ரெங்கா ரெங்கா -5
க ரெ மனதில் மாடசாமி வந்துகொண்டே இருந்தார். உள்ளூர மாடசாமியை நினைத்து பேருவகையும், பெரும் மதிப்பும் கொண்டான். முரட்டுத்தனமான உருவத்தில் அன்பே வடிவான தாய் போல மாறி மாறி சாப்பாடு, காபி டி பன் , பால் குறைவில்லாமல் என்னை மாப்பிள்ளைபோல கவனித்துக்கொண்டாரே , அவருக்கு நான் என்ன செய்யமுடியும் ? ராமசாமி சார் என்னென்ன வகையில் உதவியிருக்கிறார் , சொந்த அண்ணன் கூட இப்படி செய்வானா - வேதாந்தம் சார் மற்றும் அவர் மனைவி எவ்வளவு வாஞ்சையாக ஆசிர்வதித்து பரீட்சைக்கு அப்ப்ளிகேஷன் வாங்கி , பணமும் கட்டி என்றெண்ணும்போதே கண்கள் குளமாயின. வழியும் கண்ணீருடன் மேலும் யோசித்தான் அந்த கேப்ரியல் சார் கேட்ட உடன் பாஸ் எழுதிக்கொடுத்து பணமும் கொடுத்து, அந்த ஓட்டல் ஐயர் நன்னா சாப்பிடு அம்பி என்று மனசார சாப்பாடு அடை வகைகள் சட்டினி சாம்பார் என்று விருந்தினர் போல நடத்தினாரே இத்தனை நல்லவர்களை தெரிந்து கொள்ளாமலே வாழ்ந்திருக்கிறேனே என்று வேதனை தாங்க முடியாமல் வீட்டு பெருமாள் படத்தின் முன் வருந்தி அழுதான். வாழ்வில் பிறர்க்கு உதவுவதை மிஞ்சிய எந்த தர்மமும் நிலைத்து நீடிக்க வழியே இல்லை என்று உணர்ந்தான்.
எனக்கொரு நல்வாழ்வை ஈஸ்வரன் வழங்கினால் என்னால் பிறர்க்கு உதவ இயன்ற அளவு முயற்சிப்பேன் என்று முடிவெடுத்து மனக்குழப்பம் நீங்கியவனாக சற்று நிம்மதி அடைந்தான்.
காலை 11 மணி, செக்ஷனில் ராமசாமி சாரை சந்தித்தான்.
டேய் நீ காலம்பரயே வருவேன்னு பாத்தேன்.
கொஞ்சம் தூங்கிட்டேன் என்று சமாளித்தான் க ரெ. சரி பரீட்சை ?
சார் உங்க ஆசீர்வாதத்துல ரொம்ப நல்லா எழுதியிருக்கேன் என்று கை கூப்பினான் . சார் HO ல ரெண்டு லெட்டருக்கும் ENDORSEMENT குடுத்துருக்கா -மாடசாமி சாரே கிட்ட இருந்து எல்லாம் பண்ணிக்குடுத்துட்டார் என்றான் கண்களில் நன்றி உணர்வுடன் .
11.45 மணி அளவில் க ரெ வுடன் ராமசாமி கேப்ரியல் செக்ஷன் போனார். வா மேன் என்றார் கேப்ரியல். ENDORSEMENT லெட்டரை நீயே கொடு என்று ராமசாமி ஜாடை காட்ட , க ரெ, கேப்ரியல் சாரிடம் அதைக்கொடுத்தான். உடனே காலண்டரைப்பார்த்த கேப்ரியல் யோவ் இந்த பையன் நல்ல ஸ்மார்ட் FELLOW யா SATUR DAY க்கே ENDORSEMENT வாங்கிருக்கான்யா , கிரேட் BOY , GOD bless YOU மேன் என்றார். முத்துலக்ஸ்மி ஒன் ராசி நல்லாருக்கும்மா நீட்டா அல்லாம் முடிஞ்சிடுச்சு என்று ரொம்ப மகிழ்ச்சியானார். ஏனெனில் போன வாரம் வியாழன் வரை HO வில் வசவும் reprimand ம் வாங்கவேண்டியிருக்குமோ என்று கதிகலங்கிக்கிடந்தார். இப்போது ராமசாமி பெரிய மலை போல் தெரிந்தார் கேப்ரியலுக்கு . இங்கே பொம்ப்ளே டெலிவரி தான் தெரியும் லெட்டர் டெலிவரி தெரியாத lazy guys என்று சிரித்தார் கேப்ரியல் . பரஸ்பரம் நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.
