Tuesday, January 31, 2023

READY TO POUNCE

 READY TO POUNCE

பாய்ச்சலுக்கு தயார்

டில்லி குளிரில் 7.30 வரை சுருண்டு கிடந்தனர் திருச்சி வாசிகள். எழுந்து பல் துலக்கி ரிசெப்ஷனுக்கு போன்       செய் து  காபிக்கு சொன்னார்கள் . பெரிய ஜக் , தம்ளர்கள் ,சர்க்கரை குப்பி , ஸ்பூன்கள் சகிதம் வெயிட்டர் வந்து நமஸ்தே என்று டேபிளில் வைத்துவிட்டு வெளியேறினார்.. ஆவலுடன் காபியை ருசிக்க , அசோகா வாவது, அக்பராவது , எவனும் நம்ம ஊர் முரளி காபிக்கு ஈடாகுமா என்று பெருமூச்செறிந்தாள் சுபி / ஏன் முரளி கடையில் மக்கள் வெள்ளம் குவிகிறது என்பதற்கு சரியான விடை கிடைத்தது .என்ன செய்யமுடியும், வட இந்தியாவில் காபி -அவ்வளவு தான்..குளித்து சிற்றுண்டி சாப்பிட்டனர் ,இட்லி தோசை பரவாயில்லை, மோசமில்லை. .வேண்டிய தஸ்தாவேஜுகள் கையில் உள்ளதா என்று 3 முறை சரிபார்த்தார்கள்.

காலை மணி 9.50, வேலுச்சாமி Good  Morning என்று வணக்கம் சொன்னார் , பதில் வணக்கம் ஆனதும் நலம் விசாரித்தார் வேலுச்சாமி. பின்னர் பேக் ஏதாவது உண்டா என்றார் . 2 பைகளில் தேவையான வற்றுடன் 10.40 க்கு guest house காம்பௌண்டில் வண்டி கம்பீரமாக போர்டிகோ வில் நிற்க வித்யாமாலினி சந்தனக்கலர் புடவையில் , ஒற்றை பின்னல் பாம்பென முதுகில் ஊர்ந்து இடுப்பைத்தாண்டி 10 அங்குல நீளத்திற்கு ஒயிலாக ஆடியது.. கழுத்திலும் இருந்தும் இல்லாத வண்ணம் மெல்லிய தங்க இழைச்செயின் - ஹேமமாலினி யே வெட்கப்படுவார் . குதிரையின் வியப்பு அதிகமானது .இவளுக்கு எந்த ஆடையும் கச்சிதமாகப்பொருந்துகிறதே -என்னே இவள் செய்த பாக்கியம் என்று இறைவனின் கருணையை எண்ணியெண்ணி வியந்தாள்.

சரியாக காலை 11.00 மணி PMO வில் இருந்துஆரம்பிக்கலாம்” என்று சமிஞை வந்தது. வித்யாமாலினி சிறப்பான வரவேற்புரை வழங்கி விருந்தினர்களை அறிமுகம் செய்வித்து , டெமோ தொடங்கலாம் என்று அறிவித்தாள்

தலைவி என்ற முறையில் சுபி பேசினாள்   சுருக்கமாக ஆனால் சுவையாக . பலதரப்பட்ட தென்னாட்டு க்கலைகளில் இறைஉணர்வும் ஆன்மிகமும், பொழுது போக்கும் உடற் பயிற்சியும் எவ்வாறு பின்னிப்பிணைந்து காலங்காலமாக கிராமங்களில் காப்பற்றப்பட்டு வந்துள்ளதுஎன்று விளக்கி , தேவையான வற்றை வீடியோ உதவியில் நுணுக்கமாக விளக்கினாள் . அரசாங்க அதிகாரிகள் , இந்த கிராமீயக்கலைகளில் இவ்வளவு நுணுக்கங்கள் ஒளிந்துள்ளதை இந்தப்பெண்மணிஎவ்வளவு அனாயசமாக ,மீன் குஞ்சு நீஞ்சுவதைப்போல சிரமமில்லாமல் [EFFORTLESS] செயலாற்றுகிறாள் ; இவளை நம்ம டைரெக்டர்  மேடம் எப்படிப்பிடித்தார்கள் என்று ஏகமனதாக வியந்தனர். குதிரையின் உதவியாளர்களும் மிகச்சிறப்பாக விளக்க , G -20 நிகழ்ச்சியில் இந்தியா ஒரு ஆழமான முத்திரையை பதிக்கப்போகிறது என்று பேர் உவகை கொண்டனர்.

