Sunday, February 12, 2023

ரெங்கா ரெங்கா

 ரெங்கா  ரெங்கா

இது என்ன ஸ்ரீரங்கம் கோயில் நுழை வாயில் போல் இருக்கிறதே என்கிறீர்களா . அங்குதானே இந்த கதைக்களம் இப்போது. ஆம். கஸ்தூரி ரெங்கன், ராமசாமி யிடம் புலம்பினான் . அடுத்த ஞாயிறு அன்று சென்னையில் பரீட்சை , இன்னும் ரயில் டிக்கெட் வாங்கணும் என்றான்.

ராமசாமி: நீ சரியான மடையன் டா , ரயில்வேல குப்பை கூட்டி அள்ளுபவன் கூட டிக்கெட் வாங்கமாட்டா ன்னு உனக்குத்தெரியாது ?, நீயும் இப்ப ரொம்ப நாளா ஜங்க்ஷன்ல வேல செய்யற சரியான பித்துக்குளிடா நீ என்று அர்ச்சித்தான்.

வித்தவுட் போகச்சொல்றேளா என்று அழத்தொடங்கினான். ரெ .

போடா அம்மாஞ்சி , உன்ன எவண்டா வித்தவுட்ல போகச்சொன்னது. ? நொய்நொய் னு குறுக்க பேசாம சொன்னதைச்செய்  என்றான் ராமசாமி.

நீங்க ஒண்ணு ம் சொல்லவே இல்லையே என்றான் ரெ .

சரி ரெண்டு PANT , 2 சட்டை துவைத்து அயன் பண்ணி வெச்சுக்கோ , கைல 500/- ரூபா வெச்சுக்கோ -   ராமசாமி

ஐநூறா -ஐயோ என்றான் ரெ . டேய் ஏண்டா பொலம்பற நான் தரேண்டா மண்டையா -அதை வெச்சுக்கோடான்னா . என்றான் ராமசாமி

இல்ல எங்க பெரியம்மாவோட மருமாள் அண்ணாநகர்ல இருக்காளாம் , அவா த்துக்கு எப்படி போறது னு தெரியாதே என்றான் ரெ .

இத பாரு பரிட்சை முக்கியம் பெரியம்மாவோட நாத்தனாரோட ஓர்ப்படியோட மாட்டுப்பொண்ணு  அவளோட பக்கத்தாத்து செல்லம்மான்னு எவளையாவது தேடிண்டு பைத்தியம் மாதிரி அலையாத. எழும்பூர் ஸ்டேஷன் தாண்டி எங்கயும் அசையாதஅசைஞ்ச -- காலை ஒடிச்சுடுவேன்  என்று மிரட்டியது கழுகு.

நடுநடுங்கிப்போனான் .ரெ

மொதல்ல ஒண்ணு  தெரிஞ்சுக்கோ . சொந்தக்காரனெல்லாம் தேனாட்டம் பேசுவான் வீ ட்டைத்தேடிண்டு போனாயோ அப்புறம் தேளாட்டம் கொட்டுவான் -நீங்க யாரும்பான் -இதை நன்னா ஞாபகம் வெச்சுக்கோ, ஸ்ரீரங்கத்துல இருக்கறவன நெனச்சுண்டு அங்கெல்லாம் போய் மாட்டிக்காத. 

ஸ்டேஷனிலேயே உக்காந்திருக்க முடியுமா என்று கேட்டு கலங்கினான் .ரெ சும்மா நொய்நொய் னு குறுக்க பேசாம சொன்னதைச்செய்  னு இப்பதானே சொன்னேன். இப்போது தான் ரெ வின் காலில் செருப்புகூட இல்லை என்று ராமசாமி பார்த்தான். .

ஏன் செருப்பு போட்டுக்கல்ல ? -ராமசாமி                  'போன வாரம் பிஞ்சுடுத்து ' ரிப்பேர்  பண்ண முடியாதுனு சொல்லிட்டான் மாசணம்  - ரெ

கழுகு உடனே வா என்று கரே வை இழுத்துக்கொண்டு நாச்சிமுத்து கடைக்கு எதிர்ப்புறம் ராதா செட்டியார் கடை நோக்கி  விரைந்தான். . இங்க செருப்புக்கடை கிடையாதே சார் என்றான் . ரெ 

பேசாம வா . என்ன கேட்டாலும் வாய் திறக்காதே என்று எச்சரித்தான் ராமசாமி.

கடையில் செட்டியாரின் பையன் கதிரேசன் இருந்தான். அப்பா எங்கே? -ராமசாமி. . 

தஞ்சாவூர் போயிருக்கார் -கதிரேசன் . அது சரி ஒரு மாசமா ஒரு புது செருப்பை இங்க விட்டுட்டு போய்ட்டான் ஒரு ஆள் இன்னும் வரல்லேனு அப்பா சொன்னாரே. ‘ஆமாம் சார் புத்தம் புதுசு அப்பிடியே வாங்கிட்டு வந்து இங்க பாக்ஸ் உடனேயே வெச்சிட்டுப்போனார் அதுனால தான் எடுத்து உள்ள வெச்சிருக்கோம்’ என்றான் கதிரேசன்.

ராமசாமி “அந்தப்பயன் இவன்தான் தற்செயலா கண்டுபிடிச்சேன் பாவம் செருப்பு இல்லாம கஷ்டப்படறான்” என்று அந்த புது செருப்பை வாங்கி க ரெ  வுக்கு கொடுத்துவிட்டான். ராமசாமி.

இப்போது கதிரேசன் லேசாக விழித்தான் . என்ன என்றான் ராமசாமி . இல்லசார் இந்த செருப்பு கல்லாவுக்கு கீழ வந்ததுலேர்ந்து நல்ல வியாபாரம் சார் என்றான். அப்படியா கவலைப்படாதே இப்ப நான் கோயில்லேந்து தான் வரேன் இந்த மஞ்சள் காப்பை யும்,  இந்த    ரூ 20/-      நோ ட்டையும் பொட்டலம் போட்டு கல்லாவில் வை , உன் வியாபாரம் சக்கைபோடு போடும் , செருப்பு என்ன பெரிய சகுனம் பெருமாள் பிரசாதம் கல்லாவுல வந்தப்புறம் ஏன் கவலைப்படற - தெம்பா இரு அப்பாகிட்ட நான் சொன்னேன்னு சொல்லு. வரட்டுமா தேங்க்ஸ் என்று நழுவினான் ராமசாமி. ரெ வும் கும்பிடு போட்டு அகன்றான் காலில் செருப்புடன் . செருப்பு கன கச்சிதம் .[ரெங்கநாதன் விளையாட்டு 1 மாசம் முன்பே கஸ்தூரி ரெங்கனுக்குசெருப்புவாங்கிதந்துவிட்டார்-பெருமாள் ]                 

 தொடரும்          அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...