Sunday, February 26, 2023

SAMIs COME TOGETHER

 SAMIs COME TOGETHER

சாமிகள் சங்கமம்

இது என்ன வட இந்திய கும்ப மேளா போல் இருக்கிறதே என்கிறீர்களா ? இல்லை இல்லை இது நம்மூர் [உள்ளூர்] கும்ப மேளா தான். .சரி அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால் என்ன நிகழ்வுகளைப்பார்ப்போம். மாதத்தின் 4 ம் சனிக்கிழமை காலை சுமார் 7. 30 மணி தட தட தடவென பாய்ந்து வந்த மோட்டார்சைக்கிள் சற்று வேகம் குறைந்து வழியில் ஒருவரை நிறுத்தி விசாரிக்க , பாதசாரி அதோ அந்த வீடு என்று கை காட்டி வாசலில் பூக்கடைக்காரர் சைக்கிள் நிற்கும் வீடு என அடையாளம் காட்ட , தேங்க்ஸ் என்று பைக் ஆசாமி அந்த வீட்டை அடைந்து -சார் என்றார் . உள்ளேயிருந்து அம்புஜம் யாரோ ஒரு பயில்வான் வரார் என்று கிசுகிசுத்தாள் .மிரண்டுபோன ராமசாமி எட்டிப்பார்த்து வாடா வாடா என்று குஷி ஆனார். வந்தவர் சாக்ஷாத் மாடசாமி யே தான். 

ஏய் என்ன இப்படி என்ன காப்ரா படுத்திட்டே இவர் என் friend 'மாடசாமி ' என்று அறிமுகம் செய்வித்தார். சரி காபி கொண்டுவா என்று சொல்லி இருவரும், மா /ரா கூடத்து அறையில் புகுந்து கொள்ள , எட்டிப்பார்த்த அம்ஜம் கண் ஜாடையில் ராமசாமி யை உள்ளே அழைத்தாள் .       என்ன -? ரா.சா

இந்த 2 காபியை எடுத்துண்டு போங்கோ என்றாள் . நீ கொண்டுவரக்கூடாதா என்றார் ரா சா. போங்கோ அவர் மீசையைப்பாத்தா எனக்கு கதி கலங்கறது என்றாள்  அம்ஜம். அடச்சீ சும்மா வா என்று ரா சா அம்புஜத்தை காபி எடுத்துவர சொல்லி முன்னே சென்றார்.. காப்பியை கொடுத்துவிட்டு ஓடி விடநினைத்த நொடியில் சார் என்றொரு குரல். எட்டிப்பார்த்த அம்ஜம்  ஏற்கனவே 2 சாமி இருக்க 3 வதா ஒரு ஆசாமி வேறே வரார் என்று கஸ்தூரி ரெங்கன் வருகையை அறிவித்தாள்  உள்ளே வந்த      ரெ, மா சா வைப்பார்த்ததும் அவர் பாதம் தொட்டு வணங்கினான்.   மா சா  அம்புஜத்தைப்பார்த்து, அம்மா அவனும் ஒரு சாமி தான் [ஏன்னா  பிராம்மணர்களை ]. நாங்கசாமின்னு தான் சொல்லுவோம் எனவே 3 சாமி இங்கே என்றார்.

