Monday, February 6, 2023

A DIFFERENT DANCE

 A DIFFERENT DANCE

மலர்ப்பாதம் தூக்கி

துவக்க நிகழ்ச்சி டெல்லியில் மறு நாள் காலை 11.30 அளவில் . ஜெர்மானியர் மற்றும் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி. நுழை வாயிலிலேயே காசிம் -குழு தேவ கானமாக நாதஸ்வரம் ஒலிக்க ,வெளிநாட்டவர் நின்று வியப்பும் மலைப்பும் கொண்டு கிடைத்த வரவேற்பு உலகில் வேறெங்கும் வாய்க்காது என்று உணர்ந்து இந்தியர்களின் விருந்தோம்பல் குறித்து மிகுந்த உவகை கொண்டனர். துவக்க உரைக்குப்பின் காலை நிகழ்ச்சிகள் துவங்கி , வீணை இசை, ஒரு குச்சி புடி நடனம், இரு சிறுவர்களின்  ஆக்ரோஷ களறிபாயட்டு முடிந்து செல்வகணேசன் -குழுவினரின் சிவ தாண்டவம் .

ஆரம்பமே களைகட்டியது , பின்  புலத்தில்  கைலாய மலை போன்ற காட்சியில் இறைவணக்கம் செல்வகணேசன் பாட தெய்வீக சூழல் மண்டபத்தை ஆக்கிரமித்தது . திடீரென்று ஒரு சிறுவன் அரங்கின் பின்புற படுதாவை தாண்டி உள்ளே குதித்தான் விநாயகர் வேடத்தில் ; குதித்தவன் செல்வகணேசனுக்கு அருள் ஆசி வழங்கி திடீரென மறைந்தான் [அவன் செ க வின் மகன் மணிகண்டன் 5 வயது ]. வடஇந்தியர்கள் பக்திவசப்பட்டார்கள் அடுத்த வினாடி டும் டம் தம டம் என்று தாளம் ஒலிக்க சிவன் தனது இயக்கத்தை த்துவக்கினார். விறு விறு வென தாளம் அசுரவேகமெடுக்க  அஞ்சாமல்  அவனது நடனம் தாளமும் உக்கிரமும் பிசகாமல்  வேகமெடுத்தது , சற்றும் சுணங்காமல் செல்வ கணேசன் புயலென சுழன்று சுழன்று அனல் பறக்கும் வேகத்துடன் ஆட ஆட மேடையில் அவன் கால் பதிக்காத இடமே இல்லை என்னும் படி தலையில் கரகம் சக்கரமெனச்சுழல, குடம் கீழே சாய்ந்து விடுமோ என்று அவையினர்  அஞ்ச , ஆனால் அவனது ஆட்டம் உக்கிரம் குறையாமல் தாளம் தப்பாமல் விர் விர் என்று கரகசொம்புடன் மிகச்சிறப்பாகதொடர்ந்து வெளிப்பட  சிவ நடன முத்திரைகளை அற்புதமாக அபிநயித்தான்.  விளிம்பின் எல்லைக்கே உக்கிரம் போய் விடுமோ என்ற நிலையில் பப் புப் பப பப்   என்ற ஒலி யின்  துணையில் அரங்கில் நுழைந்தாள் மீனாட்சி அழகு ப்பதுமையாக பார்வதி வடிவில் தலையில் கரகசொம்புடன் . சிவன் இதுவரை ஆடி எட்டிய விறு விறுப்பை துவக்கத்திலேயே பிடித்துவிட்டாள் மீனாட்சி. வேகமாக ஆனால் நளினமாக புயலெனச்சுழன்றாள் பார்வதி அவள் தலையில் கரக  சொம்பு அச்சில் வாரத்துப்பதித்தது போல் இம்மியும் விலகாமல் சக்கரம் போல் சுழன்று கொண்டிருந்தது .பார்வையாளர்கள் பிரமித்தனர். . மேலும் மீனாச்சி வேகமெடுக்க சிவனின் வீரியம் மட்டுப்பட தொடங்க தருணம் பார்த்து சூறாவளியென சுழன்று சிவனின் வேகத்தையும் சுழல் வட்டத்தையும்   ஒரு எல்லைக்குள் தடுத்து [சக்தி பெரிதா -சிவம் பெரிதா என்ற நிலைக்கு] ஆட்டம் மெல்ல சம நிலை எட்டிடயது , அச்சமயம் இரு இடங்களில் மேடை மீது  சிறு  முக்கோண வடிவில்  காகித மடிப்பை வைத்துவிட்டு விரைந்து அகன்றாள் சுபி.

