Friday, January 6, 2023

LASER IN SRIRANGAM -13

 LASER IN SRIRANGAM -13

ஸ்ரீரங்கத்தில் லேசர்13

இத்தொடர் இவ்வளவு நாட்களை விழுங்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் ஏதோ கதை என்பதாக மட்டுமே இல்லாமல் மனித மனங்களைப்புரிந்துகொள்ள இதை ஓரளவிற்கு பயன் படுத்தியுள்ளேன்                          

நிறைகள் இறைவனின் செயல் குறைகள் அடியேனின் வெளிப்பாடு                  என க்கொள்க எனத்  தெரிவித்து , தொடரை நிறைவு செய்கிறேன் .

காலை மணி 11. 40. அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு , ஹாலில். நாற்காலி களில்  வட்டமாக அமர்ந்திருக்க , குதிரை வாலி மற்றும் காசிம் சில நிமிட இடை வெளியில் வந்தனர்.

என்ன காசிம்? என்றான் கழுகு. சாப்பிட்டுட்டு ஐயா வைப்பாத்து உத்தரவு வாங்கிக்கலாம் னு வந்தோம் என்று அவர் பின்னால் இருந்த நாதஸ்வர கோஷ்டியை கை காண்பித்தார் காசிம்

இன்னும் சாப்பிடவே இல்லையா ? பின்ன அதுக்குள்ள எங்க போயிட்டீங்க? என்றான் ராமசாமி.

உடனே காசிம்

"சாமி கோவிச்சுக்கப்படாது. முஹூர்த்தம் ஆனதும் ஒரு போன் வந்தது தில்லை நகருக்கு உடனே வாங்க னு . சரி னு நான் கிளம்பிப்போய்ட்டேன் இப்பதான் வரேன்”  எல்லாம் நல்ல விஷயம் தானே என்று குழம்பியவாறே ராமசாமி கேட்டான். "நல்ல விஷயம் தான், வர சான்ச  விடமுடியாதுங்க இல்லையா "-  காசிம்

ராமசாமி வியந்து பார்த்தான் .

காசிம் சொன்னான் "உங்களுக்கு தெரியாதது இல்ல. பாருங்க இப்பல்லாம் கோயில், ப்ராமின் இந்த ரெண்டு இடங்கள் தான் எங்களுக்கு வேலையே. பாக்கி ஜனங்க எல்லாம் செண்டை மேளம் அடிச்சா  போதும் னு தமிழ் நாட்டு நடை முறை ஆயிடுச்சு. ரொம்ப பெரிய பார்ட்டி யா இருந்தா அமெரிக்க கனடா, தமிழ் மக்கள் மார்கழி உத்சவம்  கூப்பிடுவாங்க.   இல்லேன்னா எங்க பாடு திண்டாட்டம் பெரியவர் இருந்த நாள் [சின்ன மௌலானா சாஹிப் ] டயரி நிரம்பி சில இடங்களுக்கு எங்களை போய் வாசிச்சுட்டு வரச்சொல்லி அப்பிடித்தான் நாங்க பெரிய இடத்துக்கு வந்தோம். இப்ப காலக்கோளாறு, ஒண்ணும் பேச முடியாது " என்று துயர நிலையை விளக்கினான்.  மாபெரும் கலைஞர்கள் கூட போராட வேண்டிய நிலையை என்னென்று சொல்வது? இத்தனையையும் மிக விஸ்தாரமாக கவனித்த குதிரை வாலி , கண்களை அகல  விரித்து , காசிமை ப்பார்த்து உங்க கார்ட் குடுங்கோ என்றாள்

[[ராமசாமி, அம்ஜம், , லேசர் வேதாந்தம் அனைவரும் கூர்ந்து பார்த்தனர்]

