Friday, February 10, 2023

DRIZZLE CONTINUES..

 DRIZZLE CONTINUES..

தொடரும் தூவானம் ..

மழை விட்டும் தொடரும் தூவானம் என்பதைப்போல நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னும் அது குறித்த வாதப்பிரதி வாதங்கள் தொடர்ந்தன. பலரும் வெவ்வேறு கோணங்களிலும் கோணங்கிகளிலும் நிகழ்ச்சி களை , இதுபற்றி   நடத்திக்கொண்டு , ஏதோ இவர்கள் சொல்வதை மக்கள் நம்புவதாக எண்ணிக்கொண்டு ஒரு 10 நாட்களுக்கு [அடுத்த கிழவிக்கு  பாலியல் வன்கொடுமை நிகழும் வரை]   இது பண விரயம் , நீட் தேர்வை ரத்து செய்வீர் என்று மிகுந்த பொருட்செலவில் புளியங்குடியில் ஊர்வலம் நடத்தினர்.

இது ஒரு புறம் இருக்க , சுபி குழுவினருக்கு பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருந்தன  அவை பற்றி எந்த ஊடகமும் மூச்சு விட வில்லை. அப்படி ஒன்று இருப்பது தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக புதுக்கோட்டையில் விஷக்காய்ச்சல் , ஒரு வேளை  ஏதேனும் தடுப்பூசிகளால் ஏற்பட்டதோ- மக்கள் பீதி என்று புரளி கிளப்பினார்.

ஏதேனும் ஒன்றை இருட்டடிப்பு செய்ய வேண்டுமானால் , வேறொன்றை  முன்னிலைப்படுத்துதல் திசை திருப்பு தல் , சமதர்மம் என்று கட்சிகளை த்தி ரட்டி விழாக்கள் நிகழ்த்தி, ஆரணியில் புலவர் பூங்காவனம், ஆவடியில் தலைவர் சங்கநாதம் என்று தலையங்கம் தீட்டுவர் . மறுநாள், பேசியபடி பணமும் குவார்ட்டரும் தரவில்லை என கிராம மக்கள் திரண்டதை பற்றி மூச்சு விடமாட்டார்கள் .

இவை அன்றாடம் கண்டு நெஞ்சம் மரத்துவிட்ட மக்கள் செய்திகளை காமெடி நிகழ்ச்சி யாகப்பார்க்க பழகிக்கொண்டுவிட்டனர். இத்துணை மேடை நிர்வாகத்தையும் [Stage management ] தாண்டி நீ - குழாய்  வழியே [வேறொன்றுமில்லை -you tube இன்  தமிழ்ப்பெயர் ] பல அரசியல் அவலங்களும் , PILES DOCUMENT [மூல பத்திரம் ] எங்கே ? கோயிலுக்கு வந்த பக்தரின் கோவணத்தைக்காணோம் , CBI விசாரணைக்கு உத்தரவிடுக என்று கடவுள் மறுப்பாளர் இயக்கம் ஊர்வலம் என்று 10 நிமிடத்திற்கு ஒன்று என நீ  குழாய் ரசிகர்கள் பல்கிப்பெருகி பலவேறு பொழுதுபோக்குகள் அரங்கேறி வருகின்றன.    னால் அமைதியாக வேறொரு நிகழ்வுக்கு ஏற்பாடாகி வருகிறது. அதை காலம் தான் வெளிவிடும். இதற்கிடையில் கிராமீயக்கலைகளை பெரிதும் மதிக்கும் விதமாக 'பாராட்டு பத்திரம் ' முக்கிய அதிகாரிகளின் கையொப்பத்துடன் தயாரிக்கப்பட்டு, தேவையான பிராந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு , எல்லாக்கலைஞர்களுக்கும் தத்தம் தாய் மொழியில் [பிற முக்கிய மொழிகள் வடிவிலும்] கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு கலைஞர்கள் , மிகப்பெரியதொரு கௌரவம் தங்களுக்கு தரப்பட்டுவிட்டதாக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டனர். திறமையை அங்கீகரிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பது நிதர்சனம் ஆன தருணம் அது.

                                                         சுபம்

நன்றி அன்பன்  -ராமன்

2 comments:

  1. நீ குழாய் மூலம் பைல்ஸ் ‘பவுத்திரத்திற்கு களிம்பு ஒன்று கண்டு கொண்டேன்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

COMPETENCE - IS IT A GIFT?

  COMPETENCE - IS IT A GIFT? Too much has been said and heard of it, but little has been understood by the learner-stage youth. There is a...