Tuesday, February 21, 2023

WHY IS CINEMA INFIRM? -2

WHY IS CINEMA INFIRM? -2

 சினிமா ஏன் தடுமாறுகிறது – 2

மிக எளிதில் 25 வாரங்கள் ஓடி சில்வர் ஜூபிலி என்னும் வெள்ளி விழா கண்ட தமிழ் படங்கள் பல என்ற நிலை மறைந்து, 25 காட்சிகள் ஓடினால் - ஆ என்று வாய் பிளக்கும், [கையை முழங்கை வரை] சுட்டுக்கொண்ட] திடீர் செல்வந்தர்கள் அநேகம்.

அதை விட அதிகம் SHYLOCK வகை பைனான்சியர் எனப்படும் கடன் உதவியாளர்கள் [நியாயமாகப்பார்த்தால் 'கடனுக்கு' பணம் தந்துவிட்டு  கடமை தவறாமல் கழுத்தில்  கத்தி வைத்து வசூல் செய்யும் கும்பல்] ; மகசூலில் செல்வந்தனாய் இருந்த பலர் இன்று வசூல் தாதா க்களிடம் மாட்டிக்கொண்டு, வழி தெரியாமல் விழி பிதுங்கி தனி ஊசல் [SIMPLE  PENDULUM] போல் மரக்கிளையில் தொங்கி மரணக்கிணற்றில் ஐக்கியம் ஆவது திரைத்துறையில் அன்றாட நிகழ்வு.  இவை அனைத்திற்கும் விடை காண சில கேள்விகளைப்பார்ப்போம் .

ஒரு கற்பனை க்களம்

கேள்வி : நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பதில் : டிகிரி முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.

கே : நீங்கள் ஏன் சொந்தமாக ஒரு வேலை ஆரம்பித்து [கடன் பெற்று] தொழில் செய்யக்கூடாது?

ப: எனக்கு எந்த தொழிலும் தெரியாது ; நமக்கு யார் கடன் தருவார்கள் அப்படியே தந்தாலும் முறையாக திருப்பி செலுத்தாவிட்டால் கோர்ட் தண்டனை என்று அலைய வேண்டிவரும். தெரியாத இடத்தில் கால் பதித்தால்  மீண்டு வருவது கடினம்.

ஒரு கற்பனை க்களம் -2

கே: விவசாயத்தில் நல்ல சம்பாத்தியம் இருக்கு,அதை எதிலாவது முதலீடு பண்ணி நல்ல லாபம் எடுக்கலாமே ?

ப:அப்படியா?

ஆமாம் ஒரு முதலீட்டிலேசினிமா  படம் எடுத்தால் 12 மடங்கு லாபம் வருமே? அப்படித்தானே  இன்று பலர் நட்சத்திர ஓட்டல், பங்களா, கார் என்று பட்டணத்தையே கலக்கி வருகிறார்கள்.- என்று துல்லியமாக வலை வீசுவர்.

மதுரையில் வலை வீசி தெப்பக்குளம் என்றொரு பகுதி உண்டு. சென்னையில்  இருப்பது வலை வீசி பெருங்கடல்.. வலை வீச முகவர்கள் [AGENTS]  அனேகர்.. இங்கே மீனைப்பிடிக்க ஒரு முதலையை [பண முதலையை] பிடிப்பார்கள். அவ்வகை முதலைகளை துதி பாடியே ஜீவனம் நடத்தும் மனித சாட்டிலைட்டுகள் சுற்றி சுற்றி வரும். முகத்துதி என்னும் ஆயுதம் சினிமாவிலும் அரசியலிலும் அன்றாடம் களி நடனம் புரிவதை  புரிந்துகொள்ள தவறினால்  SIMPLE PENDULUM ஆக வேண்டியது தான்.

அடுத்துக்கெடுத்தல் என்பது சினிமாத்துறையில் ஒரு கலையாகவே பின்பற்றப்படுகிறது . செல்வம் செழித்தவன் என்று உணர்ந்தால் ,அவரைச்சுற்றி முகத்துதி பேசி அண்ணே அண்ணே உங்க ராசிக்கு எதுவும் கை கூடும் என்று பசப்பு வார்த்தைகளைப்பேசி அந்நபரை மதி மயங்கச்செய்து பெரிய அளவில் படம் எடுக்க திட்டம் தீட்டி , அதன் வாயிலாக அடுத்த ஒரு ஆண்டிற்கு உணவு, உல்லாஸம் ,வெளி ஊர்ப்பயணம் அவ்வப்போது பையையும் நிரப்பிக்கொண்டு அந்த "அண்ணே ",யை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு சரியான தருணத்தில் விலகிச்செல்வர். அந்த சினிமா செல்வந்தனுக்கு ஊரில் இருந்த ஆஸ்திகளும் உறவுகளும் அந்நியப்பட்டுவிட , ஏதாவது ஒரு சினிமா நிறுவனத்தில் , ஊழியனாகச்சேர்ந்து சொற்ப சம்பளமும் டீ /காபி , சிற்றுண்டி, மதிய உணவு என்று காலம் தள்ள வேண்டியதுதான் . பழைய செல்வச்செழிப்பை நினைக்கத்தலைப்பட்டால் , இந்த ஊழியமும் ஊதியமும் இல்லாமல்போய்  வடபழனி முருகன் கோயிலில் முன்னிருக்கும் நீண்ட வரிசையில் காவி உடுத்து திருவோட்டுடன் இருக்கும் சில முன்னாள் தயாரிப்பாளர்களுடன் அமரவேண்டியதான் .

ஏன் இந்த கதி?

தொடரும்   அன்பன்  

2 comments:

  1. நல்ல கதை உண்டா
    அர்த்முள்ள பாடல்கள் உண்டா
    நடனம் என்று ஆபாசக்கூத்து
    இப்படி இருந்தால் எப்படி நம் தமிழ் சினிமா தழைக்கும்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. வலைவீசி தெப்பக்குளம் இருக்குமிடத்தை
    வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...