Wednesday, January 25, 2023

IS IT REAL?

 IS IT REAL?

கனவா நனவா

குதிரை அனுப்பியிருந்த ஏற்பாடு விவரங்களைப்பார்த்த லேசர் வித்யா , திடீரென்று நவராத்ரி சினிமாவில் சிவாஜி கணேசன் பேசியது போல "அடித்தொண்டையில் இது என்ன கனவா நனவா” என்று தனக்குத்தானே பேசி வியப்பில் ஆழ்ந்தாள்.. உடனே PRINCIPAL  SECRETARY  உடன் பேசி DETAILED BRIEFING BY FIELD CO-ORDINATORS க்கு 2 தேதிகள் மற்றும் TIME வாங்கி உயர் அதிகாரிகள் பங்கெடுக்க வேண்டும் என்ற விவரத்தையும் சுற்றறிக்கையாக தயார் செய்து முக்கிய துறைகளுக்கு  PRINCIPAL  SECRETARY கை ஒப்பம் , அனுப்பிவிட்டாள் .

பல நிகழ்ச்சிகளி ன் பெயர்கள் வடநாட்டில் புதிகாக பார்க்கப்பட்டது. ஆமாம் இதையெல்லாம் வித்யாஜி விளக்குவார்களா என்றே அதிசயித்தனர். வித்யாஇல்லை இல்லை இவை செய்து தர ஒரு யூனிவர்சிட்டி பேராசிரியர்கள் வர இருக்கிறார்கள் . அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்ய , போக்குவரத்து, உணவு என எல்லா budget செலவினங்களை யும் அனுமதித்து ஒப்புதல் பெற உங்களின் ஒத்துழைப்பு தேவை” என்றாள் வெகு விரைவில்நிதி வழங்கப்படும் என்றார் FINANCE  SECRETARY ; மேலும் கோ-ஆர்டினேட்டர்  [சுபத்ரா + 2 ASSISTANTS ] 2 விசேஷ அறிமுக டெமோ எனப்படும் விளக்க கூட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. தேதிகளை அமைப்பாளர் வித்யாஜி தெரிவிப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டு ,PMO அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிட்டு விட்டது.]

அன்றிரவே போனில் வித்யா சுபத்திரா விடம் விளக்கமாக தெரிவித்தாள் . அடுத்த 2 தினங்களில் வீடியோ/ SLIDE விளக்கமாக தயாரித்துவிட்டு , குறுகிய அவகாசத்தில் 3+ 3 இரு குழுக்களாக  டெல்லி செல்லவும் அனுமதி பெற்று 5, 6 பேரை ஆயத்தப்படுத்தி [100% PREPAREDNESS ] நிலையில் சுபத்ரா தயார். பல நிகழ்ச்சிகளைக்  கையாண்டவள் என்றாலும் அரசாங்க -பன்னாட்டு அடையாளம் அவளுக்கு புதிய சவால். உடனே நினைவுக்குள் ஒளிர்ந்த தெய்வம் சமயபுரம் மாரியம்மன் . அதிகாலையிலேயே சமயபுரத்தில் சுபத்ரா ஆஜர்.உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரி  என்ற ஆழ்ந்த வேண்டுதலுடன் மாரியம்மா எங்களை க்கரையேற்று என்று நெக்குருக வேண்டினாள் .எந்த ஒரு பெரிய ஆளுமையும் கூட இறை அருளை வேண்டுவது என்ற கலாச்சார பழக்கத்திற்கு சுபத்ரா எப்படிவிதி  விலக்காக இருக்க முடியும்? மாரியம்மாவின் மாலையில்  இருந்த ஒரு ரோஜா "அப்படியே ஆகட்டும் என்பதைப்போல  கீழே சரிந்து இறங்கியது. ஆனந்தக்கண்ணீரில் குதிரை  அல்லது சுபி என்னும் சுபத்ரா  . வீட்டுல சுபி தாயின் தாள் பணிந்து ஆசி பெற்றாள். எப்ப ருக்கு போகணும்? என்றாள் தாய் / தெரியல ஆனா இன்னும் 4-5 நாளி ல் இருக்கலாம் என்று   வீட்டில் இருந்த தெய்வங்களை மானசீகமாக வேண்டி நின்றாள் .பொறுப்பை சுமப்பவர் யாராயினும் இறைவன் தரும் சாந்த ஆசி ஒருஆழ்ந்த தெம்பையும், அமைதியையும் நம்மோடு பிணைத்து விடும் என்பதை அனுபவம் மாத்திரமே உணர்த்தும். வேலை நாட்களில் தனது துறை சகாக்களுடன் நிகழ்ச்சிகளின் துல்லியங்களை அணு அணுவாக விவாதித்தாள் சுபத்ரா.  அனைவருமே தத்தம் திறமை பளிச்சிட பங்களிக்க வேண்டுமென்று மனப்பூர்வமாக விரும்பினார்கள் மாரியம்மன் விருப்பத்திற்கு மாறாக யார் என்ன செய்து விட முடியும் ? இது தான் இறையருள் என்றும் கடாக்ஷம் என்றும் பேசப்படுவது . அது இவர்களில் பலருக்கு ஆழமாக சித்திக்கிறது என்பதே நிதர்சனம்..

அது இப்போது லேசர் தலைமையில் நிகழ அங்கே குருவாயூரப்பனும் , ரங்கநாதரும் ஒரு சேர அருள் பாலிக்க நாட்கள் நகர்ந்து உரிய தேதிகள் பிறக்க வேண்டும் அவ்வளவே. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண மஸ்து .

தொடரும்       அன்பன் ராமன்

1 comment:

  1. சமயபுரம் மாரியம்மன் சுபத்ராவிற்கு அருள் புரிவாளாக
    வெங்கட்ராமன்

    ReplyDelete

COMPETENCE - IS IT A GIFT?

  COMPETENCE - IS IT A GIFT? Too much has been said and heard of it, but little has been understood by the learner-stage youth. There is a...