HORSE- LASER EXCHANGES
குதிரை -லேசர் பரிமாற்றம்
அமைச்சரக அனுமதி மாலை 3.20க்கு வந்தது . உடனே லேசர், சில நாட்களை குறிப்பிட்டு ஏதேனும் இரண்டினை முடிவு செய்து மின்னஞ்சல் [e -mail ] மூலம் அனுப்புமாறு சுபத்திராவுக்கு தெரிவித்தாள் ; குதிரை அடுத்த 15 நிமிடங்களில் 2 குழுக்களாக [1+2 ] [1+2] 1= சுபத்திரா, 2= பிற இருவர் பெயர்களுடன் X OR Y என்று 2 தேதிகளுடன் பதில் அனுப்பி விட்டாள் 20 நிமிடங்களில்.
அடுத்த 8 நிமிடங்களில் பெயர் வயது, முகவரி விவரங்களுடன் போன் மூலம் வாங்கிவிட்டாள் லேசர். மாலை வேளையில் மத்திய அமைச்சகம் சுறு சுறுப்பானது.. ஆம் டெல்லியில்முக்கிய பகுதியில் 2 நாட்களும் இரண்டிரண்டு அறைகள் [1 குதிரை ]மற்றிருவர் வேறோர் அறையில் என அரசு ஏற்பாடு செய்துவிட்டதை லேசர் போனில் சுபத்ராவிடம் தெரிவித்தாள் . FLIGHT தகவல்கள் கைக்கு கிடைத்ததும் அனுப்புகிறேன் என்றாள் லேசர்.
இப்போது குதிரை லிரில் சோப்பு அருவியில் திளைத்துக்குதித்தது . அது மட்டுமா மாலையே கழுகின் வீட்டிற்கு ஓடினாள் சுபத்திரா.
குதிரையைக்கண்ட அம்ஜம், வா -- சித்த உட்கார் பெருமாளுக்கு விளக்கு ஏத்திட்டு வரேன் என்றாள் .சுமார் 20 வினாடிகளில் ராமசாமி "எங்கே சுபி ? இங்க வந்தாப்ல இருந்ததே என்று கேட்டுக்கொண்டே வந்தான். இந்தாளுக்கு எப்படி மூக்கு வியர்க்கிறது ? எங்கே சுபி ங்கறாரே [ லக்ஷ்மி மாமி சொன்னது மீண்டும் எதிரொலித்தது --" தெரியாதா? அவன் பேரே கழுகு டி " என்று முன்பொருநாள் தெரிவித்தது ] அப்பா இந்த ஆசாமி பலே கில்லாடி தான். ]
இவ்வளவு நேரமும் விளக்கேற்றும் அறையில் கண்மூடி இறைவனுக்கு நன்றி தெரிவித்தாள் சுபத்ரா. இப்போது ஹாலுக்கு வந்ததும் ராமசாமியின் காலில் நமஸ்கரித்தாள் சுபத்ரா. அம்ஜம் அட்சதையுடன் வந்ததும் தம்பதியினர் ஆசி வழங்கினார். எல்லா விவரமும் தெரிவித்தாள் சுபி .
அம்ஜம் சுபியிடம் சொன்னாள் " டில்லிக்குப்போனா நான் வித்யாவை ரொம்ப விசாரிச்சேன் னு சொல்லு, அவ தான் என்ன மறந்துட்டா என்று குரலில் ஒரு ஏக்கம் தொனிக்க பேசினாள் . சுபி சொன்னாள் "மறந்திருக்க'/ மாட்டா , ஏதோ வேலையில பேச முடியாம இருக்கலாம் இல்லையா" ? அம்ஜம் கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை . சில நேரங்களில் யதார்த்த நிகழ்வுகள் கூட சிறு சிறு கசப்புகளை ஏற்படுத்துவதற்கு இவை கூட சான்று தான்.
மீண்டும் போனில் லேசர் சுபி யிடம் நீங்க எல்லாரும் ஒரே FLIGHT ல வரலாம் ஏன்னா டிக்கெட் / ரூம் புக்கிங் ஒரே மாதிரி ஏற்பாடு செய்தால் தப்பு நடக்காது னு PRINCIPAL SECRETARY அபிப்ராயப்படறார் என்றாள். சுபி OK நாளைக்கு STAFF MEETING ல FINALISE பண்ணிட்டு உடனே கன்வே பண்றேன் " என்றாள் . உடனே சமயோசிதமாக லேசரிடம் இதோ அம்புஜம் மேடம் இருக்கா -அவங்களோட பேசுங்கோ என்று அம்ஜத்தை சற்று குறை தீர்த்தத்தாள் .
ஹலோ -சவுக்கியமா இருக்கேளா எத்தனை ஜென்மா எடுத்தாலும் உங்களையும் உங்க சாரை யும் விநாடிப்பொழுது கூட மறக்கமுடியாது, குழந்தை [பத்ரி ] தினமும் உங்க நினைவாவே இருக்கான். நீங்களும் எல்லாரும் டெல்லிக்கு அவசியம் வரணும் . ஏன்றாள் லேசர் .
உங்க ப்ரோக்ராம் எல்லாம் நன்னா ஆகட்டும் அப்புறமா வந்துட்டா போறது என்றதுடன் அம்ஜம் வாழ்த்தும் தெரிவித்தாள் . ஆங்கிலத்தில் RECIPROCATION என்பார்களே அதுதான் நட்பை மேலும் ஆழப்படுத்தும் என்பதை மெய்ப்பிக்கும் உரையாடல் இது.
மறுநாள் ஒப்புதல் தெரிவித்து அனைவரும் ஒரே ட்ரிப்பில் வருவதாக லேசரிடம் தெரிவித்தாள் சுபி. சுமார் 2 மணி நேரங்களுக்குப்பின் e -mail இல் PDF இல் விமான டிக்கெட் அத்துடன் லேசரின் தகவல் ; அதாவது AIRPORT இல் சுபி யின் பெயர் கொண்ட, பெரிய பதாகையுடன் டிரைவர் -வேலுச்சாமி [MINISTRY இல் 20 வருடமாக பணி செய்பவர் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர், டெல்லியின் பாதைகளை நன்கறிந்தவர் உங்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ள சரியான ஆள் ஏற்பாடு செய்துள்ளேன் -- வித்யா என்று தெரிவித்திருந்தாள் ]
அங்கே டெல்லியில் லேசர் அலுவலகத்தில் வேலுச்சாமி " மிகுந்த நன்றிப்பெருக்குடன் நம்ம ஊர்க்காரங்களாம்மா , நான் கவனமா கூட்டிக்கிட்டு ரூமில் விட்டுவிட்டு, எங்கெங்கெல்லா போகணுமோ பத்திரமா கொண்டு போய் சேக்கிறேனம்மா என்று மகிழ்ச்சி பொங்க கை கூப்பி நன்றி தெரிவித்து விடை பெற்றான். தொடரும் அன்பன் ராமன்
Laser operation or administration is perfect. Subi is ready to fly
ReplyDeleteVenkataraman