அதற்குள் ரா சா,  டேய் இப்ப இவன் கைல பணம் இருந்தா உனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திப்பிடுவாண்டா இவன் என்று ரெ வை காண்பித்தார்.. உடனே ரெ சார் தினமும் பெருமாள் சேவிக்கச்சே உங்களை எல்லாம் நெனச்சு பெருமையும் நன்றியுமா இருக்கேன் என்று கை கூப்பியபடியே தெரிவித்தான்.. சரி என்ன விஷயம் என்று கஸ்தூரி ரெங்கனை ரா சா கேட்க அவன் சார் அந்த கேப்ரியல் சார் HO இன்னொரு லெட்டர் தரமுடியுமா னு கேட்டார். என்ன சொல்றது தெரியல அதுனால செக்ஷன் கேட்டு சொல்றேன்னு  சொல்லிட்டேன் அத சொல்லத்தான் வந்தேன் என்றான் ரெ . கர்ரக்ட் YES . NO எதுவோ நீயா சொல்லாத நான் வந்து என்னனு பாத்து சொல்றேன் அப்புறமா பதில் சொல்லு என்றார் ரா சா. பாஸ் வேணுன்னா தந்துருவார் , ரிசேர்வேஷன் ? என்றார் ரா சா.     மா சா சொன்னார் டேய் அடுத்த வாரம் தானே   லோகு வும் ரியாஸ் ம் தான் நம்ப குரூப் லிருந்து போறாங்க . வேணும்னா சொல்லு நான் செட் பண்ணித்தரேன் . சரி என்ன எதுன்னு பார்த்துட்டு முடிவு பண்ணுவோம் என்றார் ரா சா  நன்றி தெரிவித்து விடை பெற்றான் கஸ்தூரி ரெங்கன்.

நம்ம வீட்டுல சாப்பிட்டுட்டு போயேன் என்றார் ரா சா. இல்லடா தில்லைநகர் ஆஸ்பத்திரியில அத்தைய அட்மிட் பண்ணனும் அதுனால உன்னை காலையிலேயே பாத்துரணம் னு வந்தேன் என்றார் மா சா.

சரி என்ன விஷயம் என்றார் ரா சா  

டேய் எங்க அக்கா பொண்ணு B .Sc முடிக்கப்போறா அப்புறம் யூனிவெர்சிட்டில PG படிக்கணுமாம் . சரி அதுக்கென்ன? ரா சா

என்ன அதுக்கென்னவா? அவ குதிரைக்கொம்பு  மாதிரி கேக்கறா -மாசா . என்னவாம்  -ரா சா ?

டேய்  ALL INDIA  எண்ட்ரன்ஸ் எழுதி செலக்ட் ஆனா 50, 000/-ஸ்காலர்ஷிப் வாங்கி இந்தியன் ட்ரடிஷனல் ஆர்ட் கோர்ஸ் பண்ணனுங்கறா..அந்த  H OD  பயங்கர TOUGH னு சொல்றாங்க, உன்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா கொஞ்சம் பண்ணித்தாடா என்றார் மாடசாமி. சரி  H OD யாருனு விசாரிச்சியா என்றார் ரா சா.

ம்ம் என்று யோசித்து ஏதோ சுமித்ரா வோ சுஜாதாவோ பேர் சொன்னாங்க என்றார் மாசா .

டேய் சுபத்திராவா? என்றார் ராசா. அவங்க தாண்டா அவங்கதாண்டா இதிலெல்லாம் நீ பயங்கர கில்லாடி டா என்று வியந்தார் மாடசாமி.. சரி எல்லா பர்டிகுலர்ஸும் பேப்பர்ல குறிச்சுக்குடு MONDAY நைட் போன் பண்ணு என்று நம்பரை தந்தார்  ராமசாமி.. இதபாரு  நான் மேக்சிமம் ட்ரை பண்றேன்  -பெருமாள் பார்த்துப்பார் என்று தெம்பூட்டினார் ராசாமி. நன்றிப்பெருக்குடன் விடை பெற்று அம்மா போயிட்டு வரேன் என்று அம்புஜத்துக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து அகன்றார் மாடசாமி. கழுகு களம் இறங்கிவிட்டது

தொடரும் அன்பன் ராமன்  

 

3 comments:

  1. சாமி என்று சொன்ன காலம் போய் இப்போ அவாள் என்றாகிவிட்டது
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. அவாள் இவாள் என்பது ஒரு சில அரசியல் வாதிகள் பயன்படுத்துவது [அதாவது இளப்பமாக சொல்லுவது]. பொது மக்கள் சாமி என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுகின்றனர். நெல்லையம்பதியில் அவாள் இவாள் என்பது பொதுவாக பயன் படுவது .. கே.ராமன்

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...