LASER IN SRIRANGAM -12
ஸ்ரீரங்கத்தில்
லேசர் – 12
கம்பீரமான 2 குத்துவிளக்குகள் அவ்விடத்தை அலங்கரிக்க , பத்ரி சிறிய ஆட்டுக்குட்டி போல் கழுத்தில் தங்க செயின் மற்றும் முத்துமாலை யுடன் வந்தான் . உக்காருடா குழந்தே என்று வாத்யார் நரசிம்மன் அவனை உரிய இடத்தில் அமர்த்தினார்.. நான் சொல்றத ஒன்று விடாமல் சரியாக ஸ்பஷ்டமாக சொல் என்றார் .
நிறுத்தி நிதானமாக சங்கல்பம் தொடங்கி அனைத்தையும் முறையாக பத்ரி க்கு புரியும் படி சொல்லி , பெற்றோரை மணையில் நிற்கச்சொல்லி பூர்வோத்தர தொடர்புகளை வரிசையாக சபையில் சொல்லி, கிரமமாக அரங்கேற்றி ,வந்திருந்த உறவினர்களை பையனை ஆசீர்வதிக்க சொல்லி தனித்தனியே அக்ஷதை சேர்ப்பித்தார்.. எதையும் புறக்கணிக்காமல் முறையாக நடத்தி, குமார போஜனம், mini hair trim செய்வித்து , முடி திருத்தியவருக்கு வேஷ்டி சம்பாவனைமற்றும் அது தொடர்பான உள்ளிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி வைத்தார்.
அனைவருக்கும் உதிரிப்பூவும் /அக்ஷதையும், சுமங்கலிகளுக்கு புஷ்பம் கொடும்மா என்று லேசருக்கு சொல்லிவிட்டு . பகவானே ஈஸ்வரா என்று எழுந்து சிரம பரிகாரம் செய்துகொண்டார்.
ஏன் ஸ்வாமி கோவிந்தனை இன்னும் காணும் ? என்று வினவினார் [ஸ்வாமி கோவிந்தன் பழுத்த வேத வித்து , மற்றும் பண்டிதர்களாலேயே மதிக்கப்படும் பாண்டித்யம் கொண்டவர்] உதவியாளர் ரங்கன் “நேத்திக்கு சேலம் ஜட்ஜ் வைத்தமாநிதிக்கு சதாபிஷேகம் ராத்தரி வந்துடுவேன் னு சொல்லியிருந்தார் -டிரெயின் லேட்டோ என்னவோ” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே 12 திருமண் வைர கடுக்கன் ஜொலிக்க ---க்ஷமிக்கணும் சித்த கண் அசந்துட்டேன் என்று வாத்யார் நரசிம்மனை பார்த்து முஹூர்த்தம் ஆயிடுத்தா? என்றார் ப்ருஹஸ்பதி கோவிந்தன்
ஏ ள்ளா ஏ ள்ளா தேவரீர் வரணும் னு தானே காத்துண்டு இருக்கேன் . பையன் வந்ததும் ப்ரஹ்மோபதேசம் தான் . ஸ்வாமி அத நிறைவேத்திதரணும் னு பிரார்த்திச்சுக்கறேன் என்றார் கூப்பிய கரங்களுடன் வாத்யார் நரசிம்மன் .
பேஷா ஈஸ்வர சங்கல்பம் அப்பிடித்தான் னா - அடியேன் கட்டுப்பட்டுத்தான்னா ஆகணும்.
பட்டு உத்திரீயம் அணிந்து பத்ரி தாய் தந்தை இடையே நடந்து வந்தான் . அந்தக்காட்சியில் மெய் மறந்து நின்றார் ப்ருஹஸ்பதி கோவிந்தன்.