மாலை 6.45 மணிக்கு க. ரெ , தன் தாயாருடன் ராமசாமி சார் வீட்டுக்கு வந்தான் , கையில் ஒரு சீப்பு பழம் , ஒரு முழம் மல்லிகைச்சரம் இரண்டுடனும். அவன் தாயார் பேசினார்.
இவன் அந்த ஊர்ல போய் இருந்து பரீட்சை எழுதி நல்ல படியா வரணுமே னு ஒரே பயம் . நீங்க ரொம்ப பாதுகாப்பா ஏற்பாடு பண்ணியிருந்ததாக சொன்னான். பெருமாள் உங்கள நல்லபடியா காப்பாத்தட்டும் ;எனக்கு பேச வராது என்றாள் . இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம் -ராமசாமி . சின்ன விஷயம் செய்ய பெரிய்ய மனசு வேணும் அது உங்களுக்கு ரொம்ப இருக்கு, நீங்களெல்லாம் நன்னா இருக்கணும் என்று கை கூப்பி வணங்கினாள் . நான் வரட்டுமா என கிளம்ப "அம்மா நான் கொஞ்சம் பேசிட்டு வரேன் நீ ஓரமா பாத்து போ என்றான் க ரெ.
ஹாலில் இருந்த ராமசாமியின் கைகளைப்பற்றிக்கொண்டு மனம் விட்டு பேசினான் கஸ்தூரி ரெங்கன் .அவன் பேச்சு ஒரு ஞானியின் லெவலில் இருந்தது. கண்ணீர் மல்க சொன்னான் , நீங்கள் எல்லாரும் தெய்வங்கள் சார் , இல்லேன்னா என் போன்ற ஒருத்தனுக்கு இதல்லாம் எட்டும் உயரம் இல்லை சார். நீங்க கிருஷ்ண பரமாத்மா மாதிரி சரியான எடத்துல என்னை அப்பப்ப நிறுத்தி எனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க எத்தனை ஜென்மா எடுத்தாலும் இதுக்கெல்லாம் ஈடு செய்ய முடியாது சார். கண்களில் தண்ணீர் பிரவாகமாக , அவர் --மாடசாமி எவ்வளவு உத்தம மனிதர். உதவுவதுன்னா என்னனு ரொம்ப அழகா எனக்கு உணர்த்திட்டார் சார்.அவர் இன்னொரு கிருஷ்ணர். ஆமாம் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்து வழி நடத்தியதைப்போலவே , அந்த பரீட்சை ஹாலில் என் இடத்தைக்காட்டி ம்ம் துவங்கு உன் வித்தையை என்பது போல என்னுடனேயே வந்து வழி காட்டினாரே என்று அழுதான்.
டேய் அழாதே போராட்டமும் முயற்சியும் இல்லாமல் முன்னுக்கு வரமுடியாது -ராமசாமி .
அவன் [மாடசாமி ]எப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தான் ன்னு எனக்கு தெரியும் என்றார் ராமசாமி . சார் நெஜத்தை சொல்றேன் .ஐயோ இவர் என்ன ராவணன் மாதிரி மீசையும் தோரணையுமா னு நெனச்சென் ; ஆனா அவர் ராமர், இல்ல இல்ல கிருஷ்ணர் எனக்கு அப்பிடித்தான் சொல்ல வரது.அவரும் ஆபத்பாந்தவர் மஹாபராக்ரமசாலி , திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு மீசை உண்டு னு சொல்லுவா , நம்ப மாடசாமி சார் நிச்சயம் பார்த்தசாரதி தான் சார் ; எனக்காக ரெண்டு நாளும் எவ்வளவு அலைஞ்சார் .
