Saturday, February 4, 2023

UNEXPECTED FEAR

10 UNEXPECTED  FEAR

கரகம் தந்த கலக்கம்

கரகம் சிறப்பாக  எதிர்பார்க்கிறர்கள் நிறைய இடங்களிலும் கரகம் இடம் பெற வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசிக்கஒரு பழைய நினைவு உந்த ஆஹா செல்வகணேசனைப்பிடிக்க வேண்டியது தான்

திடீரென்று சுபி தன்  டைரெக்டரி யை ப்புரட்டி புதுக்கோட்டை செல்வகணேசன் என்ற நம்பரை தொடர்பு கொண்டாள் . உங்களுக்கு ஒரு பயங்கர சான்ஸ் கிடைக்கப்போகுது, காலைல நீங்களும், உங்களோட ஆடுவாங்களே மல்லிகா அவங்களையும் கூட்டிக்கிட்டு 11 மணி வாக்கிலே வாங்க , அவசியம் வாங்க என்றாள் . செல்வகணேசன் தயங்கி தயங்கி மல்லிகா வராதுங்க என்றான் . ஏன் என்னாச்சு என்றாள் சுபி .

இல்லீங்கம்மா அதுக்கு பேறுகாலம் அதுனால இன்னொரு ஒரு வருசத்துக்கு சலங்க குடம் எதுவும் தொடாதுங்க என்றான் .திடீர்னு இப்படி சொன்னா எப்படி ? ஒருபெண் கரகம் உங்களோட ஆடுனா டில்லியை கலக்கிடலாம் , இப்ப போய் இப்படி என்று பட படத்தாள் . என்னங்க இதுக்குப்போயி மலைக்கறீங்களே , ஒரு பொண்ணு கரகம் புடிக்கணும் அவ்வளவு தானுங்களே நான்கூட்டிட்டு வரேன் -மீனாட்சிய என்றான் செ . ;                            மீனாட்சி நல்லா ஆடுமா ?-சுபி

"நீங்க வேற.. மல்லிகா வைக்காட்டிலும் சூப்பரா ஆடும் அதிலுயும் அவ  வேகத்துக்கு யாரும்ஜோடி போட முடியாது. எனக்காக கொஞ்சம் அனுசரிச்சு ஆடுவா எந்த வேஷமும் கட்டுவா -சொல்லப்போனா அவ வந்தா ஆட்டம் சும்மா பொறி பறக்கும் தாயீ என்றான் .சரி இத்தனை நாளா அவளை நான் தெரிஞ்சுக்கலே. -ஏன் என்று யோசித்தாள் . இவ ங்க மல்லிகா  வோட தங்கச்சிதான் -ஆனாகாலேஜ் படிப்பு  படிச்சிருக்குது இங்கிலீஸ் எல்லாம் நல்லா  பேசும் எந்த கூட்டத்துக்கும் மல ங்காம கலங்காம தாளம் பெசகாம ஆடும் . கடவுள் எங்க குடும்பத்துக்கு தந்த பெண் தெய்வங்க அது என்றான் செல்வ கணேசன். நாளைக்கு மறக்கா ரெண்டு பெரும் வாங்க என்றாள் . “9.30 பஸ்ஸ பிடிச்சு வந்துர்றோம். உங்கள மாதிரி பெரிய மனுசாள் கூப்பிட்டாலே எம்புட்டு கௌரவம் கண்டிப்பா வர்றோம்” 

சொன்னபடி காலை 10.50க்கு வந்தனர் செல்வகணேசன் ,மீனாச்சி இருவரும். விரைவாகவும் விரிவாகவும் விளக்கி உயர் அதிகாரமட்டத்தில் கரகாட்டம் குறித்த ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது . எனவே அசிங்கமான அசைவுகளோ, கீழ்த்தரமான பாவனைகளோ கண்டிப்பாக இடம் பெறக்கூடாது என்றாள்  சுபி . மீனாச்சி எனக்கு தங்கச்சி முறைங்க -அப்படி எல்லாம் ஆட மாட்டோம் , நீங்களே சொன்னாலும் ஆட முடியாது அப்புறம் அந்த புள்ளைக்கு கலியாணம் காச்சி நடக்க வேணாமா எங்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கும்மா , நீங்க என்ன வேணும் சொல்லுங்க அளகா செஞ்சிடலாம்..

அப்படியா அப்போ இந்திய புராணங்களில் ஏதாவது ? என்றாள் சுபி

ராமாயணத்துல கணையாழிபடலம்,  சிவ தாண்டவம், திரௌபதி ருத்ரம் , ஹிரண்ய வதம், கிருஷ்ண-குசேல சந்திப்பு எல்லாமே கரகம் போட்டு பின்னி எடுத்துப்புடலாமுங்க. இந்த பாழாப்போன ஜனங்க கண்டதையும் கேக்கறங்க அதுனால நல்ல கரகபார்ட்டி களே  2-3   தான் இருக்குது அதுல நாங்க தான் இப்போதைக்கு நம்பர் 1 ங்க என்றான் செல்வகணேசன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் சுபி,   ம்ம்ம்  எது ரொம்ப கடினம்? -சுபி

சிவதாண்டவம்- செ . ,           சரி சிறப்பா செய்ய முடியுமா ?- சுபி.

மீனாச்சி ஆடிருச்சுன்னா யாருக்கும் குறையே இருக்காது, அது ஆடறேங்குது எல்லாம் கேட்டுட்டுதான் கூட்டிட்டு வந்திருக்கேன்-- செ .

மீனாட்சி ஆம் என்று தலை அசைத்தாள்.பிறகென்ன இனி குதிரை கோடி களில் புரளுமோ இல்லையோ கொடி கட்டி நிச்சசயம் பறக்கும்.. எப்போதும் எல்லா நிகழ்ச்சி நிரல்களுக்கும் தயாராக இருங்கள் மிக விரைவில் அழைப்பு வரும் என்று வாழ்த்தி அனுப்பினாள்சுபி

மறுநாள் மாலையே அழைப்பு விடுத்து முக்கிய தேவைகளுடன் திருச்சி விமான நிலையம் வரும்படி [காலை 10.00 மணிக்குள்] போனில் சொல்லி உடமைகளை நன்றாக பேக் செய்து கொண்டு வாருங்கள் இல்லையேல் விமானத்தில் அனுமதிக்க மாட்டார்கள் என்று எச்சரித்து [6 பேர் கொண்ட கரக பார்ட்டிக்கு டிக்கெட் கேட்டு வாங்கிவிட்டாள் . PMO  விலிருந்து ஏர் போர்ட் அதாரிட்டி க்கு தாக்கீது " அவர்கள் லக்கேஜ்  சரியாக வந்து சேர வேண்டும் நாளை வரும் என்றெல்லாம் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என்று ஆணித்தரமான உத்தரவு பிறப்பி க்கப்பட்டு ஏர்போர்ட் லக்கேஜ் பிரிவினர் மிக கவனமாக செயல் பட்டு கரக லக்கேஜ்  முதலில் வெளியே வந்தது டெல்லியில் .

தொடரும்   அன்பன்  ராமன்

2 comments:

  1. எங்கிட்ட கேட்டிருந்தா கரகாட்டக்காரி கோவை சரளாவை
    அனுப்பியிருப்பேனே.
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. அதனால்தான் உம்மிடம்கேட்கவில்லை.

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...