இதுதான் இந்த கரக நடனத்தின் உச்ச கட்ட நடனம் மற்றும் நளினம் . சிவன் பார்வதி இருவரும் சம ஜோடியாக கண்ணுக்கு விருந்தாக அபிநயித்தது கண் கொள்ளாக்காட்சி. மெல்லஇருவரும் உடலை வளைத்து கீழே குனிய தலையில் இருந்த சொம்பு மெல்ல வழுக்கி பின் கழுத்துக்கு இறங்கியது . இறங்கி மெல்ல சுழன்று கொண்டிருந்தது . இருவரும் ஒரு காலை பின் புறம் நீட்டி ஜோடி மயில் போல் நின்று சபைக்கு கை கூப்பி   வணக்கம் செலுத்தினர்.

சொம்பு கீழே விழாமல் அற்புத பாலன்ஸிங் செய்து ஒற்றை  காலில் தத்தி த்தத்தி முன்னோக்கி வந்து கைகளை பின்புறம் மடித்து குனிந்து ஆளுக்கொரு பேப்பர் முக்கோணத்தை கண்ணிமையால் பற்றி எடுத்து , மேலும் முன்னேறி மேடையில் முன் விளிம்பில் வந்து நின்றதும் PM மற்றும் முக்கிய ஜெர்மானிய விருந்தினரை மேடை அருகே அழைத்தாள் சுபி. கை நீட்டி எங்களின் அன்பு காணிக்கைதனை பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் என அறிவிப்பு செய்வித்தாள் . மந்திரத்திற்கு கட்டுண்டோர் போல் அவர்கள்கைகளை நீட்ட , செ .க, மீனாட்சி ,காகிதங்கள் கையில் இறங்கும்படி கண் திறக்க , பேப்பர் கீழே சரிந்தது கைககளில்விழ.

 மெய் சிலிர்த்து  குதூகலித்து கை தட்டினர்அனைவரும்.. நிறைவாக சிவன்-பார்வதி மெல்ல நிமிர்ந்து கரக சொம்பு தலையில் ஏறும்படி உடலை இயக்கி , தலையில் சொம்புடன்  சுழன்றாடி  சபைக்கு வணக்கம்வைத்தனர். முக்கோண பேப்பரில் Enjoy and  Encourage our  Traditional Art             [ ஜெர்மனியரிடம்]  மற்றும்  THANK YOU PM FOR YOUR SUPPORT   [ PM கையில்] என்றிருந்தது  அரங்கத்திலேயே MARVELLOUS என அனைவரும் வித்யா சுபி  இருவருக்கும் நன்றி தெரிவித்தனர். அன்றைய HOT TOPIC -செல்வகணேசன்/ மீனாட்சி நடனம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?.                                                                                     நிகழ்ச்சி யில் பிரமிப்பூட்டும் அம்சம் யாதெனில் துவக்கம் முதல் இறுதி வரை இரு கலைஞர்களும் தத்தம் கரக சொம்பை கையால் தொடவே இல்லை. சொம்பு இவர்கள் விருப்பத்திற்கு,  ஏறவோ , இறங்கவோ, திரும்பவோ இம்மி பிசகாமல் 'இறையருள்' என்பது போல துல்லியமாக இயங்கியது.  எவ்வளவு பயிற்சி எடுத்திருப்பார்கள் இந்தக்கலையை அரங்கேற்ற?

தொடரும் 

அன்பன் ராமன் .

2 comments:

  1. ஷேக் சின்ன மௌலானா மகன் காசிம் நாதஸ்வரம். என்றால் தேவகானம் தானே. சிறுவனின் கரகாட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. I was virtually transported to the venue of Karagattam performance

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...