Thursday, February 2, 2023

VIBRANT REJUVENATION

VIBRANT REJUVENATION

புத்துணர்ச்சியின் குதூகலம்

சுபி குழுவினர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை உயர் அதிகாரிகள் உணவு இடை வேளைகளில் மறக்காமல் நினைவுகூர்ந்து வித்யாவின் பெருமையும் முக்கியத்துவமும் பன் மடங்கு உயர PMO அலுவலர்கள். அதிகாரிகள்  வித்யாவைப்பார்த்ததும் மிக உயரிய மரியாதை வழங்கத்துவங்கினர்.. இது ஒரு புறம் இருக்க , சுபி குழுவினர் ஊர் திரும்ப ஏற்பாடு ஆயிற்று. முதன் நாள் இரவில் Principal   Secretary  மிக விரிவாகப்பேசி , நிகழ்ச்சி நிரல் நிகழும் இடங்களுக்கு உங்கள் கலைஞர்களைநேரடியாக அனுப்பி, நீங்களும் வித்யா மேடமும் ஒருங்கிணை த்துத்தாருங்கள் வாழ்த்துக்கள் என்று விடை பெற்றார். காலையில் அந்தக்குளிரிலும் வித்யா இவர்களை வழி அனுப்ப வந்ததில் சுபி குழுவினர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். .மதியம் 2-00 மணி அளவில் திருச்சி வந்தடைந்தனர். சிறிது நேர ஓய்விற்கு பின் சமயபுரம் அம்மனைக்காண சுபத்ரா சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்வித்து மிகுந்த நிம்மதியுடன் வீட்டிற்கு வந்தாள். மணி 5.30. மாலை ராமசாமியின் இல்லம் நோக்கி விரைந்தாள்.  Principal   Secretary நெறைய சொல்லி இருக்கார் போலிருக்கே என்றார் ராமசாமி. குதிரைக்கு மயக்கமே வந்துவிடும் போல ஒரு பட படப்பு. .. இவர் சாதா  கழுகு இல்ல சூப்பர் கழுகு என்று வியந்தாள்.

வித்யா மேடம் பேசினா ங்களா ?என்று கேட்டாள் சுபி . இல்லையே என்றார் ராமசாமி . ஐயோ PRINCIPAL  SECRETARY என்னிடம் பேசியது இவருக்கு எப்படித்தெரியும்? இவர் வேற லெவல் நெட் ஒர்க் வெச்சிருப்பார் போலிருக்கே என்று நடுங்கிப்போய் விட்டாள்  சுபி . அது வேறு ரூட் -இப்போது நமக்கு தேவை இல்லை. ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன என்ற திருப்பாவைப்பாசுரம் போல ஞாலத்தை நடுங்கவைப்பதில் ராமசாமி மகா  எத்தன் . குதிரையும் குருவியும் ராமசாமிக்கு எம்மாத்திரம்.?

உனக்கொரு விஷயம் தெரியுமா ? நம்ம கஸ்தூரிரெங்கனுக்கு அடுத்த வாரம் சென்னையில பரிட்சை வேலைக்கு போக நடத்தப்படும் எழுத்து பரிசோதனை. அவன் என்னடான்னா டிக்கட் வாங்கணுமே என்று முழிக்கிறான். நான் ஓர் ஐடியா வெச்சிருக்கேன் சூப்பரா ஏற்பாடு பண்ணப்போறேன்.என்று பிடி விடாமல் பேசி கழுகு லேசுப்பட்ட ஆள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்தார் ராமசாமி./ மள மள வென்று ஒன்று விடாமல் சொல்லி , லேசரின் மகோன்னதம் மிகப்பெரியது ,அவள் கட்டளைக்கு ஒரு கூட்டமே செயல் படுகிறது என்று சொல்லி. மேடம் எங்களுக்கு ஒரு டிரைவர் ஏற்பாடு செய்திருந்தார்-தமிழ்க்காரர் என்று முடிக்குமுன், தெரியுமே வேலுச்சாமி தானே என்று அடுத்த குண்டை வீசினார் கழுகு. ஐயய்யோ இவர் WHITE HOUSE கூட ஆள் வெச்சிருப்பார் போலிருக்கே , மாரியம்மா எங்களைக்காப்பாற்று என்று உள்ளூர வேண்டினாள் கண்களை மூடி.

என்ன பிரார்த்தனை? -மாரியம்மாவிடமா என்றார் ராமசாமி. இந்த ஆளுக்கு உளவே தேவையில்லை மனக்கண் லேயே எல்லாம் தூண்டித்துருவி பாத்துடறாரே என்று பேசாமடந்தை ஆனாள் , சுபி

கோயிலிலிருந்து திரும்பிய அம்ஜம் , வந்துட்டியா எல்லாம் நல்லபடியா நடந்ததா என்றாள் மீண்டும் ஒரு பாட்டம் அனைத்தையும் தெரிவிக்க அம்ஜம் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது ராமசாமி சட்டையை கழற்ற உள்ளே போனதும் இது தான் சமயம் என்று, “நெறையா அலைஞ்சுட்டு வந்திருக்க கிளம்பு போய் ரெஸ்ட் எடு. இங்க இருந்தா டெல்லிலிருக்கற பெண்கள் யார் யார் , பெயர்  அட்ரஸ், போன் நம்பர்னு உன்னை படுத்துவார், தப்பிச்சுப்போ என்று அனுப்பி வைத்தாள் அம்ஜம் .

திரும்பி வந்த ராமசாமிஅவள நைசா அனுப்பிட்டியாக்கும் -நான் ஏதாவது கேப்பேன்னு . உங்களுக்கு அவ்வளவு தான் யோசிக்கத்தெரியும் , இவ  சொல்லாமலே எல்லாத்தையும் கண்டுபிடுச்சுடுவேன். நீ CBI னு சொல்லிக்கற உனக்கு ஒண்ணும் கண்டுபிடிக்கத்தெரியாது;சும்மா டகல் பாச்சா விடறயா என்று மிரட்டி அம்ஜம் மிரண்டுதான் போனாள் . எனக்கு என்ன ஆகணும் நீங்களாச்சு உங்க குதிரை ஆச்சு ஆளை விடுங்கோ என்று நழுவினாள்

மறுநாள் சுபி போனில் எல்லா விவரமும் ராமசாமியிடம் கோர்வையாக சொல்லிவிட்டாள். ராமசாமியின் தயவு எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்று நன்கறிவாள் சுபி.

தொடரும்       அன்பன்  ராமன் 

1 comment:

  1. சமயபுரம் மாரியம்மன் அருள்சுபிக்கு கிடைக்க ட்டும்
    ஞாலத்தையெல்லாம் நடுங்க வைக்கும் ராமசாமிக்கு வாழ்த்துக்கள்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...