பூர்வாங்க ஜப -சிக்ஷைகள் ஆனதும் வெண் பட்டு கூடாரமென விரிய உள்ளே பத்ரி, வேதாந்தம், பிரஹஸ்பதி கோவிந்தன் அமர்ந்திருக்க லேசர் குள பாத்திரத்தில் தீர்த்தத்துடன் , ப்ரோக்ஷிக்க கூர்ச்சத்துடன் மற்றும் கூச்சத்துடன் ஒயிலாக வளைந்து நின்றிருக்க , காமெரா 2-3 முறை மின்னல் வெட்டியது. வீடியோ ஒளியை உமிழ்ந்து கொண்டே எல்லா காட்சிகளையும் விழுங்கிக்கொண்டே இருந்தது. 3 முறை காயத்ரி மந்த்ரம் சிறுவனின் காதில் தகப்பனாரை ஜபிக்கச்செய்து க்ரமாக ப்ரஹ்மோபதேசம் செய்து வைத்தார் ஸ்வாமி கோவிந்தன்.. குழந்தே இந்த மந்திரத்தை கெட்டியாக பற்றிக்கொள் ;காலம் காலமாக ரிஷிகள் வழங்கிய கொ டை போகப்போக இந்த மஹாமந்த்ரத்தின் சக்தியை நீ உணர்வாய் என்று ஆசீர்வதித்தார்.
கழுகின் அழைப்பில் கட்டுண்டு, ஒரு ஓரமாக கோவிந்தசாமி, தனம் நிற்க, சற்று தள்ளி லாவண்யா அவரவர் கையில் ஏதோ பரிசுப்பொருள் , பெருமாள் தாயார் , சக்கரத்தாழ்வார் படங்கள் . டிபன் சாப்பிட்டுட்டு வாங்கோ என்றான் ராமசாமி . சாப்பிட்டுட்டோம் சாமி என்றனர் மூவரும்.
அற்புத அனுபவமாக உணர்ந்தனர் பத்ரி,வேதாந்தம், வித்யா. மறக்காமல் கல்யாண கோஷ்டியினருக்கு கோ. சாமி, தனம் மற்றும் லாவண்யா ஆகியோரை அறிமுகம் செய்துவிட்டு , டேய் இவா இல்லே ன்னா , இவ்வளவு லக்ஷ்ணமா function நடந்திருக்குமா என்றான் கழுகு. உள்ளூர் நபர்கள் மூவரும் ஒரே குரலில் கழுகைப்பார்த்து நீங்க கேட்டு நாங்க செய்யாம இருப்பமா சாமி என்று நெகிழ்ந்தனர். அனைவருக்கும் வே -வி தம்பதி நன்றியும் வணக்கமும் தெரிவித்தனர், மேலும் இருந்து சாப்பிட்டுவிட்டு தான் போகணும் என்றும் தாம்பூலம் பெற்றுக்கொண்டே போகவேண்டும் என்றும், அவர்களுக்கு சேரவேண்டிய தொகையை சாப்பிட்டவுடன் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கௌரவமாக தெரிவித்தனர்.
பவ தி பிஷாந்தேஹி முறையாக செய்விக்கப்பட்டது .
கே.கு வின் நளபாகத்தில் விருந்தினர் அனைவரும் திளைத்தனர்.லேசர் உண்மையிலேயே வியந்தாள் - குழம்பு காய்வகைகள், சாற்றமுது, அக்கார அடிசல், பிற ஐட்டங்களை இவ்வளவுசுவையாக நிறைவேற்றிய வர்களுக்கு மனமார நன்றி பாராட்டினாள். இத்தனைக்கும் நடுவில் அம்ஜம் கை வண்ணத்தில் உருவாகியிருந்த திரட்டுப்பாலும் கொடிகட்டிப்பறந்ததை மறவாமல் நினைவு படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.
சற்றுமுன் சொன்னபடி தாம்பூலம், பணப்பட்டுவாடா பிரஹஸ்பதி சம்பாவனை உள்ளிட்ட இன்ன பிற செலவினங்களுக்கு ஆன தொகைகள் முற்றாக கொடுக்கப்பட்டு ஒரு ரம்யமான மன நிறைவு நிலவியது.
தொடரும் அன்பன் ராமன்
இப்படியாக ப்ரம்மோபதேசம் இனிதாக முடிந்தது
ReplyDeleteஅக்கார அடிசிலோடு சாப்பாடும் பிரமாதம்.
வெங்கட்ராமன்