Understanding musical frames-3
Squeezing life is MSV’S
NOTE
இசையின் வடிவ
அமைப்பை
புரிந்துகொள்ள
-ஊனை உருக்கும் இசைக்குறியீடுகள்
-3
'என்னை
எடுத்து
தன்னைக்கொடுத்து
"என்னை எடுத்து தன்னைக்கொடுத்து " பாடலை QFR வடிவம், திரை வடிவம் ஆகிய இரு அமைப்புகளிலும் கேட்டதில் சில உண்மைகள் புரிந்திருக்கும். அதாவது இசை என்னும் கருவிகளின் கூட்டியக்கம் பாடலை எவ்வாறு உயர்த்துகிறது என்ற ஒரு அடிப்படை உண்மை தெளிவு பெறும் .
இவ்வளவு தான் பாடலின் நுணுக்கங்களா என்றால் நிச்சயம் இல்லை. எழுத்தில் அடங்காதது அதிலும் என் போன்ற இசை அறிவும் விளக்கும் வித்தகமும் குன்றிய நபர்களுக்கு திரைப்பாடலை முற்றாக விளங்கவைப்பது எல்லை மீறிய செயல் என்பதை நன்கறிவேன். எனினும் அவைகளில் பொதிந்துள்ள முக்கியமான அடிப்படை அம்சங்கள், குரல் வளம் உச்சரிப்பில் தோன்றும் பாவ வேறுபாடு உணர்வின் வெளிப்பாடு போன்ற மனநிலை பிரதிபலிப்புகள் அவற்றின் மேன்மைகளை/ மென்மைகளை இசை அமைப்பாளர் கட்டமைக்கும் சாதுர்யங்கள் என்ற அமைப்பு ரீதியான வலிமைகளை சரியாக புரிந்துகொண்டாலே பாடலின் உண்மையான மகத்துவம் புலப்படும்.
இவற்றை எழுதி விளக்குவதை விட 'டெமோ'[demo] எனும் நேரடி செயல் விளக்கம் அமைந்தால் 'பாடலை உணர்வோம்' என்ற தலைப்பின் நோக்கம் இலக்கை எட்டும்.
அவ்வகையில் திரு அனந்து
அவர்களின் "என்னை எடுத்து தன்னைக்கொடுத்து " பாடலின் அற்புத விளக்கம் கிடைத்தது. அதில் அவர் பாடலின் சிறப்புகளை பலவேறு கோணங்களில் 'பாவ”. வெளிப்பாடு குறித்து அற்புதமாக விளக்குகிறார்.
அதிலும் பாடும் முறையில் திரு எம் எஸ் வி கையாண்டுள்ள சிறுசிறு நுணுக்கங்கள் மற்றும்
' 'போனவன் போனாண்டி ' வந்தாலும் வருவாண்டி "இரண்டு ' சொற்றொடர்களில் அமைத்துள்ள ஊனை உருக்கும் குழைவுகளையும், திரு எம் எஸ் வி அவர்களே அசரீரிக்குரலாக கடற்கரையில் காற்றில் கலந்து பரவும் ஓ ஒ ஓ ஓ என்ற உள்மன ஓலம் விளைவிக்கும் தாக்கம் குறித்த வலுவான விளக்கம் தந்துள்ளார் பாடலில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய பண்புகள் இத்துணை [62] ஆண்டுகள் கடந்தும் இன்னும் பொக்கிஷமாய் புதைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டும் விளக்கம்.
இந்த எம் எஸ் வி ஒரு அசகாயன் . வேறெவரும் தொடாத 'ஹோய்' என்ற ஒரு குறியீட்டை வலுவாக காதல், ஊடல், கிண்டல் பாடல்களில் வைத்து புதிய பரிமாணம் காட்டியவர் இந்த சோக கீதத்திலும் அதே 'ஹோய்' என்ற ஒலியை படரவிட்டுள்ளார். ஆனால் எவ்வளவு சோகம் இழைகிறது இந்த 'ஹோய்' ஒலியில் பேதமில்லாத ஒலியில் எப்படி மாறுபட்ட உணர்வுகளை 'ஹோய்' மூலம் சொல்லுகிறார் மெல்லிசை மன்னர். ஒரே சொல்லை மாறுபட்ட உணர்வுகளுக்கு கையாளும் வித்தகம் என்னென்பது?