சார் இந்தாங்கோ என்று 700 /- [500+200] ரூபாயை திருப்பித்தந்தான் . என்னடா எல்லாத்தையும் தர நீ செலவழிக்க வே இல்லையா ? ராமசாமி. நான்தான் சொன்னேனே சார் அந்த மாடசாமி சார் எனக்கு 5 பைசா கூட செலவழிக்க இடம் இல்லாம எல்லாத்தையும் அவரே பாத்துண்டார். அதிலும் பரீட்சை அன்னிக்கு ராத்திரி என்னவோ மாப்பிள்ளை மாதிரி கல்யாண விருந்தில என்னையும் உக்காரவெச்சு வயிறார சாப்பாடு போட்டார். அவருக்கு தெரிஞ்சவா ரிசப்ஷன் அதுல என்னையும் கூட்டிண்டு போய் ... என்று அழுதான்
ஏண்டா அழற -நான் வெஜிடேரியன் போட்டுட்டானா? -ராமசாமி .
ஐயோ அபச்சாரம் சார். அது ஒரு ஐயர் வீட்டு ரிசெப்ஷன் விஜிலென்ஸ் ஸ்க்வாட் கைலாசம் ஐயராம் மாடசாமி சாருக்கு அப்படி ஒரு உபச்சாரம் அங்கே என்று சற்று தெளிந்தான். டேய் அந்த அய்யர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் , மாடசாமி எத்தனை கேஸ் பிடிச்சுருக்கான் தெரியுமா TTE பட்டாளத்துலயே மாடசாமி ன்னா எல்லாரும் நடுங்குவான். அவனோட நேர்மைக்குத்தான் அய்யர் அவனை கூப்பிட்டிருப்பார். நேர்மையும் உழைப்பும் தாண்டா மாடசாமியின் அடையாளம் -ராமசாமி
போகட்டும்
இந்த பணத்தை உண்டியிலே போடு
இல்ல வேதாந்தம் வரச்சே பரீட்சை பீஸ்
திருப்பி தரேன் னு சொல்லி
க்கொ டு.
சரி
மறக்காம அடையவளஞ்சான் மேலதிகாரியப்பார்த்து பரீட்சையை உங்க ஆசியிலே கரெக்ட்டா எழுதிருக்கேன்னு
அவரைப்பார்த்து சொல்லி நமஸ்காரம் பண்ணிட்டு வா என்றார் ராமசாமி , கண்டிப்பா செய்யறேன்
சார் என்றான் கஸ்தூரி ரெங்கன்
டேய் நான் அன்னிக்கே சொன்னேன் சொந்தக்காரன் னு அலையாதே , சமயத்துக்கு friends தான் ஹெல்ப் பண்ணுவா , அதுனால அடுத்தவாளுக்கு ஹெல்ப் பண்ணறத கடமையா செய் என்றார் ராமசாமி.
க ரெ ‘ நிச்சயம் சார்.. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவினா எல்லாருமே சந்தோஷமா இருக்கலாமே. எனக்கு பகவான் நல் வாழ்வு குடுத்தால் [என்று கோபுரத்தை கை தூக்கி வணங்கினான்] முடிஞ்ச அளவு நல்லது செய்வேன் சார். வேதாந்தம் சாரோட பேசினா நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன் னு சொன்னேன்னு சொல்லுங்கோ” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்.
ஒரு சிறிய நிகழ்வில் மனிதன் எவ்வளவு கற்றுக்கொள்கிறான் வாழ்க்கையில் யாருக்கு எப்போது எப்படி திருப்பம் வரும் ? எல்லாம் 'அவன்' கடைக்கண் பார்வை.
சுபம்
நன்றியுடன் அன்பன் ராமன்
ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணினால் வாழ்க்கை நன்றாக இருக்கும்
ReplyDeleteரெங்கா ரெங்கா
வெங்கட்ராமன்
Enjoyed reading a nice story.
ReplyDelete