மதிய உணவை இங்கேயே வரவழைத்துவிட்டால் மேலும் பல அறிய தகவல்களை சுபத்ரா மேடமிடம் விவாதிக்கலாம் என்று SECRETARY கள்  விரும்பினர். சந்தேகமில்லாமல் குதிரைக்குழு மிக எளிதில் புகழைத்தேடிக்கொண்டது..

சாப்பிட்டுக்கொண்டே பலரும் மடக்கி மடக்கி கேள்விகளைக்கேட்க சுபி ஆணித்தரமான சான்றுகளுடன் இந்தியப்பரம்பரியத்தின் காலை சார்ந்த அறிவூட்டல் என்பதை அட்டகாசமாக நிறுவிட  , அமைச்சராக அதிகாரிகள் வியப்பிலும் பெருமையிலும் ஆழ்ந்தனர்.

அடுத்த பகுதி மாலை 3.30க்கு தொடங்கியது. இப்போது வித்யாமாலினி சிறிய அறிமுகத்துடன் சுபி குழுவினரை டெமோ செய்ய கேட்டுக்கொண்டாள் . ஏற்கனவே தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி யதால் மிகுந்த மரியாதை மற்றும் கவுரவத்துடன் அதிகாரிகள் நடந்துகொள்ள , சுபியின் வேலை எளிதாயிற்று அவள் இப்போது மிகுந்த தெம்புடன் வாதிட்டு இப்போதும் அனைத்து அதிகாரிகளின் நன்மதிப்பையும் பெற்று வித்யாவின் பெருமையும் அதிகார வட்டாரங்களில் பலமடங்கு உயர வைத்து விட்டாள் . சில தினங்கள் முன் வித்யாவிடம் சுபி தெரிவித்த "“இருக்கட்டும் மேடம் ப்ரோக்ராம் நடக்கும் போது பாருங்க , உங்களுக்கு பாராட்டும் ப்ரோமோஷனும் வருதா இல்லையானு.” –  என்ற பொருள் பொதிந்த சுபத்திரா வின் ASSERTION ஆழ்ந்த திட்டமிடல் பயனாக ஏற்பட்டது என்பது " இப்போது வித்யாவின் ஆழ் மனதில் ரீங்கரித்தது. வட இந்தியர்கள் அறிந்திராத மின்னல் சிலம்பம், கரக ஆட்டம் பலத்த வியப்பையும் எதிர்பார்ப்பையும் வீடியோ மற்றும் சுபியின் உதவியாளர்கள் அளித்த விளக்கவுரைகள் வாயிலாக  ஏற்படுத்திவிட்டன. நிகழ்ச்சி நிறைவடையும் போது  [4.20]. வேலுச்சாமி உள்பட பலரும் கையொலி எழுப்பி மகிழ்வை வெளிப்படுத்தினர். புறப்படத்தயாராயினர். அப்போது வித்யாஜிக்கு போன் PMO விலிருந்து .அந்த குழுவினரை PM சந்திக்க வேண்டுமாம் இங்கே அனுப்ப முடியுமா என்றது பெண் குரல். உடனே வேலுச்சாமி மற்றும் சுபி இருவரிடமும் பேசி குழுவினரை PM அலுவலக வளாகத்திற்கு அனுப்பி வைத்தாள் வித்யாமாலினி.

PM அனைவரையும் பாராட்டிவிட்டு சுபி யிடம் கரகாட்டம்  . பற்றி விரிவாக அறிந்து கொண்டார் ; மேலும் இந்த ஆட்டம் பெரும்பாலான மையங்களில் இடம் பெறுவதை தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுபி சொன்னாள் "ப்ரோக்ராம் FLEXIBLE FORMAT இல் தான் செய்யப்பட்டுள்ளது, உங்கள் விருப்பப்படியே அமைத்துக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்தாள்.எவ்வளவு எளிதாக முடிவெடுக்கிறாள் இந்தப்பெண்மணி என்று PM அகமகிழ்ந்தார்.

சுபி 'நல்லவேளை மடிசாருக்கு 200/- ரூ வாங்காம விட்டது என்னை PM வரை அழைத்துவந்திருக்கிறதே -எல்லாம் மாரியம்மன் கருணை’ என்று மானசீகமாக சமயபுரத்தில் சன்னிதானத்தில் நின்றாள்

தொடரும்   அன்பன்  ராமன் 

 

VIBRANT REJUVENATION

2 comments:

  1. சுபியே கரகாட்டம் ஆடிண்டு வேலைகளை பார்க்கும்போது இன்னும் ஒரு கரகாட்டம் தேவையா
    வெங கட்ராமன்

    ReplyDelete
  2. Had you been the organizer, you would have donned "TheKaragam" and saved time and money.Noce. K.Raman

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...