காசிம் தன்னுடன் சுருதிப்பெட்டி வாசிக்கும் பையனை 'கார்டு கொடுப்பா'          என்றான். பையன் கார் டை நீட்ட , கார்டு குதிரை வாலி கையில், காசிம் மின் பெயருக்குப்பின்னால் ஏகப்பட்ட உயர் பட்டங்கள் , விருதுகள் -பார்த்து குதிரை மிரண்டது.. சட்டென்று நினைவு  வந்தவனாக ராமசாமி அனைவரையும் அழைத்துச்சென்று சிறப்பாக விருந்து பரிமாறி கௌரவித்தான் . குதிரை வாலி உள்பட அனைவரும் மகிவுடன்   உண்டு மகிழ, ஒரு மூலையில் கே.கு இரண்டு கவளம் சாற்றமுது சாதம், ஒரு தம்ளர் நீர் மோர் அருந்தி மகிழ்ந்தான். மாபெரும் நளன் கள் இப்படித்தான் குறைவாக சாப்பிட்டு நிறை காண்பார்கள்.

சார் ராத்திரிக்கு என்ன மெனு என்றான் கே.கு.

நானே சொல்லட்டுமா என்றாள் அம்ஜம் . வெந்தய குழம்பு காய்ச்சின [சுட்ட] அப்பளாம் , வேற ஒண்ணு ம் எறங்கும் னு தோணல -என்றாள் . ஏக மனதாக ஒப்புக்கொண்டனர்.

ஹாலில் வந்து காசிம் பார்ட்டி க்கு   பணம், தாம்பூலம் பக்ஷணம் கொடுத்து நிறைவாக அனுப்பி வைத்தனர்.

குதிரை கிளம்பத்தயாரானது. உடனே லேசர் வேதாந்தத்துடன் கண்ணால் ஏதோ சொல்ல, அவன் உள்ளே ஓடினான். லேசர் குதிரையின் கைகளைப்பற்றியபடி ரொம்ப தேங்க்ஸ்  exceptional talent உங்களுக்கு என்றாள் . அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றது குதிரை. “என்னஒண்ணுமில்லை, அடுத்தவாளுக்கு உடுத்திவிடறது லேசுல வராது எல்லாருக்கும் என்றபடியே-- உங்களுக்கு என்ன கொடுக்கணும்” என்றாள். ஒண்ணும் தர வேண்டாம், அதோ அவர் சொன்னா நான் அப்பிடியே கட்டுப்படுவேன் என்று ராமசாமியை காட்டினாள். லேசர் வியக்க அம்ஜம் வியர்க்க , ராமசாமி பதறாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.”சரி ப்ளீஸ் என்ன கொடுக்கணும் சொல்லுங்கோ” என்றாள் லேசர்.

குதிரை பேச்சை மாற்றியது "வாட் ஆர் யூ "? லேசர் மெல்லிய குரலில் "HEAD -DEPT OF LASER APPLICATIONS -- MINISTRY OF DEFENCE - DELHI என்று சொன்னாள் . உடனே குதிரை 'NICE -உங்க CARD -IF  NOT  OF SECURITY CONCERNS -கொடுங்கோ . இல்லேன்னா AT LEAST போன் NUMBER எனக்கேட்டு இரண்டையும் வாங்கிக்கொண்டு நமஸ்தே என்று விடை பெற்று கழுகுக்கு கை  அசைத்தாள். கையில் பணப்பையுடன் வந்த வேதாந்தம் ஒண்ணும் வேண்டாமாமா என்று விக்கித்தான்.

இப்போது முதல் முறையாக லேசர்,  ராமசாமியைசார்” என்று அழைக்க ராமசாமி பவ்யமாக எழுந்து நின்று என்னம்மா? என்றான்

அவா ஒண்ணும் வாங்கிக்கமாட்டேங்கறாளே ரொம்ப EMBARRASSING இருக்கு என்று இழுத்தாள்.

"ஒண்ணும் வேண்டாம், .வாங்கிக்கணு ம்னா அவ வாங்காம போகவே மாட்டா. இன்னொரு FRIEND கிடைச்சாச்சுன்னு நினைச்சுக்கோங்கோ என்று கழுகு சமாதானப்படுத்தினான் 

சிறிய ஊர்களில் வாழும் மக்கள் நட்புக்கு தரும் மதிப்பில், பணம் மதிப்பிழந்து போகிறதென்பது உணர்த்தப்பட்ட தருணம் அது.

