Wednesday, March 29, 2023

CHELLADURAI

 CHELLADURAI

செல்லத்துரை

கும்புர்றேன் அய்யா என்று குரல் கேட்டு திரும்பினார் ராமசாமி . என்னய்யா என்றார் ரா சா . அய்யாவை வீட்டுல பாத்து காயிதம் கொடுத்தேனுங்க அந்த செல்லத்துரை ங்க என்றார்  வந்தவர். . இங்க வந்திருக்கீங்களே என்ன விஷயம் என்றார்  ராமசாமி. நமக்கு இங்கன செக்சன் என்ஜினீயர் ஆபீஸ்ல கீ மேன் உத்தியோகம் அதான் பார்க்க வந்தேன் என்றார் செல்லத்துரை. என் பையன் கீரனூருல படிக்கிறான். ஒளுங்கா வே படிக்காம கண்ட பயகளோட சுத்திக்கிட்டு படிப்புல கவனமே இல்லீங்க . இனியெல்லாம் படிக்கலைன்னா எதுவும் செய்ய முடியாதுங்க . ஏதோ நாங்க அதிகரிகள்ட்ட நல்லா நடந்து கவுரதையா ரயில் வே ல சம்பளம் வாங்குறோம், பின்னாடி பென்ஜின் வரும் .இவனுகள நெனச்சா பயமா இருக்குது . அது தான் இங்கன நல்ல எடத்துல சேக்காலாமான்னு உங்கள பாக்க வந்தேன் .

அவன் தினம் இங்க வரணுமே என்றார் ரா . சா , நானே கூட்டிக்கிட்டு வந்துருவேன் என்றார் செல்லத்துரை.

சரி வாங்க என்று நேரே கேப்ரியல் செக்ஷனுக்கு விரைந்தனர். வாங்கோ ராம் சாமி உக்காருங்கோ என்று ஓரிடம் காட்டி அமரச்சொன்னார் கேப்ரியல்.    சார் ஒரு கிளாரிஃபிகேஷன் என்றார் ராமசாமி . சொல்ங்கோ என்றார் கேப்ரியல் . உங்க சிஸ்டர் இன் லா தானே ரயில்வே ஸ்கூல் HM .

ஆம்ம்மா , அவ ரொம்ப கண்ட்ரோல் பண்வா ஒல் ங்கா படிக்காட்டி அடி பிச்சிடுவா , ஏன் கேக்கிறீங்கோ என்றார் கேப்ரியல் . ஒரு சீட் வேணும் -ரா சா

உடனே போன் போட்டு ஹலோ வயோலா , கேப்ரியல் HERE , ஒரு அட்மிஷன் வேணும்

மறு  முனையில் எந்த க்ளாஸ்?  5 விரல் காட்டினார் ராமசாமி

FORM இப்போ தரேன் .சீட் ஜூன் லே கெடிக்கும் என்றாள்  வயோலா , நானே செஞ்சு தரேன் என்றாள்  வயோலா

சரி நாள்கீ வாங்கோ FORM கொண்டாறேன் என்றார் கேப்ரியல்.

அய்யா பணம் எவ்வளவு என்றார் செல்லத்துரை . இதுலாம் பிரீ மேன் . அட்மிஷன் FEE 15/-ரூபாவோ இன்னாவோ அல்லாம் ரயில்வே  தருது . ஒல்ங்கா படிக்காட்டி வயோலா கைலே அடி வாங்கி சாவணும் பையன்கிட்டே சொல்ங்கோ என்றார் கேப்ரியல். இருவரையும் கால் தொட்டு வணங்கினார் செல்லத்துரை.   நாள்கீ வாங்கோ பாக்கலாம் என்று அனுப்பி வைத்தார் கேப்ரியல்

தொடரும்   அன்பன் ராமன்

1 comment:

  1. ஒலுங்கா படிக்காட்டி வாயாலோ கையாலோ வாத்தி அடிச்சா இப்பல்லாம்
    வாத்தி வேலை காலி
    வெங்கட்ராமன்

    ReplyDelete

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...