கித்தந்தானா? என்று கேட்டுக்கொண்டான்  "A " கிளாஸ் காப்பி கொண்டு வந்தான்

முரளி கடையில வாங்கியிருப்பான் நல்ல கெட்டிக்காரப்பையன் ஒழுக்கம் மரியாதை எல்லாம் தெரிஞ்சவன் , நன்னா முன்னுக்கு வருவான் தைரியமா எங்க வேணாலும் சேத்துவிடலாம்- நம்ப பேர நிச்சயம் காப்பாத்துவான்.

அவர்களை காரில் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு ஆபீஸ் புறப்பட்டான். காரி னில் இருந்து இறங்கியதும்  அம்[பு]ஜம் / கல்யாணி அழகாக ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தனர். எதற்கு இதெல்லாம் ? -லேசர் .

ஒரு மங்கள காரியத்துக்கு வரச்சே கண்டிப்பா ஆரத்தி எடுக்கணும் எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி விட்டு இப்போது வித்யாவின் கன்னங்களில் இருபுறமும் விரல் வைத்து , தனது  நெற்றிப்பக்கங்களில் விரல் முறித்து திருஷ்டி கழித்தாள் அம்ஜம் .

அம்ஜம் எளிய ஆனால் சுவையான பருப்பு  உசிலி, எலுமிச்சை ரசம் + பரங்கிக்காய் சாம்பார் ஜமாய்த்திருந்தாள் . சரியாக 11.50 ஆட்டோ வில் தெற்குவாசல் சென்றனர் . நாச்சிமுத்து , பழனியப்பா கடைகளில் வேண்டிய வஸ்திரங்கள் வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து விட்டு அதே ஆட்டோவில் திருச்சி மங்கள் / மங்கள் குள பாத்திரம் , போசி , வெள்ளி தம்ளர் ,பிக்ஷாந்தேஹி  பாத்திரம் ,மலை வாசலில் 4 கவுளி வெற்றிலை , வாசனை சுண்ணாம்பு ARR சீவல் , வாங்கி க்கொண்டு 3.40க்கு ஸ்ரீரங்கம் திரும்பினார். லேசர்  டிஜிட்டல் வாச்சில் ரூமில் வந்தபோது 3.42 . 4 மணி நேரத்தில் எல்லாம் வாங்கலாம் என்று மிலிட்டரி துல்யமாக சொன்னாளே அப்பா என்ன கணக்கு பலே கெட்டிக்காரி தான் என்றே தீர்மானித்தாள்  வித்யா.. மாலை  5  மணிக்கு வாத்யார் நரசிம்மன் வர அதே சமயம் கழுகு வந்தான் ரூமுக்கு. ஓய் வாத்யாரே எல்லாம் க்ரமமா பண்ணனும் பையன் ஒழுங்கா ஆசையா சந்தி பண்றா மாதிரி அப்பியாசம் பண்ணித்தரணும் . வேண்டாத கூட்டத்தை கூட்டிண்டு வந்தா தக்ஷிணை பெய றாது, நான் தான் கேஷ்  பாத்துக்கப்போறேன் ஞாபகம் இருக்கட்டும் , இந்தாரும் 500/- ரூபாய் கரெக்ட்டா பூணல் ஏற்பாடு பண்ணி கொண்டு வாரும் மிச்சத்தெல்லாம் பந்தல்ல பாத்துக்கலாம் . பந்தல் எங்க ?

வீயார் கல்யாண மண்டபம் ஒய் .

சரி சரி வெள்ளிக்கிழமை காலம்பற 5.10 க்கு ஆரம்பிச்சுடலாம் பொம்மனாட்டிகள் சரியா ஒத்துழைச்சுட்டா எல்லாம் சரியா நடக்கும். அப்பதான் மடிசார் உடித்துண்டு வரேன் னு லேட்டா வராம இருந்தா போறும்.. இப்போது வேதாந்த மீண்டும் கலங்கினான். ஏன்

கழுகு வித்யாவிடம் சொன்னான் சரியா 4 மணிக்கு அதிகாலை குளிச்சு ரெடி யா இருங்கோ மடிசார் உடுத்தி விடணும் என்றான்.

ஐயோ ராமசாமி இன்னும் அதையே சொல்றானே குருவாயூரப்பா என்று மிரண்டு போய் ஏண்டா மாமி கிடைக்கலையா என்றான் வேதாந்தம்  . இப்போது அம்ஜம்   இவா ரெண்டு பேரும் மாமி மாமி னு அலையறாளே . சரி ராமசாமியை அடக்கி வெக்கணும் என்று தீர்மானித்தாள்.

கழுகு "டேய் சூப்பர் மாமியை பிடிச்சிருக்கேண்டா நீயே அசந்துடுவ பார் என்றான். வேதாந்தம் காஸ் ற்றில் சோடா குடித்தவன் போல பெரும் மூச்சு விட்டு உபாதை நீங்கியவனாக அமைதி ஆனான்.

சூப்பர் மாமியாமே எவ அவ நமக்குத்தெரியாம பெரிய பட்டாளமே இருக்கு போலிருக்கே குருவாயூரப்பா என்று வேண்டினாள் அம்ஜம்.

 அழைக்கப்போலாமா என்று ஆரம்பித்த லேசரிடம் , அம்ஜம் இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு காலம்பற இன்னும் கொஞ்சம் பூவுக்கு ஏற்பாடு பண்ணிட்டு மத்தியானம் 3மணி- 6.30 க்குள் முடிச்சுடலாம் . ராத்திரிக்கு இட்லி கொத்சு சாப்பிடலாமா என்றாள் . லேசருக்கு கொத்சு பெயர் சரியாக நினைவில்லை இரண்டொரு முறை சொல்லிப்பார்த்தாள் -கொத்சு கொத்சு என்று ..

இரவு அம்ஜம் யார் சூப்பர் மாமி ?

அது சஸ்பென்ஸ் என்றான் கழுகு. இப்போது அம்ஜம் வயிற்றில் புளியைக்கரைத்தான் . ஒன் சிபிஐ வேலையை எங்கிட்ட காட்டாதே ன்னா கேக்கறியா -அதுனால இனிமே எல்லாமே சஸ்பென்ஸ் என்று நல்ல தும்கூர் புளியாக கரைத்தான்

தொடரும்.

அன்பன்    ராமன்

1 comment:

  1. ஓய் கும்பகோணம் வெத்திலை , நெய்வருவல் ARR சீவல், சிப்பிச்சுண்ணாம்பு , மேல ஒரு சிட்டிகை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் எடுத்த அங்கு விலாஸ் புகையிலை வாயிலே போட்டுண்டு
    ஜமாச்சுடுவோம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...