இப்போதுஅனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட கேப்டன் குக் பணம் பெற்றுக்கொள்ள காத்திருக்கிறான்.ஒரு தட்டில் பழங்கள் பக்ஷணம், சம்பாவனை அனைத்தும் தூக்கிக்கொண்டு வந்த லேசர் "அதி அற்புதமா எல்லாம் செஞ்சுட்டேள் . எனக்கு பேச வார்த்தையே இல்ல" என்று குக்கிடம் சொல்லிக்கொண்டே வேதாந்தத்தை அழைத்தாள் .

கேப்டன்குக்  நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆஸீர்வாதம் பண்ணுங்கோ என்றான்.வே-வி நெகிழ்ந்தனர். சேவித்து எழுந்து குக் " என் தங்கை பெண் கல்யாணத்துக்கு இருக்கா. உங்கள மாதிரி பெரியவா ஆசீர்வாதம் இருந்தா அவளைக்கரை ஏத்திடுவோம். நீங்களோ உங்க சொந்தக்காராளோ ஆதரவு கொடுத்தா போதும் , நாங்க உழைச்சு முன்னுக்கு வந்துடுவோம் என்று கை  கூப்பி தனது ஊதியத்தை வாங்கிக்கொண்டு விடை பெற்றான்

அடுத்தடுத்த நிகழ்வுகள் மள  மள  என்று நடந்து ராமசாமி தம்பதியினர் வே-வி தம்பதியைப்பார்த்து ஜாக்கிரதையாப்போய்ட்டு வாங்கோ அடுத்த தரம் ஒரு நாலு நாள் ஆத்தில தங்கற மாதிரி வாங்கோ என அழைப்பு விடுத்தன ர். ஒரு நிமிஷம் என்ற வேதாந்தம் ஓடிப்போய் ஒரு தட்டில் வேஷ்டி புடவை ஒரு செவ்வகபாக்கெட் என்று லேசர்  கையில் கொடுத்து வைத்து தனது இரு கைகூப்பி ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்றான்.

நான் என்னடா உனக்கு ஆசீர்வாதம் பண்ண -இதோ பெருமாள் இருக்கார் சேவி என்று சொல்லிவிட்டு, இதென்ன பாக்கெட்?

வே-வி இருவரும் திகைக்க கழுகு சொன்னான்

பணக்கட்டு, மோதிரம் சங்கிலி னு எதையாவது கொடுத்து எங்களை       சின்னவாளா க்கிடாதே

வேதாந்தம் "நான் உனக்கு ஏதாவது செய்ய ஆசைப்படறேன்” என்றான்.

கழுகு சொன்னான் "அப்படியா இதோ இங்க மூலைல நிக்கறானே கஸ்தூரிரங்கன்   அவனுக்கு ஒரு நிரந்தர வருமானத்துக்கு ஏதாவது செஞ்சா ஒரு குடும்பத்தை கரையேத்தின புண்ணியம் வாய்க்கும் அதைச்செய் என்று கறாராக சொல்லிவிட்டான்.

 கஸ்தூரிரெங்கனின் தகுதிகள் பேப்பர் வடிவில் வேதாந்தம் கைகளில் இப்போது

விடை பெற்றனர் நண்பர்கள்   .

அதிகாலை டெல்லி flight ல் கேப்டன் ராகுல் சர்மா "IN A  MINUTE FROM NOW   WATCH  DOWN TO  HAVE A  GLIMPSE OF SRIRANGAM ISLAND அண்ட் TEMPLE " என அறிவித்தார்

மிகுந்த கனத்த மனதுடன் பறந்து கொண்டிருந்தனர் வேதாந்தம் குடும்பத்தினர்.டெல்லி நோக்கி.                                                                               இறைவனின் கருணை எவ்வளவு மகத்தானது!

                                                                          சுபம்

நன்றி யுடன் அன்பன்  ராமன்












1 comment:

  1. லேசரை லேசாக முடிச்சுட்டீர்.இந்த காசிமை நான் US ல இருக்கும்போது
    அந்த ஊர் கோவிலுக்கு வாசிக்க வந்திருந்தார். நாதஸ்வரம் பிரமாதம்.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...