பாடல்களில் உணர்ச்சியை கொட்டி ஊன் உருக்கும் வித்தகர் எம் எஸ் வி ஒருவரே; இதை நான் சொல்லவில்லை அவருடன் நெடிய பயணத்தில் இணைந்த திரு அனந்து அவர்கள் அடித்துச்சொல்லுகிறார் கேளுங்கள் .
இப்பாடல் பதிவை குறித்து திரு லக்ஷ்மணன் செட்டியார் [தமிழ் இசை சங்க அமைப்பு/ கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை நிர்வாகி ] கூறியது என் மனதில் நிழலாடுகிறது.
"இப்பாடலை திரு எம் எஸ் வி அவர்கள் ஒத்திகை செய்யும் போது அவர் வெளிப்படுத்திய சோகம் இவர் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதோ என்னும் அளவுக்கு பெரும் தாக்கம் உண்டாக்கியது "என நினைவுகூர்ந்தார். இதை 62-63 ஆண்டுகள் முன்னம் கேட்டவரின் மனம் இன்றும் அதை உணர்ந்து பேசுகிறதென்றால் நிஜ நிகழ்வு எவ்வளவு ஆழமும் உணர்ச்சியும் கலந்த பிழம்பாக இருந்திருக்கும்?
ஒரு பாடலை மூன்றாக பிரித்தால் என்ன முன்னூறாகப்பிளந்தால் என்ன ? எங்களுக்கு சுபஸ்ரீ சொல்வதும் நித்யஸ்ரீ பாடுவதும் தான் முக்கியம் என்பதாக வாசகர் போக்கு அமைந்துள்ளதை இந்த ஒரு பாடல் தெளிவு படுத்தியுள்ளது.
இந்த ஒரு பாடலுக்கு நான் செலவிட்ட நேரத்தை , தூங்கியே கழித்திருந்தால் ஓய்வேனும் கிடைத்திருக்கும். நீ என்ன எழுதினால் எங்களுக்கு என்ன ஆயிற்று? உனக்கென்ன நாங்கள் பாடலை கேட்போம் நடிகனை நடிகையை எண்ணி மகிழ்வோம். இசையாவது , பசையாவது, போய்யா உமக்கு வேறு வேலை இல்லை வாராவாரம் கழுத்தை அறுக்க வந்து விடுகிறீர் என்று சிலர் புலம்புவதை அறிவேன்.
எழுதி விட்டு அங்கலாய்ப்பதை விட எழுதாமல் இருந்தால் என்ன குடி முழுகி போய்விடுமா என்ன?
நம்மவர்க்கு பாடல் தான் வேண்டும்.
எனவே இந்த வகை அலசல்களை நிறுத்தி விட்டு வெறும் பாடலை மட்டும் ஏதோ 2 பாடல்கள் அதுவும் ஆடியோ மட்டும் பதிவிட்டால் போதுமே. வாரம் இரண்டு ஆடியோ பாடல்களுக்கு நேரம் செலவழித்தால் போதும். வெகுவிரைவில் 'பாடலை உணர்வோம்' பகுதிக்கு முழுக்கு போடப்படும். அதன் பின்னர் ஆடியோ பாடலை அவரவர் வழியில் உணருங்கள். இனிமேலும் பாடலை ஆய்வு செய்ய அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. எனவே காணொளிக்கு பதில் காதொலி செயல்பாட்டிற்கு வரும்.
பாடலுக்கான இணைப்புகள் இதோ கவனமாக பின்பற்றிக்கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=-UQTttNGSVo&list=RD-UQTttNGSVo&start_radio=1 ANANTHU’S EXPOSITION
https://www.youtube.com/watch?v=H32jvCQlwnA&list=RDH32jvCQlwnA&start_radio=1
Jayasri-Ananthu on stage [Lakshmanan
chettiyar seated ]
நன்றி அன்பன் ம வ
No comments:
Post a Comment